MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Jan 31 Makara Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று பதட்டம் அதிகரிக்கும்.! வேலைகள் இழுபறியாகும்.! கவனமா இருங்க.!

Jan 31 Makara Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று பதட்டம் அதிகரிக்கும்.! வேலைகள் இழுபறியாகும்.! கவனமா இருங்க.!

Jan 31 Makara Rasi Palan : ஜனவரி 31, 2026 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Jan 30 2026, 04:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
பொதுவான பலன்கள்:
Image Credit : Asianet News

பொதுவான பலன்கள்:

மகர ராசி நேயர்களே, நாள் முழுவதும் மனதில் ஒருவித பதற்றம் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை கிடைக்கும். இழுபறியில் இருந்த வேலைகள் இன்று முடிவடையும். தாய் வழி உறவினர்களால் நல்ல செய்தி கிடைக்கும். பதற்றம் காரணமாக தலைவலி போன்ற உபாதைகள் ஏற்படலாம்.

நிதி நிலைமை:

நிதி நிலைமை சீராக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கைக்கு வரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக சிறு தொகைகள் செலவிட நேரிடலாம். சிலருக்கு கூடுதல் சுமைகள் காரணமாக பணம் அதிக அளவில் செலவு செய்ய நேரிடும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம் என்பதால் நிதானம் காப்பது அவசியம். பேசும்பொழுது கோபமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டாம். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள பழக வேண்டும். பிள்ளைகளின் வழியாக நல்ல செய்திகள் கிடைக்கலாம்.

பரிகாரங்கள்:

 தட்சிணாமூர்த்தியை வணங்குவது நன்மைகளைத் தரும். ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பேனா போன்ற கல்விக்கு தேவையான உபகரணங்களை தானமாக வழங்குவது தடைகளை நீக்கி சுப பலன்களைத் தரும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஜயோகத்துடன் பிறக்கும் 4 ராசிகள்.! இவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
நாளை (மார்ச் 3) முழு சந்திர கிரகணம்.! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு ஆப்பு? 12 ராசிகளுக்குமான பலன்கள்.!
Recommended image3
Guru Peyarchi 2026 : புதிய சக்தியைப் பெறும் குரு பகவான்.! மார்ச் 11 முதல் இந்த 5 ராசிகளுக்கு பணமழை பொழியும்.!
Related Stories
Recommended image1
Shani Uday 2026: மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்.! 3 ராசிகளின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.!
Recommended image2
2026-ன் முதல் சூரிய கிரகணம்.! 3 ராசிகளுக்கு கஷ்ட காலம் ஆரம்பம்.! அவமானம், விபத்து, நிதி இழப்புகளை சந்திக்கப் போறீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved