- Home
- Astrology
- Nov 08 Rasi Palan: மீன ராசி நேயர்களே, இன்று புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் கைகூடும்.!
Nov 08 Rasi Palan: மீன ராசி நேயர்களே, இன்று புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் கைகூடும்.!
Nov 08 Meena Rasi Palan: நவம்பர் 08, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 08, 2025 மீன ராசிக்கான பலன்கள்:
மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் பொதுவாக அமைதியாகவும், திருப்திகரமாகவும் இருக்கும். மனதில் ஒருவித அமைதி நிலவும் உயர்ந்த ஆற்றலுடனும், நம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள். கடினமான வேலைகளை எளிதாக முடிக்கும் திறன் உண்டாகும். அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். ஆன்மீக சிந்தனைக்கும், தியானத்திற்கும் நேரம் ஒதுக்குவது நல்லது.
நிதி நிலைமை:
எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. சொத்துக்கள், நீண்ட கால முதலீடுகள், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் வெற்றி கிடைக்கும். இருப்பினும் பொறுமையும், நடைமுறை அறிவும், பொறுமையும் அவசியம். பண விவகாரங்களில் ஏற்ற இறக்கங்களில் காணப்படலாம். எனவே அதிக ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
திருமணமானவர்களுக்கு துணையுடன் பரஸ்பர புரிதல் மற்றும் அன்பு அதிகரிக்கும். உணர்ச்சிப்பூர்வமான பாதுகாப்பு வலுப்பெறும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு புதிய அறிமுகம் அல்லது திருமணப் பேச்சுகள் நல்ல செய்தியை தரும்.
பரிகாரங்கள்:
மதுரை மீனாட்சியம்மனை வணங்குவது நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும். அம்பாளை மனதார வழிபடுவது அதிர்ஷ்டத்தையும், வேண்டிய வரங்களையும் தரும். உங்கள் ராசிநாதன் குரு பகவானை வணங்குவது நல்லது. சூரியனுக்கு நீர் அர்பணித்து வழிபடுவது பலன்களை அதிகரிக்கும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உதவுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.