- Home
- Astrology
- Birth Month : பெண்களே! இந்த மாசத்துல பிறந்தவங்கள கல்யாணம் பண்ணாதீங்க! 2வது திருமண யோகம் இருக்கு
Birth Month : பெண்களே! இந்த மாசத்துல பிறந்தவங்கள கல்யாணம் பண்ணாதீங்க! 2வது திருமண யோகம் இருக்கு
ஜோதிடத்தின் படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்த ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு அதிகமுள்ளன. அந்த லிஸ்டில் நீங்க பிறந்த மாதம் இருக்கிறதா?

Second Marriage Astrology
ஜோதிடத்தின் படி ஒரு நபர் பிறந்த தேதி, ராசி , நட்சத்திரம் மாதம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அவரது ஆளுமை, குணாதிசயங்கள் மற்றும் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்த ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று ஜோதிடம் சொல்லுகின்றது. அது எந்தெந்த மாதம்? நீங்கள் பிறந்த மாதம் அந்த லிஸ்ட் இருக்கிறதா? என்பதை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏப்ரல்
ஜோதிடத்தின் படி, ஏப்ரல் மாதத்தில் பிறந்த ஆண்கள் திருமண உறவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை எதிர்பார்ப்பதால், அது அவர்களின் முதல் திருமணத்தில் கிடைக்கவில்லை என்பதால், அதை பெற அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வார்களாம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத மனைவியிடம் தங்களது வாழ்க்கையை தொடர விரும்ப மாட்டார்கள் என்று ஜோதிடம் சொல்லுகின்றது. இதனால் தான் அவர்கள் அந்த உறவை முறித்துக் கொண்டு, அடுத்த வாழ்க்கையை நோக்கி நகர்வார்களாம்.
ஜுன்
ஜோதிடத்தின் படி, ஜூன் மாதத்தில் பிறந்த ஆண்கள் சுதந்திரம் மற்றும் சுயமரியாதையை ரொம்பவே மதிப்பார்களாம். ஆனால் இவை அவர்களது முதல் திருமணத்தில் கட்டுப்படுத்தப்படுவதாலும், பறிபோவதாலும் அவர்கள் உணர்வதால் அந்த திருமணத்தை முடித்துக் கொள்கிறார்கள். மேலும் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தங்களது சுதந்திரம் மற்றும் ஆசைகளை மதிக்கும் மற்றும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவரை தான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள விரும்புவார்களாம்.
நவம்பர்
ஜோதிடத்தின்படி பிறந்த ஆண்கள் எப்போதுமே தங்களது வாழ்க்கையில் சமநிலை மற்றும் நல்லிணக்கத்தை பராமரிக்க விரும்புவார்களாம். ஆனால் இவர்களது முதல் திருமணத்தில் அவை கிடைப்பதில்லை என்பதால் அவர்கள் அந்த திருமணத்தில் இருந்து வெளியேறி இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று ஜோதிடம் சொல்லுகின்றது.
டிசம்பர்
ஜோதிடத்தின் படி, டிசம்பர் மாதத்தில் பிறந்த ஆண்கள் ரசனையானவர்கள். ஆனால் இவருக்கும் இவரது துணைக்கும் இது ஒத்துப்போகாது என்பதால், இரண்டாவது திருமணத்தை செய்து கொள்வார். அதுவும் தங்களது ரசனைக்கு ஒத்துப் போகும் நபரை தான் இரண்டாவதாக திருமணம் செய்வார்களாம். ரசனைக்கு ஒத்துப்போகாத நபரை இரண்டாவதாக திருமணம் செய்யமாட்டாராம்.