- Home
- Astrology
- மேஷ ராசிக்கான செப்டம்பர் 2025 மாத ராசி பலன்கள் அண்ட் பரிகாரங்கள் – இந்த மாதம் சிம்பிளி சூப்பர்
மேஷ ராசிக்கான செப்டம்பர் 2025 மாத ராசி பலன்கள் அண்ட் பரிகாரங்கள் – இந்த மாதம் சிம்பிளி சூப்பர்
Mesha Rasi September 2025 Monthly Horoscope and remedies : 2025 ஆம் ஆண்டின் 9ஆவது மாதமான செப்டம்பர் மாதம் மேஷ ராசிக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷ ராசிக்கான செப்டம்பர் 2025 மாத ராசி பலன்கள் அண்ட் பரிகாரங்கள் – இந்த மாதம் சிம்பிளி சூப்பர்
Mesha Rasi September 2025 Monthly Horoscope and remedies : ஏழரை சனியின் பிடியில் இருக்கும் மேஷ ராசியினருக்கு 2025 செப்டம்பர் மாதத்திற்கான ராசி பலன்களை பற்றி இந்த தோகுப்பில் பார்க்கலாம். கிரக நிலைகளின் பெயர்ச்சிகள் அடிப்படையில் மேஷ ராசிக்கு இந்த செப்டம்பர் மாதம் சாதகமான பலனைத் தருமா என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். அதற்கு முன்னதாக கிரக நிலைகள் இருக்கும் இடங்கள்:
முக்கிய கிரகங்கள் இருக்கும் இடங்கள்: மேஷ ராசி செப்டம்பர் மாத பலன்
சனி: மாதத்தின் ஆரம்பம் முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். இதனால் செலவுகள் அதிகமாக இருக்கும். அத்துடன், வேலை தொடர்பான பயணங்களும் அதிகரிக்கும்.
சூரியன், புதன், கேது: இந்த மூன்று கிரகங்களும் மாதத் தொடக்கத்தில் ஐந்தாம் வீட்டில் ஒன்றாகச் சஞ்சரிக்கும். இது உங்களுக்கு உடல் நிலையில் பாதிப்புகளை ஏற்படுத்தக்க் கூடும். கவனமாக இருப்பது நல்லது. மேலும், செலவுகளும் அதிகரிக்கக்கூடும். அது மருத்துவ செலவாக கூட இருக்கலாம். சேமிப்பில் அக்கறை காட்டுவது நன்மை அளிக்கும்.
செவ்வாய்: உங்கள் ராசி அதிபதியான செவ்வாய், மாதத் தொடக்கத்தில் 6ஆம் வீட்டில் இருப்பார், பின்னர் 7ஆம் வீட்டிற்குப் பெயர்ச்சி அடைவார். இதனால் உடல்நலத்தில் சில குறைபாடுகள் ஏற்படக்கூடும். காதல் மற்றும் திருமண உறவுகளில் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளது.
ராகு: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டில் தொடர்ந்து சஞ்சரிப்பார்.
குரு: குரு பகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் இருப்பார். இது புதிய தொழில் கூட்டாண்மைகளுக்கும், வணிக ஒப்பந்தங்களுக்கும் சாதகமாக இருக்கும்.
முக்கிய அம்சங்கள் நிதி மற்றும் செலவுகள்:
பொதுவாக மேஷ ராசியினரைப் பொறுத்த வரையில் இந்த செப்டம்பர் மாதம் ஏற்றம் இறக்கம் நிறைந்த ஒரு மாதமாக இருக்கும். அதாவது சாதகமான பலனும், பாதகமான பலனும் கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சில சவால்களை எதிர்கொள்ளும் சூழல் உருவாவதோடு சில காரியங்களில் வெற்றியும் கிடைக்க பெறுவீர்கள்.
முக்கிய அம்சங்கள் நிதி மற்றும் செலவுகள்:
இந்த மாதம் செலவுகள் மிக அதிகமாக இருக்கும். பன்னிரண்டாம் வீட்டில் இருக்கும் சனியும், ஆறாம் வீட்டில் இருக்கும் செவ்வாயும் இந்தச் செலவுகளுக்குக் காரணமாக இருக்கலாம். வெளிநாட்டுப் பயணங்கள் மூலமும், வியாபாரம் மூலமும் செலவுகள் அதிகரிக்கும். இந்த மாதம் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
உடல்நலம்:
கிரகங்களின் பாதகமான நிலை காரணமாக உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். எந்த ஒரு பிரச்சனையையும் அலட்சியப்படுத்தாமல் இருப்பது நல்லது. உணவு கட்டுப்பாடு அவசியம். எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது நன்மை அளிக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
உழைக்கும் மக்களுக்கு வேலை சம்பந்தமாக அலைச்சல் அதிகமாக இருக்கும் மற்றும் வேலை அழுத்தமும் ஏற்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த மாதம் மிதமான பலனையே தரும். இருப்பினும், பத்தாம் வீட்டு அதிபதியான சனி பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால், வேலை தொடர்பாக நீண்ட பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.
குடும்பம் மற்றும் உறவுகள்
உறவுகள்:
காதல் உறவுகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். செவ்வாய் ஏழாவது வீட்டிற்குள் நுழைவதால், தேவையற்ற வாக்குவாதங்கள் வரக்கூடும். திருமணமானவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் சில பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை அளிக்கும். காதலிக்கும் ஜோடிகள் புரிந்து கொண்டு நடப்பது பிரிவை தடுக்கும்.
குடும்பம்:
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்திற்காக நேரத்தை செலவிடுவீர்கள். குழந்தைகளுடன் வெளியில் சென்று வரும் சூழல் உருவாகும். சில நேரங்களில் குழந்தைகளுக்காக செலவுகள் செய்வீர்கள்.