MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • புதன் பெயர்ச்சி 2026: அடிமேல் அடி வாங்கப்போகும் 3 ராசிகள்! தப்பிக்க எளிய பரிகாரங்கள் இதோ!

புதன் பெயர்ச்சி 2026: அடிமேல் அடி வாங்கப்போகும் 3 ராசிகள்! தப்பிக்க எளிய பரிகாரங்கள் இதோ!

Mercury Transit 2026: ஜோதிட சாஸ்திரங்களின்படி புதன் பகவான் ரிஷப ராசிக்குள் நுழைவதால் 3 ராசிக்காரர்களுக்கு சோதனை காலம் காத்திருக்கிறது. அவை என்னென்ன ராசிகள்? இதில் இருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : May 16 2026, 11:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
புதன் பெயர்ச்சி 2026
Image Credit : AI

புதன் பெயர்ச்சி 2026

ஜோதிட சாஸ்திரங்களின்படி நவகிரகங்கள் அனைத்தும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். அந்த வகையில், கிரகங்களின் 'இளவரசன்' மற்றும் 'புத்தி காரகன்' என்றும் அழைக்கப்படும் புதன் பகவான், இப்போது தனது மேஷ ராசிப் பயணத்தை முடித்துக் கொண்டு, சுக்கிரனின் சொந்த வீடான ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.

மங்களகரமான இந்த கிரக மாற்றம் ஒட்டுமொத்த ராசி மண்டலத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழியும். அதே வேளையில் சில ராசியினர் தங்களின் தொழில், குடும்பம் மற்றும் ஆரோக்கியத்தில் கடுமையான சவால்களையும், தடைகளையும் சந்திக்க நேரிடும். புதனின் இடமாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

இந்த புதன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சிறிது சோதனையான கால கட்டமாக அமையப் போகிறது. தேவையற்ற அலைச்சல்களும், விரயச் செலவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கடினமான நேரத்தில் உங்கள் பேச்சில் நிதானம் மிக அவசியம் ஆகும். கோபமான வார்த்தைகளால் குடும்பத்தினர் அல்லது அலுவலகத்தில் உள்ளவர்களுடன் வீண் விவாதங்கள் வரலாம். ஆகவே தேவையற்ற பேச்சுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் பண இழப்பு, திருட்டு பயம் அல்லது நெருப்பு சம்பந்தப்பட்ட விபத்துகளில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளதால், பயணங்களின் போது கூடுதல் விழிப்புணர்வாக இருங்கள். புதிய தொழிலில் முதலீடு செய்வதையோ அல்லது யாருக்கும் கடன் கொடுப்பதையோ முற்றிலும் தவிருங்கள். நண்பர்களிடம் ஈகோ காட்டாமல் பழகுவது உறவை பலப்படுத்தும்.

பரிகாரம்: புதன்கிழமைதோறும் பெருமாள் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உங்களால் இயன்ற பண உதவியோ அல்லது நோட்டுப் புத்தகங்களையோ தானமாக வழங்குங்கள். சோதனைகள் கணிசமாக குறையும்.

Related Articles

Related image1
Astrology: எப்போதும் அன்பாக இருக்கும் 3 ராசி பெண்கள்.! என்ன செய்தாலும் கோவமே வராதாம் இவர்களுக்கு.!
Related image2
Zodiac Signs: இந்த 5 ராசிக்காரங்க எவ்வளவு செலவு செஞ்சாலும் பணம் சேந்துட்டே இருக்கும்.! உங்க ராசி இருக்கா?
34
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

துலாம் ராசி நேயர்களே... இந்த புதன் மாற்றம் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களையும், சவால்களையும் கொண்டு வர வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். தோல் ஒவ்வாமை, அலர்ஜி போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும். வரவை விட செலவுகளும், தேவையற்ற பயணங்களும் ஏற்படக்கூடும். தொழிலில் கடினமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்கள் கிடைப்பது தள்ளிப்போகலாம். பணியிடங்களில் பதவி உயர்வில் தாமதம் ஏற்படும். யாரிடமும் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது.

பரிகாரம்: தினமும் 'ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்' கேட்பது நன்மை பயக்கும். புதன்கிழமை அன்று பசு மாட்டிற்குப் பச்சைப் புல் அல்லது அகத்திக் கீரை கொடுப்பது உங்கள் தடைகளை தூள் தூளாக்கும்.

44
கும்பம்
Image Credit : Google

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி ஏற்ற இறக்கங்கள் நிறைந்த கலவையான பலன்களை கொடுக்க போகிறது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளும், மனக்கசப்புகளும் வந்து போக வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் புரிதல் குறைந்து, வீண் சந்தேகங்கள் வரலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்லுங்கள். மாணவர்களுக்குப் படிப்பில் கவனம் சிதறக்கூடும். கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற முடியும். வெளிநாடு தொடர்பான வேலைகள் அல்லது ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் விழிப்புடன் இருப்பது மிகவும் நல்லது. வாகனங்களை ஓட்டும்போது மிகுந்த கவனமுடன் இருங்கள். தொலைதூர பயணங்களை திட்டமிடும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள்.

பரிகாரம்: புதன்கிழமை அன்று விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபடுங்கள். புதன் பகவானின் காயத்ரி மந்திரத்தை 21 முறை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: சனி பகவான் அருள் கிடைத்தாச்சு..! இந்த 4 ராசிகளுக்கு பணமும் புகழும் சேரப்போகுது..!
Recommended image2
Gaja Kesari Rajyoga: கஜகேசரி ராஜயோகம்: 2026-ல் மாறும் 4 ராசிகளின் தலைவிதி! முழு லிஸ்ட் இதோ
Recommended image3
Shani Jayanti 2026: 13 வருடங்களுக்குப் பின் சனிக்கிழமை நாளில் வரும் சனி ஜெயந்தி.! சனியின் அருளைப் பெறும் 3 ராசிகள்.! ராஜயோகம் கிடைக்கும்.!
Related Stories
Recommended image1
Astrology: எப்போதும் அன்பாக இருக்கும் 3 ராசி பெண்கள்.! என்ன செய்தாலும் கோவமே வராதாம் இவர்களுக்கு.!
Recommended image2
Zodiac Signs: இந்த 5 ராசிக்காரங்க எவ்வளவு செலவு செஞ்சாலும் பணம் சேந்துட்டே இருக்கும்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved