MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சுக்கிரனுடன் இணைந்து ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 6 ராசிகளுக்கு நடக்கப்போகும் அதிரடி மாற்றம்.!

சுக்கிரனுடன் இணைந்து ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 6 ராசிகளுக்கு நடக்கப்போகும் அதிரடி மாற்றம்.!

மார்ச் 4, 2026 மீன ராசியில் சுக்கிரன் மற்றும் சனி பகவான் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இந்த சேர்க்கை காரணமாக சில ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை ஏற்படும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 10 2026, 11:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
சுக்கிரன் சனி சேர்க்கை 2026
Image Credit : Asianet News

சுக்கிரன் சனி சேர்க்கை 2026

இந்த ஆண்டு ஹோலி பண்டிகை மார்ச் 4, 2026 ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மீன ராசியில் சுக்கிரன் மற்றும் சனி இரு கிரகங்களின் சேர்க்கை நடைபெற இருப்பதால் ஹோலி பண்டிகை சிறப்பு வாய்ந்ததாக மாறுகிறது. இந்த இரண்டு சுப கிரகங்களின் இணைவு காரணமாக ஆறு ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்க இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

27
ரிஷபம்
Image Credit : stockPhoto

ரிஷபம்

ரிஷப ராசியின் ராசிநாதனான சுக்கிர பகவான் லாப வீடான பதினோராம் இடத்தில் சனியுடன் இணைவதால் எதிர்பாராத பல நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். கடன்கள் வசூலாகும். தொழிலில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் லாபத்தைத் தரும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் கனவு நனவாகும்.

Related Articles

Related image1
குரு பகவான் கட்டுப்பாட்டில் 6 கிரகங்கள்.! இந்த ராசிகளுக்கு அனைத்து தோஷங்களும் நீங்கும்.!
Related image2
திருவோண நட்சத்திரத்தில் அமரும் யமன்.! 4 ராசிகளின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
37
மிதுனம்
Image Credit : Pinterest

மிதுனம்

மிதுன ராசியின் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் சனியின் சேர்க்கை நடைபெற இருக்கிறது. எனவே மிதுன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தொழில் ரீதியான நன்மைகளைப் பெறுவீர்கள். வேலையில் பதவி உயர்வு அல்லது புதிய வாய்ப்புகள் தேடி வரும். சனி பகவான் உங்கள் உழைப்புக்கேற்ற அங்கீகாரத்தை அளிப்பார். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும்.

47
கன்னி
Image Credit : AI

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சனியின் சேர்க்கை குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்கும். தடைபட்டு நின்ற சுப காரியங்கள் கைகூடும். தள்ளிப் போய்க் கொண்டே இருந்த திருமண காரியங்கள் சுமூகமாக முடியும். கூட்டுத் தொழில் இருப்பவர்களுக்கு இடையே இருந்த கசப்புணர்வுகள் நீங்கி, தொழில் விரிவாக்கம் நடக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.

57
விருச்சிகம்
Image Credit : stockPhoto

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டில் இந்த இணைவு நடைபெறுவதால் பிள்ளைகளின் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் தீரும். கலைத்துறை மற்றும் படைப்புத் துறையில் இருப்பவர்களுக்கு பொற்காலமாக அமையும். வெளிநாட்டில் படிக்க அல்லது வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு பாதைகள் திறக்கும். நீங்கள் செய்த பழைய முதலீடுகள் தற்போது கை கொடுக்கும்.

67
தனுசு
Image Credit : stockPhoto

தனுசு

தனுசு ராசியின் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சுக்கிர பகவான் உச்சம் பெற்று சனி பகவானுடன் இணைகிறார். எனவே இந்த காலகட்டத்தில் சொத்து சேர்க்கை நடைபெறும். வங்கி இருப்பு உயரும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தாயார் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, இணக்கம் ஏற்படும். மன நிம்மதி அதிகரிக்கும்.

77
கும்பம்
Image Credit : Pinterest

கும்பம்

கும்ப ராசியின் தன ஸ்தானத்தில் சுக்கிரன் சனியின் சேர்க்கை நடைபெற இருக்கிறது. உங்கள் ராசிநாதன் சனியும் சுக்கிரனும் இணைவதால் இந்த காலகட்டத்தில் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். திடீர் பண வரவு உண்டாகும். தொழிலில் லாபம் கிடைக்கும். உங்கள் பேச்சாற்றல் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
திருவோண நட்சத்திரத்தில் அமரும் யமன்.! 4 ராசிகளின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
100 ஆண்டுகளுக்குப் பின் ஒரு அதிசயம்: கும்பத்தில் இணையும் 3 கிரகங்கள்! இந்த 3 ராசிகளுக்கு ‘ஜாக்பாட்’ தான்!
Recommended image3
மார்ச் மாத ராசிபலன் 2026: மேஷ ராசிக்கு பண மழையா? இடமாற்றமா? முழுமையான பலன்கள் இதோ!
Related Stories
Recommended image1
குரு பகவான் கட்டுப்பாட்டில் 6 கிரகங்கள்.! இந்த ராசிகளுக்கு அனைத்து தோஷங்களும் நீங்கும்.!
Recommended image2
திருவோண நட்சத்திரத்தில் அமரும் யமன்.! 4 ராசிகளின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved