MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Magara Rasi Palan Nov 29: மகர ராசி நேயர்களே, இன்று எத்தனை சவால்கள் வந்தாலும் வெற்றி உங்களுக்குத்தான்.!

Magara Rasi Palan Nov 29: மகர ராசி நேயர்களே, இன்று எத்தனை சவால்கள் வந்தாலும் வெற்றி உங்களுக்குத்தான்.!

Nov 29 Magara Rasi Palan : நவம்பர் 29, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Nov 28 2025, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 29, 2025 மகர ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

நவம்பர் 29, 2025 மகர ராசிக்கான பலன்கள்:

மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் சவால்களை சந்திக்கும் நாளாக இருந்தாலும், அவற்றை சமாளிப்பதற்கு தேவையான ஆற்றலைப் பெறுவீர்கள். 

வேலையிடத்தில் கூடுதல் பொறுப்புகள் மற்றும் வேலைப்பளு அதிகரிக்கலாம். கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நிதி நிலைமை:

லாப ஸ்தானத்தில் கிரகங்களின் சேர்க்கை காரணமாக நிதி வரவு சீராக இருக்கும். முதலீடுகளில் இருந்த தடைகள் நீங்கும். விரய ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கலாம். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று காதல் மற்றும் உறவுகளில் இனிமை கூடும். உங்கள் சமூக தொடர்புகள் வலுவடையும். குடும்பத்துடன் நேரம் செலவிடுவது மனதிற்கு ஆறுதல் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீட்டில் பழுது பார்ப்பு வேலைகள் அல்லது அழகுபடுத்தும் வேலைகள் தொடங்க கூடும்.

பரிகாரங்கள்:

காகங்களுக்கு சாதம் வைப்பது சனி பகவானின் தாக்கத்தை குறைக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது. இன்றைய தினம் ஆஞ்சநேயரை வழிபடுவது காரியங்களில் ஏற்படும் தடைகளை விலக்க உதவும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நேர்க்கோட்டில் வரும் 5 கிரகங்கள்.! 4 ராசிகள் அடுத்தடுத்து சிக்கல்களை சந்திக்கப்போறீங்க.!
Recommended image2
இந்த 4 ராசிக்காரர்கள் விரைவில் செல்வந்தர்கள்!.. பாபா வாங்கா கணிப்பு!.. உங்கள் ராசி இருக்கா?
Recommended image3
சில தினங்களில் உருவாகும் ஆபத்தான யோகம்.! ஹோலிக்குப் பிறகு இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.!
Related Stories
Recommended image1
Astrology: நண்பனின் நட்சத்திரத்தில் அமரும் சூரிய பகவான்.! 3 ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம் ஆகப்போகுது.!
Recommended image2
Astrology: 2026ல் மாற்றம் காணும் சனி மற்றும் ராகு.! அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved