கும்ப ராசி பிப்ரவரி 2026: சோதனைகளை வென்று சாதனை படைக்கப்போகும் கும்பம்!
பிப்ரவரி மாத கிரக நிலைகளின் அடிப்படையில் கும்ப ராசியினருக்கான பிப்ரவரி மாத ராசி பலன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கும்ப ராசி பிப்ரவரி 2026:
பிப்ரவரி மாத கிரக நிலைகளின் அடிப்படையில் ராகு பகவான் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். சனி பகவான் 2ஆம் வீட்டிலும், குரு பகவான் 5ஆம் வீட்டிலும், கேது பகவான் 7ஆவது வீட்டிலும் சஞ்சாரம் செய்கின்றனர். செவ்வாய், சூரியன், புதன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் விரைய ஸ்தானம் என்று சொல்லப்படும் 12ஆவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்றன.
உத்தியோகம் மற்றும் தொழில்:
அலுவலகத்தில் அதிக பணிச்சுமை அதிகரிக்க கூடும். வழக்கத்தை விட கூடுதலமாகவும், கடினமாகவும் உழைக்க வேண்டி வரும். எனினும் இறுதியில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவும், வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நஷ்டம் ஏற்படக் கூடும். கவனச்சிதறல் இன்றி உழைத்தால் சவால்களை முறியடிக்கலாம்.
குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் வரலாம். கணவன் மனைவிக்கிடையில் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும். காதல் விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை அளிக்கும்.
கல்வி மற்றும் நிதி நிலை:
மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் படித்தால் வெற்றி வாகை சூடலாம். பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் செலவுகள் அதிகமாக இருந்தாலும், பிற்பகுதியில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வீண் அலைச்சல் ஏற்படக் கூடும். உடல் சோர்வு உண்டாகலாம்.