- Home
- Astrology
- Zodiac Signs: புதிய வழியை காட்டும் புதன் .! இனி இந்த ராசிகள் வாழ்வில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்.! குடிசைகள் கோபுரமாகும்.!
Zodiac Signs: புதிய வழியை காட்டும் புதன் .! இனி இந்த ராசிகள் வாழ்வில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்.! குடிசைகள் கோபுரமாகும்.!
புதன் பெயர்ச்சி, சில ராசிகளுக்கு அறிவையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தரப்போகிறது. இந்த பெயர்ச்சியால் மிதுனம், கன்னி, மகரம், மற்றும் ரிஷபம் ஆகிய ராசியினரின் வாழ்வில் தொழில், செல்வம் என பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.

அறிவின் கதவுகள் திறக்கும் தருணம்
ஜோதிட ரீதியில் புதன் பகவான் அருள் இருந்தால் எல்லா வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சுக்கிரன் மற்றும் குருவின் அருள் கிடைக்காமல் இருந்தால் கூட புதன் பார்வை சாதகமாக இருந்தால் ஒரு ஜாதகருக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டிக்கொண்டே இருக்குமாம். திருமணம், தொழில், வியாபாரம் உள்ளிட்ட எல்லாமும் பிடித்தது போல் நடக்குமாம்.
புதன் பகவான் என்பது ஜோதிடத்தில் அறிவு, புத்திசாலித்தனம், வாணிப திறன், பேச்சுத் திறன், கல்வி, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை வழங்கும் முக்கிய கிரகமாகக் கருதப்படுகிறார். இவர் ஒரு மனிதனின் வாழ்க்கையில் வாக்காற்றல், வணிக அறிவு, உறவு நலம், தொழில் முன்னேற்றம் போன்ற பல துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துபவர். இப்போது அக்டோபர் 9ஆம் தேதி 2025, புதன் தனது பெயர்ச்சியை மேற்கொண்டு, சில ராசிகளுக்கு அற்புதமான மாற்றத்தை தரப்போகிறார்.
புதன் மாறும்போது, அது ஒரு சாதாரண மாற்றமல்ல — அறிவின் கதவுகள் திறக்கும் தருணம் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பெயர்ச்சி சிலரின் வாழ்க்கையில் புதிதாக எழுச்சி தரும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த அதிர்ஷ்டம், இப்போது அவர்களை தேடி வரும்!
மிதுனம் (Gemini) - திடீர் பணவரவு, சம்பள உயர்வு, பதவி உயர்வு!
இதுநாள் வரையில் சோர்வாக காணப்பட்ட மிதுன ராசியினர் தற்போது முழவீச்சில் ராக்கெட் வேகத்தில் பாயப்போகிறார்கள். இனி இவர்களுக்கு உழைப்புக்கு அதிகமாகவே பலன் கிடைக்குமாம்.
மிதுன ராசி ஆதிக்க கிரகம் புதன் என்பதால், இந்த பெயர்ச்சி உங்களுக்கே ராஜயோகம் போன்றது! உங்கள் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பெருகும். தொழிலில் புதிய வாய்ப்பு, வணிகத்தில் விரிவாக்கம் போன்றவை கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, வெளிநாட்டு தொடர்புகள் வலுவாகும்.
கல்வி துறையில் சிறந்து விளங்குவீர்கள். குடும்பத்திலும் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். திடீர் பணவரவு, சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியன உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மன உறுதி, புத்திசாலித்தனம் ஆகியவை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை வழிபட வேண்டிய தெய்வம்: விஷ்ணு பகவான் பரிகாரம்: புதன் கிழமையில் குழந்தைகளுக்கு புத்தகங்கள் அல்லது பேனாக்கள் வழங்கவும்.
கன்னி (Virgo) - தடைகள் நீங்கும்! புது திட்டங்கள் வெற்றி பெறும்!
எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படும் கன்னி ராசிக்கு இனிமேல் உக்காரவே நேரம் இருக்காது. தொழில், குடும்பம், சந்தோஷம், முதலீடு, லாபம் என்ற வார்த்தைகளை அவர்கள் தினமும் உச்சரிக்கும் நிலை ஏற்படும். கன்னி ராசி புதனின் சொந்த ராசி என்பதால இந்த பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையின் வெற்றிக் கதவுகளைத் திறக்கும்! பணிநிலையிலும், வியாபாரத்திலும் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாட்டில் இருந்து வருமான வாய்ப்பு கிடைக்கும்.
தொழில் துறையில் இருந்த தடைகள் நீங்கும். புது திட்டங்கள் வெற்றி பெறும். நீண்ட காலமாக காத்திருந்த சொத்து பிரச்சினைகள் தீர்க்கப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை நிலவும். கல்வியில் சிறந்த மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: மரகத பச்சை வழிபட வேண்டிய தெய்வம்: பச்சைபழனி முருகன் பரிகாரம்: புதன் கிழமையில் பச்சை நிற உடை அணிந்து “ஓம் புத்தாய நம:” என 108 முறை ஜெபிக்கவும்.
மகரம் (Capricorn) - நல்ல நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடக்கும்
மகர ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி வளர்ச்சிக்கான பொன் வாசற்கதவை திறந்து வைக்கும். தொழிலில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். பணியில் உயர்வு, வணிகத்தில் லாபம், கல்வியில் முன்னேற்றம் போன்ற பல நல்ல நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடக்கும்.
சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். தம்பதியிடையே இருந்த சிறிய கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படும். புதிய நட்பு உறவுகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி சேர்க்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை வழிபட வேண்டிய தெய்வம்: தாயுமானவர் பரிகாரம்: புதன் கிழமையில் துளசி மாலை அணிந்து, பச்சை கடலை நிவேத்யம் செய்யவும்.
ரிஷபம் (Taurus) - எதிர்பாராத லாபம் கிடைக்கும்
இந்த பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பணப்பெருக்கும். லாபத்தை அள்ளிக்கொடுக்கும். பெருமை, புகழ் ஆகியவற்றைத் தரும் என்பதால் மகிழ்ச்சி பல மடங்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். தடைப்பட்ட பணிகள் நிறைவேறும்.
பணக்தட்டுப்பாடுகள் குறையும். சிலருக்கு திருமண நிச்சயதார்த்தம், பிள்ளை பாக்கியம் கிடைக்கும். புதன் பெயர்ச்சியால் உங்கள் பேச்சு பலம் பெறும். உங்கள் சொற்கள் மற்றவர்களை ஈர்க்கும். இதனால் உங்களுக்கு சமூகப் புகழும் உயர்வும் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: லைட் கிரீன் வழிபட வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி பரிகாரம்: புதன் கிழமையில் பச்சை நிற ஆடை அணிந்து, துளசியுடன் நெய்வேத்யம் செய்து வழிபடவும்.
பரிகாரங்கள் அனைத்திற்கும் பொதுவாக
குடிசையில் இருந்தவர்களையும், கோபுரத்திற்கே உயர்த்தும் புதன் அருள் விரைவில் வெளிப்படப்போகிறது. அறிவும் அதிர்ஷ்டமும் கைகோர்க்கும் இந்த காலத்தில், உழைப்புடன் இணைந்து முன்னேறினால், வாழ்க்கை முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்
- புதன் பகவானுக்கு பச்சை நிற பூக்கள், பச்சை கடலை, துளசி வழங்கவும்.
- “ஓம் புத்தாய நம:” மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிக்கவும்.
- புதன் கிழமையில் கல்வி உதவி, புத்தகம், பேனா போன்றவை வழங்குவது நன்மை தரும்.
- துளசி செடியை வீட்டில் வளர்த்தால் அறிவு, ஆரோக்கியம், செல்வம் ஆகியவை பெருகும்.