- Home
- Astrology
- மகம் நட்சத்திரத்தில் கேது பெயர்ச்சி.! 5 ராசிகளுக்கு எச்சரிக்கை.! நிதி இழப்பு, வேலை பறிபோகும் அபாயம்.!
மகம் நட்சத்திரத்தில் கேது பெயர்ச்சி.! 5 ராசிகளுக்கு எச்சரிக்கை.! நிதி இழப்பு, வேலை பறிபோகும் அபாயம்.!
Ketu Magha Natchathira Peyarchi 2026 : கேது பகவான் விரைவில் மகம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இது சில ராசிகளுக்கு அசுப பலன்களைத் தரும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

Ketu Magha Natchathira Peyarchi 2026
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றி வருகின்றன. அந்த வகையில் ஏப்ரல் 22ஆம் தேதி கேது பகவான் பெயர்ச்சி நடக்க உள்ளது. அவர் தனது சொந்த நட்சத்திரமான மக நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு அசுப பலன்களை கொடுக்க கூடும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
மேஷம்
கேது பகவான் மக நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையும் பொழுது மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான ஆற்றல்கள் கிடைக்கக்கூடும். ஏப்ரல் 22 தொடங்கி மனக்குழப்பங்கள் அதிகரிக்கலாம். கேதுவின் அசுப தாக்கத்தால் எடுக்கும் காரியங்களில் தாமதங்கள் ஏற்படக்கூடும். குழந்தைகள் குறித்த கவலைகள் அதிகரிக்கும். குடும்ப உறவில் பிரச்சனைகள் ஏற்படலாம். முதலீடுகளின் பொழுது கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் இழப்புகளை சந்திக்க நேரிடலாம்.
மிதுனம்
ஏப்ரல் மாதம் நடக்கும் கேதுவின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்ப உறவுகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். சகோதரர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மன குழப்பங்கள் அதிகரிக்கலாம். வேலை இழக்கும் அபாயமும் உள்ளது. பணியிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். பண விஷயங்கள், ஆன்லைன் பரிவர்த்தனைகள், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் இருக்க வேண்டும். கடன் வாங்குவதையோ, கொடுப்பதையோ தவிர்க்கவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு கேதுவின் பெயர்ச்சி எதிர்மறையான ஆற்றல்களைக் கொடுக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அடிக்கடி எதிர்பாராத பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள், சங்கடங்கள் ஏற்படும். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். நிதி சார்ந்த சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுடைய ஆடம்பரமான அல்லது விலை உயர்ந்த பொருட்கள் மீது கவனத்துடன் இருக்க வேண்டும். அது காணாமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு.
விருச்சிகம்
கேதுவின் மக நட்சத்திர பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மக நட்சத்திரத்தில் கேது அமர்வதால் தொழில் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படலாம். வேலையிழப்பு அல்லது பணியிட மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பெற்றோர் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். வேலையில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைகளைத் தரும்.
மீனம்
கேதுவின் மக நட்சத்திரப் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு மன நிம்மதியை கெடுக்க கூடும். தேவையற்ற அலைச்சல்களால் உடல் சோர்வு ஏற்படும். கடன் தொல்லைகள் அதிகரிக்கலாம். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வேலையை காப்பாற்றிக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே தகராறுகள் ஏற்படக்கூடும். தொழில் செய்து வருபவர்கள் பிரச்சனைகளை சந்திக்கலாம். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கலாம். போட்டி, பொறாமைகள் அதிகரிப்பதால் தொழிலில் மந்த நிலை உருவாகலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

