- Home
- Astrology
- Nov 04 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று செல்வம், செழிப்பு அதிகரிக்கும்.! பேங்க் பேலன்ஸ் உயரும்.!
Nov 04 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று செல்வம், செழிப்பு அதிகரிக்கும்.! பேங்க் பேலன்ஸ் உயரும்.!
Today Rasi Palan : நவம்பர் 04, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 04, 2025 மகர ராசிக்கான பலன்கள்:
மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் உங்களுக்கு செழிப்பான நாளாக இருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். தன்னம்பிக்கை மற்றும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். அலுவலகம் தொடர்பான வேலைகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
நிதி நிலைமை:
வருமானம் பெருகுவதால் உங்களின் வங்கி இருப்பு உயரும். நிதி நிலைமை இன்று வலுவாக இருக்கும். நிலுவையில் இருந்த பணம் கிடைப்பதால் பண நிலைமை வலுப்பெறும். எதிர்பாராத செலவுகள், வாகனப் பழுது போன்ற செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நியாயமற்ற வழிகளில் பணம் சம்பாதிக்க முயற்சிக்க வேண்டாம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்பத்தில் சுப காரியங்கள் குறித்த பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். குடும்ப உறுப்பினர்களுடன் உற்சாகமாக பேசி மகிழ்வீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரங்கள்:
மகர ராசிக்கு அதிபதியான சனீஸ்வர பகவானை வழிபடுவது நன்மைகளைத் தரும். முருகப்பெருமானை வழிபடுவது உங்களுக்கு துணையாக இருக்கும். ரகசியந் திட்டங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏழை, எளியவர்கள், முதியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.