MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Zodiac Signs: சனி பகவானின் அருளால் குபேர யோகம் பெறப்போகும் 4 ராசிகள்.! இனி பணத்திற்கு தட்டுப்பாடே இருக்காது!

Zodiac Signs: சனி பகவானின் அருளால் குபேர யோகம் பெறப்போகும் 4 ராசிகள்.! இனி பணத்திற்கு தட்டுப்பாடே இருக்காது!

சனி பகவானின் தற்போதைய கிரக மாற்றங்களால், நான்கு ராசிக்காரர்கள் அபரிமிதமான நிதி வளர்ச்சியைப் பெற உள்ளனர். இந்த ராசிக்காரர்களுக்கு பண நெருக்கடிகள் நீங்கி, கடன்கள் அடைபட்டு, புதிய வருமான வழிகள் மூலம் செல்வம் பெருகும்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 20 2026, 08:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
நல்ல காலம் பொறக்குது.! நல்ல காலம் பொறக்குது.!
Image Credit : Asianet News

நல்ல காலம் பொறக்குது.! நல்ல காலம் பொறக்குது.!

ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் ‘கர்ம வினைகளின் நீதிபதி’ என்று அழைக்கப்படுகிறார். அவர் ஒருவரது உழைப்பையும், நேர்மையையும் சோதித்து, அதற்குரிய பலன்களை அள்ளி வழங்குவதில் வல்லவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. சனி பகவான் ஒரு ஜாதகத்தில் சாதகமான நிலையை அடையும் போது, பிச்சைக்காரரையும் கோடீஸ்வரராக்கும் ஆற்றல் கொண்டவர் என்கின்றன ஜோதிட நூல்கள். அந்த வகையில், தற்போதைய கிரக நிலைகளின் மாற்றத்தால், சனி பகவானின் முழுமையான அருள் பார்வையைப் பெற்று, நிதியமைப்பில் பிரம்மாண்ட வளர்ச்சியை அடையப் போகும் மேலும் 4 முக்கிய ராசிகளைப் பற்றி இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மிதுன ராசி: பாக்கிய ஸ்தான சனியால் பொன், பொருள் சேர்க்கை
Image Credit : Getty

மிதுன ராசி: பாக்கிய ஸ்தான சனியால் பொன், பொருள் சேர்க்கை

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவான் ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் பலம் பெற்று விளங்குகிறார். இதனால் துரதிர்ஷ்டங்கள் நீங்கி, அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசத் தொடங்கும். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் அதிவேகமாக நிறைவேறும்.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இதுவரை உங்களை வாட்டி வதைத்த பண நெருக்கடிகள் அனைத்தும் பனி போல் விலகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் பெரிய தொகையை லாபமாகப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சம்பள உயர்வும், தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் மூலமாக அசுர லாபமும் கிடைக்கும். இனி வரும் காலத்தில் பணப் பற்றாக்குறை என்ற சொல்லுக்கே உங்கள் வாழ்க்கையில் இடம் இருக்காது என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள்.

36
கன்னி ராசி: ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சனியின் விஸ்வரூபம்
Image Credit : Asianet News

கன்னி ராசி: ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சனியின் விஸ்வரூபம்

கன்னி ராசி நேயர்களுக்கு சனி பகவான் ஆறாம் வீடான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். ஜோதிட விதிகளின்படி, அசுப கிரகங்கள் 3, 6, 11 ஆகிய மறைவிடங்களில் அமையும் போது அபரிமிதமான நற்பலன்களை வாரி வழங்குவார்கள். அந்த வகையில், இந்த காலகட்டம் உங்களுக்குப் பண மழையைத் தரப்போகிறது.

முக்கியமாக, பல வருடங்களாக உங்களை நிம்மதியிழக்கச் செய்த நீண்ட காலக் கடன்கள் அனைத்தும் முழுமையாக அடைபடும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து லாபகரமான பாதையில் பயணிப்பீர்கள். புதிய தொழில் முதலீடுகள் கண்டிப்பாக கைகொடுக்கும். லாட்டரி, ஷேர் மார்க்கெட் அல்லது எதிர்பாராத விபத்து காப்பீடு மூலமாகக் கூட திடீர் பண வரவு உண்டாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

46
விருச்சிக ராசி: அர்த்தாஷ்டம சனியின் பிடியில் இருந்தும் விடுபடும்
Image Credit : Asianet News

விருச்சிக ராசி: அர்த்தாஷ்டம சனியின் பிடியில் இருந்தும் விடுபடும்

தன வரவு விருச்சிக ராசிக்காரர்களுக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்துள்ளார். இது அர்த்தாஷ்டம சனியாகக் கருதப்பட்டாலும், சனி பகவான் உங்கள் ராசிக்கு சுப பலன்களைக் கொடுக்கும் விசேஷ அமைப்பில் உள்ளதால், உங்களுக்குப் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில், விவசாயம் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்கு இந்த காலம் ஒரு பொற்காலமாகும். புதிய வீடு அல்லது நிலம் வாங்குவதற்கான யோகம் கைகூடி வரும் என்கின்றன ஜோதிட நூல்கள். உங்களின் சேமிப்பு கணக்கில் பணம் கணிசமாக உயரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவோடு புதிய தொழில் தொடங்கி, அதில் குறுகிய காலத்திலேயே பெரும் லாபத்தைக் காண்பீர்கள்.

56
தனுசு ராசி: தன ஸ்தான சனியால் தடையற்ற குபேர யோகம்
Image Credit : Asianet News

தனுசு ராசி: தன ஸ்தான சனியால் தடையற்ற குபேர யோகம்

தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பகவான் இரண்டாம் வீடான தன, வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஏழரை சனியின் பிடியில் இருந்து முழுமையாக விடுபட்ட உங்களுக்கு, இந்த தன ஸ்தான சனி பொருளாதாரத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தப் போகிறார்.

உங்களது பேச்சுத் திறமையால் புதிய தொழில் வாய்ப்புகளையும், தன லாபங்களையும் பெரும் அளவில் ஈட்டுவீர்கள். கையில் பணம் எப்போதும் புழங்கிக் கொண்டே இருக்கும் அளவிற்கு வருமான வழிகள் பெருகும். சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். உங்களின் சமூக அந்தஸ்து உயர்வதுடன், வங்கிக் கடன்கள் அனைத்தையும் அடைத்துவிட்டு நிம்மதியான, ஆடம்பரமான வாழ்க்கையை வாழத் தொடங்குவீர்கள்.

66
இதையும் செய்தால் நீங்கதான் அம்பானி
Image Credit : Asianet News

இதையும் செய்தால் நீங்கதான் அம்பானி

சனி பகவானின் அருளைத் தக்க வைத்துக் கொள்ள சனிக்கிழமைகளில் ஏழை எளியோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அன்னதானம் அல்லது உங்களால் இயன்ற பண உதவிகளைச் செய்து வாருங்கள். இது சனியின் சுப பார்வையால் கிடைக்கும் செல்வத்தை உங்கள் வம்சத்திற்கே நிலைக்கச் செய்யும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
ஆன்மீகம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கும்ப ராசிக்காரர்களே.. கவலை வேண்டாம்! நவம்பர் 6 முதல் வாழ்க்கையில் அதிரடி திருப்பம்; பணம் குவியுதாம்
Recommended image2
Gajakesari Yoga : குரு - சந்திரன் சமசப்தம பார்வையால் உருவாகும் கஜகேசரி யோகம்... இந்த 5 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட்!
Recommended image3
Parihara Temples : 12 ராசிகளுக்கும் ஏற்ற பரிகாரக் கோவில்கள்.. உங்க ராசிக்கு எந்த கோவில் தெரியுமா?
Related Stories
Recommended image1
Astrology Tamil: சுக்கிர புத்தி ஆரம்பம்.! அடுத்த 6 மாதம் 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! இனி இவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாகும்.!
Recommended image2
Aadi Sale: ஆடி தள்ளுபடி நிஜமா? ஏமாறுவதற்கு முன் இதை கண்டிப்பா படிங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved