MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • குரு புதன் உருவாக்கும் நவபஞ்சம யோகம்.! 7 நாட்களில் 5 ராசிகளின் செல்வமும், கௌரவமும் இரட்டிப்பாகும்.!

குரு புதன் உருவாக்கும் நவபஞ்சம யோகம்.! 7 நாட்களில் 5 ராசிகளின் செல்வமும், கௌரவமும் இரட்டிப்பாகும்.!

Navpancham Yog April 2026 Lucky Zodiac Signs : ஏப்ரல் 3, 2026 அன்று, புதனும் வியாழனும் ஒன்றுக்கொன்று 120 டிகிரி கோணத்தில் அமர்கின்றன. இந்த இரண்டு கிரகங்களின் நிலையால் 'நவபஞ்சம யோகம்' உருவாகிறது.

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 26 2026, 11:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Navpancham Yog April 2026 Lucky Zodiac Signs
Image Credit : Asianet News

Navpancham Yog April 2026 Lucky Zodiac Signs

வேத ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. அப்போது அவை பிற கிரகங்களுடன் இணைந்தோ அல்லது பிற கிரகங்களுடன் சிறப்பு கோணத்தில் அமைந்தோ சுப யோகங்களை உருவாக்கும். அந்த வகையில் ஏப்ரல் 3, 2026 புதன் மற்றும் குரு பகவான் ஒருவருக்கொருவர் 120 டிகிரி கோணத்தில் அமைந்து நவபஞ்சம யோகத்தை உருவாக்குகின்றனர். இது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்க இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

26
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசிக்காரங்களுக்கு இந்த யோகம் தொழில் வாழ்க்கையில் புதிய உயரங்களைத் தரும். பதவி உயர்வு அல்லது புதிய வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு, ஏப்ரல் 3 ஆம் தேதிக்குப் பிறகு ஆசைகள் நிறைவேறும். தொழிலில் புதிய முதலீடுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். இதன் காரணமாக லாபம் அதிகரிக்கும்.

Related Articles

Related image1
மேஷ ராசியில் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்.! தொடர் வெற்றிகளை குவிக்கப்போகும் ராசிகளின் பட்டியல்.! உங்க ராசி இருக்கா?
Related image2
Rama Navami : ராமருக்கு பிடித்த 6 ராசிகள்.! ராம நவமிக்குப் பின் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்.!
36
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

மிதுன ராசியின் அதிபதி புதன் கிரகம். இதனால் இந்த சேர்க்கையால் மிதுன ராசியினர் நேரடிப் பலன்களைப் பெற உள்ளனர். புதனின் செல்வாக்கால் பேச்சில் இனிமை கூடும். இதனால் முக்கியமான தொழில் ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீர்ந்து, பண லாபம் கிடைக்கும்.

46
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

குரு மற்றும் புதன் பகவான் அருளால், சமூகத்தில் உங்க செல்வாக்கு அதிகரிக்கும். கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு இது ஒரு பொன்னான காலமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் ஆளுமைத்திறன் உச்சத்தில் இருக்கும். இது உங்களுக்கு சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். நிதி நிலைமை மேம்படும்.

56
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

துலாம் ராசிக்காரங்களுக்கு நவபஞ்சம யோகம் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வரும். திருமணம் தாமதமாகி வருபவர்களுக்கு, நல்ல வரன் வரலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பிசினஸ் விரிவடையும். வேலையிலும் முன்னேற்றம் வர வாய்ப்புள்ளது.

66
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

தனுசு ராசியை குரு பகவான் ஆள்கிறார். புதனுடனான இந்த நல்ல பார்வையால், நீங்க திட்டமிட்ட வேலைகள் எந்த தடையும் இல்லாமல் முடியும். நீண்ட தூரப் பயணங்கள் லாபகரமாக இருக்கும். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சில நல்ல செய்திகள் வரலாம். திருமண வாழ்க்கையில், உங்க துணையுடன் நல்ல உறவை வளர்த்துக்கொள்வீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rama Navami : ராமருக்கு பிடித்த 6 ராசிகள்.! ராம நவமிக்குப் பின் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்.!
Recommended image2
Today Rasi Palan : இன்று ராம நவமி (மார்ச் 26) 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப் போகிறது.? ராமரின் அருளைப் பெறப்போகும் அதிர்ஷ்ட ராசிகள் யார்?
Recommended image3
மீனத்தில் சஞ்சரிக்கும் சூரியன்: இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்! உயர் பதவி, திடீர் பணவரவு தேடி வரும்!
Related Stories
Recommended image1
மேஷ ராசியில் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்.! தொடர் வெற்றிகளை குவிக்கப்போகும் ராசிகளின் பட்டியல்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Rama Navami : ராமருக்கு பிடித்த 6 ராசிகள்.! ராம நவமிக்குப் பின் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved