- Home
- Astrology
- Lakshmi Narayana Raja Yoga: லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! ! உங்க ராசி இருக்கா?
Lakshmi Narayana Raja Yoga: லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! ! உங்க ராசி இருக்கா?
Lakshmi Narayana Raja Yoga: ஆண்டின் மிகப் புனிதமான ஏகாதசிகளில் ஒன்றாகக் கருதப்படும் நிர்ஜலா ஏகாதசி, இந்த ஆண்டு அரிய கிரகச் சேர்க்கையால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம், செல்வம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறது.

லட்சுமி நாராயண ராஜயோகம்
இந்த ஆண்டின் மிகவும் புனிதமான விரத நாட்களில் ஒன்றாகக் கருதப்படும் நிர்ஜலா ஏகாதசி ஜூன் 25-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் கடக ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால், ஜோதிடம் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படும் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது. செல்வ வளம், தொழில் முன்னேற்றம், சமூக மரியாதை மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் இந்த யோகம், சில ராசியினருக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் என ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.
புதன் சுக்கிரன் சேர்க்கை
ரிஷப ராசியினருக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையக்கூடும். கடக ராசியினருக்கு இந்த யோகம் நேரடியாக அமைய இருப்பதால், பண வரவு, பதவி உயர்வு, குடும்ப மகிழ்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துலாம் ராசியினருக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம், தன்னம்பிக்கை அதிகரிப்பு, சமூக மரியாதை மற்றும் உறவுகளில் நேர்மறை மாற்றங்கள் ஏற்படக்கூடும். உடல்நலத்திலும் முன்னேற்றம் காண வாய்ப்பு இருப்பதாக ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.
Today Rasi Palan: இந்த ராசிக்காரர்கள் இன்று நினைத்தது நடக்கும்.. உங்க ராசி என்ன? இன்றைய ராசிபலன் இதோ
நிர்ஜலா ஏகாதசியின் ஆன்மிக முக்கியத்துவம்
புராணங்களின்படி, நிர்ஜலா ஏகாதசி விரதத்தை பக்தியுடன் கடைப்பிடிப்பதால், ஆண்டின் 24 ஏகாதசிகளின் பலனும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் மகாவிஷ்ணுவை வழிபடுவது, தானம் செய்வது மற்றும் ஆன்மிக சிந்தனையில் ஈடுபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. கிரகச் சேர்க்கையும் ஆன்மிக நாளும் ஒரே நாளில் அமைய இருப்பதால், இந்த ஏகாதசி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

