MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Malavya Raja Yoga: பணம், வேலை, திருமணம் என எல்லாமே மாறலாம்.. இந்த 4 ராசிகளுக்கு மாலவ்ய ராஜயோகம்!

Malavya Raja Yoga: பணம், வேலை, திருமணம் என எல்லாமே மாறலாம்.. இந்த 4 ராசிகளுக்கு மாலவ்ய ராஜயோகம்!

Malavya Raja Yoga: சுக்கிரனுடன் தொடர்புடைய முக்கிய யோகங்களில் ஒன்றாக மாலவ்ய ராஜயோகம் கருதப்படுகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு வேலை, பணம், திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

2 Min read
Author : Raghupati R
Published : Oct 09 2026, 06:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மாலவ்ய ராஜயோகம் பெறும் 4 ராசிகள்
Image Credit : AI Generated Image

மாலவ்ய ராஜயோகம் பெறும் 4 ராசிகள்

ஜோதிடத்தில் கிரகங்களின் நிலை மற்றும் அதன் மாற்றங்கள் ராசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக சில குறிப்பிட்ட கிரக அமைப்புகள் உருவாகும்போது அவை ராஜயோகங்களாக கருதப்படுகின்றன. அவற்றில் சுக்கிரனுடன் தொடர்புடைய முக்கியமான யோகங்களில் ஒன்றுதான் மாலவ்ய ராஜயோகம். பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த யோகம், சுக்கிரன் தனது சொந்த ராசிகளான ரிஷபம் அல்லது துலாம் ராசியில் அல்லது உச்ச ராசியான மீனத்தில் ஜாதகத்தின் கேந்திர பாவங்களில் அமைந்திருக்கும் போது உருவாகும் என்று பாரம்பரிய வேத ஜோதிடம் கூறுகிறது. இந்த யோகம் உருவானால் செல்வம், வசதி, கலைத்திறன், அழகு, சமூக மரியாதை உள்ளிட்ட அம்சங்களுடன் தொடர்புடைய நல்ல பலன்கள் கிடைக்கலாம் என்பது ஜோதிட நம்பிக்கை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சிம்மம்
Image Credit : ChatGPT

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத் தொழில் தொடர்பாக சில புதிய வாய்ப்புகளைத் தரக்கூடும் என்று ஜோதிடப் பலன்கள் கூறுகின்றன. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலை வாய்ப்பு அல்லது புதிய பொறுப்பு கிடைக்கும் சூழல் உருவாகலாம். பணியிடத்தில் உங்கள் திறமை மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்றும், சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. காதல் வாழ்க்கையில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து உறவில் நல்ல மாற்றம். மேலும் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த சொத்து தொடர்பான ஒரு முடிவு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சூரியன் - புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம்..இந்த 4 ராசிகளுக்கு தொழிலில் திடீர் முன்னேற்றம்

35
துலாம்
Image Credit : ChatGPT

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் சிறப்பானதாக இருக்கலாம் என்று ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால், சுக்கிரனுடன் தொடர்புடைய இந்த யோகம் அவர்களுக்கு கூடுதல் சாதகத்தை வழங்கும் பாரம்பரிய ஜோதிடம். நீண்ட நாட்களாக இருந்த பணப் பிரச்சினைகளில் இருந்து படிப்படியாக வெளியே வருவதற்கான வாய்ப்பு. கடன் சுமையை குறைப்பதற்கான வழிகள் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய வீடு அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு அதற்கான முயற்சிகள் சாதகமாக அமையலாம். குறிப்பாக கலை, ஊடகம், அழகு, படைப்புத் துறை போன்ற சுக்கிரனுடன் தொடர்புடைய துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அல்லது வளர்ச்சி கிடைக்கலாம்.

45
தனுசு
Image Credit : ChatGPT

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் முயற்சிகளில் முன்னேற்றம். பணியிடத்தில் உயர்ந்த பொறுப்பு அல்லது பதவி கிடைக்கும் வாய்ப்பு, பூர்வீக சொத்து தொடர்பான பலன்களும் கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது. கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அல்லது லாபம் கிடைக்கலாம் என்றும், குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

55
கும்பம்
Image Credit : ChatGPT

கும்பம்

கும்ப ராசிக்காரர்களைப் பொறுத்தவரை எதிர்பாராத பணவரவு, நீண்ட நாட்களாக இருந்த வேலைகள் நிறைவு பெறுதல், பதவி உயர்வு அல்லது வருமான அதிகரிப்பு போன்ற சாதகமான மாற்றங்கள் குறித்து ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கலாம், கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வசதியான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உருவாகலாம். மொத்தத்தில், மாலவ்ய ராஜயோகம் இந்த நான்கு ராசிகளுக்கும் வேலை, பணம், குடும்பம் உள்ளிட்ட விஷயங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் இவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட கணிப்புகள் அல்ல. தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராஜ யோகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Budhaditya Raja Yoga: சூரியன் - புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம்..இந்த 4 ராசிகளுக்கு தொழிலில் திடீர் முன்னேற்றம்
Recommended image2
புதன் + சூரியன் சேர்க்கை: உருவாகும் புதாதித்ய ராஜயோகம்! 5 ராசிகளுக்கு பணவரவு கதவு திறக்கப்போகுது
Recommended image3
விருச்சிகத்தில் வக்ரமாகும் சுக்கிரன்.. வாழ்வில் திடீர் திருப்பம்: இந்த 5 ராசிகளுக்கு என்ன நடக்கும்?
Related Stories
Recommended image1
Shadashtak Yoga : சூரியன் – சனி மோதலால் உருவாகும் ஷடாஷ்டக யோகம்... 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள் இதோ
Recommended image2
Ketu Nakshatra Transit: கேது நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மேல் சோதனை.. கவனம் தேவை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved