- Home
- Astrology
- Mars Transit 2026: 2026 மே செவ்வாய் பெயர்ச்சி: நெருப்பாக மாறப்போகும் 5 ராசிகள் - நீங்கள் இதில் இருக்கிறீர்களா?
Mars Transit 2026: 2026 மே செவ்வாய் பெயர்ச்சி: நெருப்பாக மாறப்போகும் 5 ராசிகள் - நீங்கள் இதில் இருக்கிறீர்களா?
Mars Transit in Aries 2026 Tamil: 2026, மே 11-ம் தேதி, செவ்வாய் கிரகம் மேஷ ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் சில ராசிகளுக்கு எதிர்மறையான பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக ரிஷபம், கன்னி உள்ளிட்ட 5 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
15

Image Credit : Asianet News
ரிஷப ராசி
ரிஷப ராசிக்கு 12-ம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். இதனால் உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். எதிர்பாராத மருத்துவ அல்லது பயணச் செலவுகள் வரலாம். குடும்பத்தினருக்கு உங்கள் உதவி தேவைப்படலாம்.
25
Image Credit : Asianet News
கன்னி ராசி
கன்னி ராசிக்கு 8-ம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்றது. இதனால் நீங்கள் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். உடல்நலப் பிரச்சினைகள் அல்லது காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கை தேவை. பணியிட அரசியலில் இருந்து விலகி இருங்கள். பூர்வீக சொத்து சம்பந்தமான சச்சரவுகளும் வரலாம்.
35
Image Credit : Asianet News
தனுசு ராசி
தனுசு ராசிக்கு 5-ம் வீட்டில் செவ்வாய் பயணிக்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு எரிச்சல் அதிகமாகலாம். உங்கள் கோபம் காதல் வாழ்க்கையில் சிக்கல்களை உருவாக்கும். எனவே, பொறுமையாக இருந்து பேசித் தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
45
Image Credit : Pixabay
மகர ராசி
மகர ராசிக்கு 4-ம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். இது உங்களுக்கு அதிக மன அழுத்தத்தை தரலாம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். பணியிடத்தில் உங்கள் நடத்தை சிக்கலை ஏற்படுத்தலாம். தாயாருடனான உறவில் பதற்றம் ஏற்படலாம். அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
55
Image Credit : Asianet News
மீன ராசி
மீன ராசிக்கு 2-ம் வீட்டில் செவ்வாய் நுழைகிறார். இது கலவையான பலன்களைத் தரும். திடீர் பண வரவு இருக்கலாம். ஆனால், உடல்நலத்தில் கவனம் தேவை. உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். உங்கள் துணையின் உடல்நலமும் கவலைக்கு காரணமாக அமையலாம்.
Latest Videos