MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • செவ்வாய் பெயர்ச்சி 2026: விபரீத ராஜயோகத்தால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. வாழ்க்கையே மாறப்போகுது!

செவ்வாய் பெயர்ச்சி 2026: விபரீத ராஜயோகத்தால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. வாழ்க்கையே மாறப்போகுது!

Mars Transit 2026: செவ்வாய் மேஷ ராசிக்குள் பெயர்ச்சி அடைவதால் 3 ராசிகள் விபரீத ராஜயோகம் பெறப்போகின்றன. அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : May 08 2026, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
செவ்வாய் பெயர்ச்சி 2026
Image Credit : AI

செவ்வாய் பெயர்ச்சி 2026

ஜோதிட சாஸ்திங்களின்படி 'கிரகங்களின் தளபதி' என்று வர்ணிக்கப்படுபவர் செவ்வாய் பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் தைரியம், தன்னம்பிக்கை, வீரம் மற்றும் நிலம் தொடர்பான சொத்துக்களுக்கு செவ்வாய் கிரகம் முக்கியத்துவம் வகிக்கிறது. பொதுவாக ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் சஞ்சரிக்கும் செவ்வாய் பகவான் தனது இடத்தை மாற்றும் போதெல்லாம் அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துவார்.

தற்போது மீன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், வரும் மே 11-ம் தேதி தனது சொந்த வீடான மேஷ ராசிக்குள் நுழைகிறது. இந்த பெயர்ச்சியின் மூலம் மிகவும் வலிமையான 'ருச்சக ராஜயோகம்' உருவாவதோடு, சில குறிப்பிட்ட ராசிகளுக்கு 'விபரீத ராஜயோகம்' எனும் அபூர்வ யோகமும் கிடைக்க உள்ளது. இதன் காரணமாக ரிஷபம், கன்னி, விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி வளர்ச்சியும், அதிர்ஷ்டமும் தேடி வரப்போகிறது. ஜோதிட விதிகளின்படி, செவ்வாய் 6, 8, 12 ஆகிய மறைவு வீடுகளில் அமையும் போது இந்த விபரீத ராஜயோகம் உண்டாகிறது. இப்போது விபரீத ராஜயோகம் பெறப்போகும் 3 ராசிகளின் பலன்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

24
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

ரிஷப ராசிக்கு 12-ம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் விபரீத ராஜயோகம் உண்டாகிறது. தொழில் புரிபவர்களுக்கு இது அற்புதமான காலக்கட்டமாகும். ஏற்றுமதி-இறக்குமதி மற்றும் வெளிநாட்டுத் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். வெளிநாடு செல்லக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் ஈட்ட புதிய வழிகள் பிறக்கும். 

பணத்தைச் சேமிக்கும் ஆற்றல் கூடும்.புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை காட்டுவது அவசியம். ஏழை எளியவர்களுக்கு அல்லது துப்புரவுத் தொழிலாளர்களுக்கு செவ்வாய் கிழமைகளில் சிவப்பு நிற இனிப்புகள் அல்லது உணவு வழங்கினால் கூடுதல் பலன்கள் பெற முடியும்.

Related Articles

Related image1
Dhanusu Rasi : சொந்த வீடு, வாகன யோகம் தேடி வரும்! தனுசு ராசி குரு பெயர்ச்சி 2026: தலைவிதியை மாற்றப்போகும் பொற்காலம்!
Related image2
Astrology: இந்த 4 ராசி பெண்கள் அதி புத்திசாலிகள்! காதலில் இவர்களை ஏமாற்றவே முடியாது! உங்க ராசி இருக்கா?
34
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

கன்னி ராசிக்கு 8-ம் வீட்டில் செவ்வாய் நுழைவதால் விபரீத ராஜயோகம் பலன்களைத் தரும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகைகள் திடீரென வசூலாகும். பங்குச்சந்தை மற்றும் முதலீடுகளில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். பணியிடங்களில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். உடல்நலத்தை பொறுத்தவரை ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வரலாம். குறிப்பாக வாகனங்களை இயக்கும்போது மிகுந்த கவனம் அவசியம். பறவைகளுக்கு தானியங்கள் மற்றும் தண்ணீர் வைக்கவும். சிவப்பு நிற கைக்குட்டையை எப்போதும் உடன் வைத்துக்கொள்வது பாதுகாப்பைத் தரும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

44
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு 6-ம் வீட்டில் செவ்வாய் அமர்வதால் இந்த யோகம் அபரிமிதமான பலன்களைத் தரும். இதுவரை தடையாக இருந்த காரியங்கள் தடையின்றி முடியும். உங்களை எதிர்த்தவர்கள் பணிந்து போவார்கள். மருத்துவம், விளையாட்டுத் துறை மற்றும் ஐடி துறையில் இருப்பவர்களுக்கு இது பொற்காலமாக அமையும். தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும். பணியிடத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி, செல்வாக்கு உயரும். பணியிடங்களில் உங்கள் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது எதிர்ப்புகளை துடைத்தெறியும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lakshmi Narayana yogam : 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது... லட்சுமி நாராயண யோகம் தரும் பலன்கள்
Recommended image2
Budhaditya Rajyog 2026: கையில் பணப்புழக்கம்! புதாதித்ய ராஜயோகத்தால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் எவை?
Recommended image3
Astrology: உழைப்பால் முன்னேறும் 4 ராசிகள்! யார் எதை கேட்டாலும் அள்ளிக்கொடுப்பார்களாம்!
Related Stories
Recommended image1
Dhanusu Rasi : சொந்த வீடு, வாகன யோகம் தேடி வரும்! தனுசு ராசி குரு பெயர்ச்சி 2026: தலைவிதியை மாற்றப்போகும் பொற்காலம்!
Recommended image2
Astrology: இந்த 4 ராசி பெண்கள் அதி புத்திசாலிகள்! காதலில் இவர்களை ஏமாற்றவே முடியாது! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved