- Home
- Astrology
- Numerology: உங்கள் பெயர் இந்த எழுத்துக்களில் தொடங்குதா? அப்ப நீங்க கண்டிப்பா கோடீஸ்வரரா மாறுவீங்க.!
Numerology: உங்கள் பெயர் இந்த எழுத்துக்களில் தொடங்குதா? அப்ப நீங்க கண்டிப்பா கோடீஸ்வரரா மாறுவீங்க.!
Numerology name in Tamil: வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு நம் பெயரின் முதல் எழுத்தும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று எண் கணிதம் கூறுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கோடீஸ்வர யோகம் பெறும் எழுத்துக்கள்
நியூமராலஜி மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின்படி சில குறிப்பிட்ட எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களைக் கொண்டவர்கள் பிறப்பிலேயே அதிர்ஷ்டத்தையும், செல்வத்தை ஈர்க்கும் தன்மையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், செல்வத்தை அடைவதற்கும் பெயரின் முதல் எழுத்து காரணமாக இருக்கலாம் என்று நியூமராலஜி கூறுகிறது. குறிப்பாக நான்கு எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களைக் கொண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எழுத்து A
எண் கணிதத்தின்படி A என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று கூறப்படுகிறது. A என்கிற எழுத்து ஆற்றல், லட்சியம் மற்றும் தலைமைத்துவத்தை குறிக்கிறது. A எழுத்தை முதலாகக் கொண்டவர்கள் வாழ்க்கையில் பெரும்பாலும் நிதி சார்ந்த நெருக்கடிகளை சந்திக்க மாட்டார்கள்.
அவர்களுக்குத் தேவையான பணம் மற்றும் செல்வம் எப்போதும் போதுமான அளவில் இருந்து கொண்டே இருக்கும். கடினமான சூழ்நிலைகளில் கூட அவர்களுக்குத் தேவையான பணம் அவர்களை தேடி வரும். தங்கள் கடின உழைப்பு மற்றும் துணிச்சலான முடிவுகளால் கோடீஸ்வரர்களாக மாறும் வாய்ப்புகள் இவர்களுக்கு பிரகாசமாக உண்டு.
எழுத்து R
R என்ற எழுத்தானது உறுதியான மனப்பான்மை, நடைமுறை சிந்தனையுடன் கூடிய அறிவு, கடின உழைப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் வாழ்க்கையை மிகவும் தீவிரமாக அணுகுவார்கள். இவர்கள் பணத்தை நிர்வகிப்பதில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். பண விஷயங்களில் மிகவும் கவனமாக செயல்பட்டு வீண் செலவுகளை தவிர்ப்பார்கள்.
இவர்களின் நிலையான உழைப்பும், சேமிக்கும் பழக்கமும் இவர்களை இளமையிலேயே செல்வத்தை குவித்து நிலையான, வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவுகிறது. பொறுமை, விடாமுயற்சி ஆகிய குணங்களால் இவர்கள் தொழிலில் பெரும் வெற்றிகளை அடைவார்கள்.
எழுத்து S
S என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் நபர்கள் புத்திசாலிகளாகவும், பணத்தை கையாளும் திறனுடனும், ஆளுமைத் திறனுடனும் தொடர்புடையவர்கள். பேச்சாற்றல் மற்றும் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். இந்த எழுத்தில் தொடங்கும் பெயர்களைக் கொண்டவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.
தொழில் தொடர்பான இவர்களின் புரிதல் மற்றும் தகவல் தொடர்பு திறன் இவர்களை வெற்றியை நோக்கி வழிநடத்துகிறது. மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். இவர்கள் தொழில் யுத்திகளை அறிந்து, தொழிலில் சாம்ராஜ்யங்களை உருவாக்கி கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.
எழுத்து V
V என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டவர்கள் பணிவானவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் மன உறுதி மிக்கவர்கள். இவர்கள் தங்கள் திறமையை மட்டுமே நம்பி முன்னேறக் கூடியவர்கள். இவர்களின் மன உறுதியும், தனிப்பட்ட திறமையும் இளம் வயதிலேயே இவர்களுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தருகிறது.
செல்வத்தை குவித்து உயர் அந்தஸ்தை பெறத் துடிப்பார்கள். பணம் மீது இவர்களுக்கு இருக்கும் நாட்டம் உழைத்து சம்பாதிப்பதற்கான வழியை தேடுவதற்கு தூண்டுகிறது. இவர்கள் பிறக்கும் பொழுதே கோடீஸ்வரராக பிறக்கும் அதிர்ஷ்டத்துடனும், அதை அடைவதற்கு தேவையான ஆற்றலுடனும் பிறக்கின்றனர்.
இவர்களே உண்மையான கோடீஸ்வரர்கள்
எண் கணிதத்தின்படி இந்த நான்கு எழுத்துக்களில் பெயர் தொடங்கினால் கோடீஸ்வரர் ஆவதற்கான கதவுகள் திறப்பதாக நம்பலாம். இருப்பினும் அதிர்ஷ்டம் என்பது ஒரு ஆரம்பப் புள்ளி மட்டுமே. ஒருவர் கோடீஸ்வரர் ஆவதற்கு கடின உழைப்பு, சரியான திட்டமிடல், உறுதியான முயற்சி, இலக்கை நோக்கிய பயணம், புத்திசாலித்தனமான முதலீடுகள் மூலமே சாத்தியமாகும்.
உங்கள் பெயரின் முதல் எழுத்து அதிர்ஷ்டமானதாக இருந்தாலும், விடாமுயற்சி மட்டுமே உங்களை கோடீஸ்வரராக மாற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த எழுத்தில் உங்கள் பெயர் தொடங்காவிட்டாலும் கவலை வேண்டாம். யார் ஒருவர் தன் இலக்கை நிர்ணயித்து அதற்காக அயராது உழைக்கிறார்களோ அவர்களே உண்மையான கோடீஸ்வரராக மாறுகிறார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

