ராஜயோகத்தால் மாறப்போகும் வாழ்க்கை.. அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள் எவை? முழு லிஸ்ட் இதோ
Lakshmi Narayana Raja Yoga 2026: பணவரவு, தொழில் வளர்ச்சி, பதவி உயர்வு எனப் பல நன்மைகளைத் தரும் யோகமாக லட்சுமி நாராயண யோகம் ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது. இதனால் எந்த ஐந்து ராசிகளுக்கு சாதகமான காலம் அமையலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

லட்சுமி நாராயண ராஜயோகம்
வேத ஜோதிட மரபின்படி, புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இணையும் போது லட்சுமி நாராயண யோகம் உருவாவதாகக் கூறப்படுகிறது. புதன் அறிவு, பேச்சாற்றல், வணிகம், தகவல் தொடர்பு ஆகியவற்றைக் குறிக்கும் கிரகமாகப் பார்க்கப்படுகிறது. சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், மகிழ்ச்சி, காதல், அழகு ஆகியவற்றுடன் தொடர்புடையவர். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை ஒருவரின் பொருளாதார நிலை, தொழில் முன்னேற்றம், வணிக வாய்ப்புகளில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது ஜோதிட நம்பிக்கை. குறிப்பாக இரு கிரகங்களும் வலுவான நிலையில் இருக்கும்போது இந்த யோகத்தின் பலன்கள் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
நவம்பர் 22ல் உருவாகும் யோகம்
ஜோதிடக் கணக்கீட்டின்படி, சுக்கிரன் நவம்பர் 22ஆம் தேதி மாலை 5.21 மணிக்கு கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். ஏற்கெனவே புதன் துலாம் ராசியில் இருப்பதால், சுக்கிரனின் வருகையுடன் இரு கிரகங்களும் ஒரே ராசியில் இணைகின்றன. இதுவே லட்சுமி நாராயண யோகமாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சேர்க்கை டிசம்பர் 2ஆம் தேதி வரை நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் புதன் விருச்சிக ராசிக்குச் செல்கிறார். எனவே, இந்தக் காலகட்டத்தைச் சில ராசிகளுக்குச் சாதகமான நேரமாக ஜோதிடர்கள் கருதுகின்றனர்.
Debt Relief Astrology: கடன் சுமையிலிருந்து விடுபடும் அதிர்ஷ்டம்.. 2027ல் முன்னேறப்போகும் 4 ராசிகள்!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படுகிறது. பணியிடத்தில் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அமையலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நிலுவையில் இருந்த பணிகள் முடிவுக்கு வரலாம். உழைப்புக்கான அங்கீகாரம் கிடைப்பதுடன், புதிய வாடிக்கையாளர்கள் மூலம் தொழில் விரிவடைய வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கலாம் என்றாலும், ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதால் செலவுகளும் உயரக்கூடும். எனவே, பணத்தைத் திட்டமிட்டு செலவிடுவது நல்லது என ஜோதிடப் பலன்கள் தெரிவிக்கின்றன.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு படைப்பாற்றல், சிந்திக்கும் திறன் அதிகரிக்கும் காலமாக இது அமையலாம். ஊடகம், எழுத்து, சந்தைப்படுத்துதல், தகவல் தொடர்பு போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். ஏற்கெனவே செய்த முதலீடுகள் மூலம் பலன் கிடைக்கலாம் என்றாலும், புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு வேலை தேடுபவர்களுக்கு சாதகமான தகவல்கள் கிடைக்கலாம். பணியில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் அல்லது வேலை மாற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகலாம். தொழில் செய்பவர்கள் புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் காணலாம். பேச்சாற்றலும் முடிவெடுக்கும் திறனும் சாதகமாக அமையலாம் எனக் கூறப்படுகிறது.
துலாம்
இந்த யோகத்தில் சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாமில் சஞ்சரிப்பதால், துலாம் ராசிக்காரர்களுக்கு இது சிறப்பான காலமாகக் கருதப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தனித்திறன் அதிகரிக்கலாம். பணியிடத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழில் செய்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் வருமான வழிகள் உருவாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வாழ்க்கைத் துணையுடன் இணக்கமும் அதிகரிக்கலாம் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.













