MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Mercury Retrograde: புதன் வக்ரத்தால் ஜொலிக்கப் போகும் 4 ராசிகள்! பண மழை கொட்டப் போகுது!

Mercury Retrograde: புதன் வக்ரத்தால் ஜொலிக்கப் போகும் 4 ராசிகள்! பண மழை கொட்டப் போகுது!

Mercury Retrograde: துலாம் ராசியில் புதன் வக்ரத்தால் 4 ராசிகளுக்கு தொழில் மற்றும் வணிகத்தில் மகத்தான முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 09 2026, 07:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
புதனின் வக்ரப் பெயர்ச்சி
Image Credit : AI

புதனின் வக்ரப் பெயர்ச்சி

ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் இளவரசனாக போற்றப்படும் புதன் பகவான், அறிவுக்கூர்மை, திறமையான பேச்சு, கல்வி மற்றும் வணிகத்தின் காரணியாக விளங்குகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், தற்போது துலாம் ராசியில் சஞ்சரித்து வருகிறார்.

இந்நிலையில், வருகிற அக்டோபர் 24 அன்று துலாம் ராசியில் புதன் வக்ர நிலையில் (Retrograde) தனது பயணத்தைத் தொடங்க உள்ளார். கிரகங்களின் இந்த நிலை மாற்றம் அனைத்து ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வணிகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் வெற்றியையும் அள்ளித் தரப் போகிறது.

இந்தக் காலகட்டத்தில் தங்களின் பேச்சாற்றலால் காரியங்களை சாதித்துக் கொள்ளும் வாய்ப்பும், தடைபட்ட வேலைகள் தடையின்றி நடப்பதும் சில ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையவுள்ளது. அந்த வகையில், புதனின் வக்ரப் பெயர்ச்சியால் தொழில் ரீதியாகப் பொற்காலம் காணப் போகும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1. துலாம்
Image Credit : Pixabay

1. துலாம்

துலாம் ராசியின் லக்ன வீட்டில் (முதல் வீடு) புதன் வக்ரமடைவதால், உங்களின் நீண்ட நாள் திட்டங்கள் நனவாகத் தொடங்கும். ஒருவேளை நீங்கள் வேலை மாற்றியோ அல்லது புதிய தொழில் தொடங்கவோ நினைத்து அதைத் தள்ளிப் போட்டிருந்தீர்கள் என்றால், அதற்கான அருமையான தருணம் இது.

முன்பு நழுவிப் போன நல்ல வாய்ப்புகள் மீண்டும் உங்கள் கதவைத் தட்டும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபமும், வணிகர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும், யாரிடமும் வாக்குக் கொடுக்கும்போது சற்று யோசித்துச் செயல்படுவது நல்லது.

35
2. மேஷம்
Image Credit : Pixabay

2. மேஷம்

மேஷ ராசிக்கு 7-ம் வீட்டில் புதன் வக்ரமாகப் பயணிக்க உள்ளார். இதன் மூலம் உங்களை நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். வியாபாரிகளுக்கு முடங்கிப் போன பழைய வர்த்தகத் தொடர்புகள் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் மீண்டும் உயிர்பெறும்.

உங்களின் தெளிவான பேச்சாற்றல் புதிய வாடிக்கையாளர்களையும் ஒப்பந்தங்களையும் ஈட்டித் தரும். வேலை தேடி அலைபவர்களுக்குச் சிறப்பான வேலைவாய்ப்பு தேடி வரும். குடும்பம் மற்றும் உத்தியோகத்தில் இருந்து வந்த தவறான புரிதல்கள் நீங்கி சுமூகமான சூழல் நிலவும். எத்தகைய முடிவுகளையும் அவசரப்பட்டு எடுக்காமல் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

45
3. மிதுனம்
Image Credit : Pixabay

3. மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு 5-வது வீட்டில் புதன் வக்ரமடைகிறார். இந்த காலகட்டத்தில் புதிதாக எதையும் தொடங்குவதை விட, ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் பணிகளில் உள்ள குறைகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வது சிறப்பான பலனைத் தரும். வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்குப் புதிய தொடர்புகள் விரிவடைந்து லாபம் பெருகும். தடைபட்டு நின்ற திட்டங்கள் அனைத்தும் இனி எந்தத் தடையுமின்றி வெற்றிகரமாக நிறைவேறும். அலுவலகத்தில் உங்களின் திறமைக்குத் தகுந்த அங்கீகாரமும், சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வும் தேடி வரக்கூடும்.

55
4. மகரம்
Image Credit : Pixabay

4. மகரம்

மகர ராசியின் 10-வது வீட்டில் (தொழில் ஸ்தானம்) புதன் வக்ர பெயர்ச்சி நிகழ்கிறது. இது உங்களின் தொழில் வாழ்க்கையில் மிக முக்கியமான மாற்றத்தைத் தரும். இதுவரை நீங்கள் எடுத்த முடிவுகளில் இருந்த தவறுகளைத் திருத்திக் கொண்டு முன்னேற இது சரியான நேரம்.

வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் தரும் புதிய பார்ட்னர்ஷிப் அல்லது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை உரிய நேரத்தில் வெற்றிகரமாக அடைவீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டு மற்றும் நன்மதிப்பைப் பெற்று அலுவலகத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். நிதி நிலைமையும் மிகவும் வலுவாக இருக்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Malavya Raja Yoga: பணம், வேலை, திருமணம் என எல்லாமே மாறலாம்.. இந்த 4 ராசிகளுக்கு மாலவ்ய ராஜயோகம்!
Recommended image2
Budhaditya Raja Yoga: சூரியன் - புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம்..இந்த 4 ராசிகளுக்கு தொழிலில் திடீர் முன்னேற்றம்
Recommended image3
புதன் + சூரியன் சேர்க்கை: உருவாகும் புதாதித்ய ராஜயோகம்! 5 ராசிகளுக்கு பணவரவு கதவு திறக்கப்போகுது
Related Stories
Recommended image1
Today Horoscope: திடீர் யோகமும், பதவி உயர்வும்! குருவின் அருள் பெறப்போவது யார்?
Recommended image2
அக்டோபர் 2026 ராசி பலன்கள்: கோடீஸ்வர யோகம் பெறும் டாப் 4 ராசிகள்! உங்க ராசி இதுல இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved