MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • நவபஞ்சம ராஜயோகம் 2026: ஜூன் 25 முதல் 'இந்த' 3 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர்கள்! கடன் தீரும்; கஜானா நிரம்பும்!

நவபஞ்சம ராஜயோகம் 2026: ஜூன் 25 முதல் 'இந்த' 3 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர்கள்! கடன் தீரும்; கஜானா நிரம்பும்!

Navapanchama Rajayoga 2026: நவபஞ்சம ராஜயோகத்தால் ஜூன் 25ஆம் தேதி 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகுது. இந்த 3 ராசிகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar r
Published : May 31 2026, 12:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நவபஞ்சம ராஜயோகம் 2026
Image Credit : AI

நவபஞ்சம ராஜயோகம் 2026

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சிகளும், கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணையும் கூட்டணிகளும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பங்களை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், 2026 ஜூன் மாத இறுதியில் ஒரு அபூர்வ கிரக சேர்க்கை நிகழவுள்ளது.

அதாவது ஜூன் 25 அன்று, நவகிரகங்களில் நட்பு கிரகங்களாகக் கருதப்படும் சனியும் சுக்கிரனும் இணைந்து 'நவபஞ்சம ராஜயோகத்தை' உருவாக்கவுள்ளனர். கர்மவினை, உழைப்புக்கு அதிபதியான சனி பகவானும்; செல்வம், ஆடம்பரம், மகிழ்ச்சிக்கு அதிபதியான சுக்கிரனும் திரிகோண அமைப்பில் (5 மற்றும் 9-ஆம் வீடுகள்) இணைவது சில ராசிகளுக்கு அசுர வளர்ச்சியைத் தரப்போகிறது.

இந்த அதிர்ஷ்ட கூட்டணியால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் அந்த 3 ராசிகள் எவை என்று இந்த செய்தியில் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரிஷபம்
Image Credit : Pixabay

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன், தன் நட்பு கிரகமான சனியுடன் இணையும் இந்த காலம் உங்களுக்கு பொற்காலமாக அமையப்போகிறது.

உத்தியோகம்: பணியிடங்களில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டும், ஆதரவும் உங்களை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும்.

வியாபாரம்: தொழிலில் எதிர்பார்த்ததை விட லாபம் இரட்டிப்பாகும். புதிய ஒப்பந்தங்கள் தடையின்றி கை கூடி வரும். நீண்ட நாள் கனவான புதிய வாகனம் வாங்குவது, வீடு அல்லது சொத்து சேர்க்கை போன்ற சுப பலன்கள் தேடி வரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபமேற்றி, வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்து வர நன்மைகள் அதிகரிக்கும்.

Related Articles

Related image1
Astrology : குருவின் உச்சத்தால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 'அந்த' ராசி எது?
Related image2
Today Rasi Palan: இன்றைய ராசி பலன் - மேஷம் முதல் மீனம் வரை.! 12 ராசிகளுக்கான ஷர்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள்.!
35
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் 25-க்குப் பிறகு பொருளாதார ரீதியாகப் புதிய கதவுகள் திறக்கப் போகின்றன.

நிதி நிலை: புதிய வருமான வாய்ப்புகள் உருவாகி, உங்களின் பேங்க் பேலன்ஸ் உயரும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த கடன் தொல்லைகள் படிப்படியாகக் குறையும். பணியிடங்களில் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வுக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும்.

வெளிநாட்டு யோகம்: ஏற்றுமதி-இறக்குமதி அல்லது வெளிநாட்டுத் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு இந்த நவபஞ்சம யோகம் அசுர லாபத்தை தரும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஏழை எளியோருக்கோ அல்லது துப்புரவுப் பணியாளர்களுக்கோ உங்களால் இயன்ற உணவு அல்லது கருப்பு உளுந்து தானம் அளிப்பது சிறந்தது.

45
கன்னி
Image Credit : Pixabay

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் கடந்த சில காலமாக ச‌ந்தித்து வந்த நிதி நெருக்கடிகள் மற்றும் மன உளைச்சல்களுக்கு இந்த ராஜயோகம் முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது.

பணவரவு: எதிர்பாராத வழிகளில் இருந்து உங்களுக்குப் பண வரவு இருக்கும். யாரிடமாவது கொடுத்துவிட்டு திரும்ப வராது என்று நினைத்த பழைய பாக்கிகள் வசூலாகும். பல வழிகளில் இருந்தும் பணம் வந்து பையை நிரப்பும். உங்களின் கடின உழைப்பிற்குப் பணியிடத்தில் முழு பலன் கிடைக்கும். புதிய தொழில் அல்லது புதிய முதலீடுகளைத் தொடங்க நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலக்கட்டம் ஆகும்.

பரிகாரம்: தினமும் அல்லது புதன், சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயத்திற்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபட்டு வர, தடைகள் யாவும் தகர்க்கப்படும்.

55
பொறுப்பு துறப்பு
Image Credit : Asianet News

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology : குருவின் உச்சத்தால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 'அந்த' ராசி எது?
Recommended image2
Daily Horoscope: இன்று வைகாசி பௌர்ணமி.! 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
Recommended image3
Astrology: வானில் தோன்றும் அரிய 'ஸ்கார்பியோ ப்ளூ மூன்'.. அசுர வளர்ச்சியும் அதிர்ஷ்டமும் பெறப்போகும் 4 அதிர்ஷ்டசாலி ராசிகள்!
Related Stories
Recommended image1
Astrology : குருவின் உச்சத்தால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 'அந்த' ராசி எது?
Recommended image2
Today Rasi Palan: இன்றைய ராசி பலன் - மேஷம் முதல் மீனம் வரை.! 12 ராசிகளுக்கான ஷர்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved