- Home
- Astrology
- Meena Rasi Palan Nov 28: மீன ராசி நேயர்களே, இன்று சனி வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டம் கொட்டும்.!
Meena Rasi Palan Nov 28: மீன ராசி நேயர்களே, இன்று சனி வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டம் கொட்டும்.!
Nov 28 Meena Rasi Palan: நவம்பர் 28, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 28, 2025 மீன ராசிக்கான பலன்கள்:
மீன ராசி நேயர்களே, சனி பகவான் உங்கள் ராசியிலேயே வக்ர நிவர்த்தி அடைவது ஒரு முக்கிய நிகழ்வாகும். கடந்த நான்கு மாதங்களாக சனி பகவானின் வக்ரத்தால் தடைபட்டிருந்த வேலைகள் இனி வேகம் எடுக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். சனி பகவான் ஆசியால் ஒட்டுமொத்த அதிர்ஷ்டமும் பிரகாசிக்கும்.
நிதி நிலைமை:
இன்றைய தினம் நிதி நிலைமை சீராக இருக்கும். வணிகம் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எதிர்பாராத பரிசுகள் அல்லது திடீர் ஏற்றங்கள் உருவாகலாம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
தனிமையில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும் வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவி வந்த சண்டைகள் முடிவுக்கு வந்து மகிழ்ச்சியும், அமைதியும் பெருகும். குரு பகவானின் நிலை காரணமாக குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவழிப்பீர்கள். பஞ்சம ஸ்தானத்தில் குரு உச்சம் அடைவதால் குடும்பத்தில் சாதகமான சூழல் நிலவும்.
பரிகாரங்கள்:
சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் சனி பகவான் சன்னிதியில் விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும். மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுவது சிறப்பான யோகங்களைத் தரும். வறியவர்களுக்கு உதவி செய்வது சனி பகவானால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

