- Home
- Astrology
- மார்ச் 2026 கடகம்: செலவுகள் எகிறும்.. ஆனா எதிரிகளே உங்களுக்கு உதவுவாங்க; இதெப்படி இருக்கு!
மார்ச் 2026 கடகம்: செலவுகள் எகிறும்.. ஆனா எதிரிகளே உங்களுக்கு உதவுவாங்க; இதெப்படி இருக்கு!
March Matha Rasi Palan 2026 For Kadaka Rasi : கடகம் ராசி அன்பர்களுக்கு அடுத்து வரக் கூடிய மார்ச் மாதம் கிரக நிலைகளின் அடிப்படையில் ராசி பலன்கள் பற்றி பார்க்கலாம்.

கடக ராசி மார்ச் 2026 பலன்கள்
கடக ராசி நேயர்களே, மார்ச் மாதம் உங்களுக்கு ஒரு 'ரோலர் கோஸ்டர்' பயணம் போல ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். மாதத் தொடக்கத்தில் 8-ம் வீட்டில் கிரகங்களின் அணிவகுப்பு இருப்பதால் செலவுகள் கையை மீறிப் போகலாம். மாதத் தொடக்கத்தில் தேவையற்ற விரயச் செலவுகள் ஏற்படக்கூடும். நிதி நெருக்கடிகள் வரலாம். ஆனாலும் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் மார்ச் 2-ம் தேதியே சுக்கிரன் 9-ம் இடத்திற்கு நகர்வதால் பணப்புழக்கம் சீராகும்.
Kadaka Rasi March 2026 Palanga
உத்தியோகஸ்தர்களுக்குப் பணிச்சுமை அதிகரித்தாலும், தளராத உழைப்பால் வெற்றி காண்பீர்கள். 15-ம் தேதிக்குப் பிறகு நீண்ட தூரப் பயணங்கள் அல்லது வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். தொழிலதிபர்களுக்குத் தொழில் நிமித்தமான பயணங்களால் ஆதாயம் உண்டு. ஆபீஸில் வேலைப்பளு இருந்தாலும், உங்கள் கடின உழைப்பால் எதையும் சாதிப்பீங்க. ஒரு சுவாரசியமான விஷயம் என்னன்னா, உங்களை வீழ்த்த நினைக்கும் எதிரிகளே உங்களுக்கு மறைமுக லாபத்தைத் தருவாங்க.
Cancer Horoscope March 2026 Tamil
திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும்; மாமியார் வழி உறவுகளால் சில சுப நிகழ்வுகள் நடக்கலாம். மாணவர்களுக்கு இது சவாலான காலம் என்பதால் கூடுதல் முயற்சி அவசியம். காதலில் மட்டும் கொஞ்சம் அமைதியா இருக்கிறது நல்லது. ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்!
பொருளாதாரம், வேலை, உறவு
தனித்தனியாக பார்க்கையில்
பொருளாதாரம்: ஆரம்பத்தில் நிதி நெருக்கடி இருந்தாலும், சுக்கிரனின் அருளால் பண வரவு சீராகும். செலவுகளைத் திட்டமிடுவது அவசியம்.
வேலை: அதிக அழுத்தம் இருக்கும், ஆனால் உங்கள் திறமை வெளிப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து லாபம் காண்பீர்கள்.
உறவு: காதலில் புரிதல் குறைந்து விரிசல் ஏற்படலாம், பேச்சில் நிதானம் தேவை. தம்பதிகளுக்குள் ஒற்றுமை கூடும்.
பயணம், ஆரோக்கியம், மாணவர்கள்
பயணம்: வெளிநாடு அல்லது நீண்ட தூரப் பயணம் செல்ல விரும்புபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.
ஆரோக்கியம்: அலட்சியம் வேண்டாம், முறையான பரிசோதனை மற்றும் உணவுக்கட்டுப்பாடு அவசியம்.
மாணவர்கள்: கல்வியில் அதிக கவனம் மற்றும் கடின உழைப்பு தேவைப்படும் மாதம்.