MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Ketu Peyarchi 2026: ஆட்டத்தை ஆரம்பிக்கும் கேது பகவான்.! டிசம்பர் வரை இந்த ராசிகளுக்கு ரொம்ப கஷ்டம்.! உங்க ராசி இருக்கா?

Ketu Peyarchi 2026: ஆட்டத்தை ஆரம்பிக்கும் கேது பகவான்.! டிசம்பர் வரை இந்த ராசிகளுக்கு ரொம்ப கஷ்டம்.! உங்க ராசி இருக்கா?

Ketu Magha Natchathira Peyarchi 2026 : கேதுவின் நட்சத்திரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சவால்களை அதிகரிக்கலாம். மகம் நட்சத்திரத்தில் கேது சஞ்சரிப்பதால், அடுத்த 8 மாதங்களுக்கு பண இழப்பு, திடீர் செலவுகள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வரலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 07 2026, 11:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ketu Magha Natchathira Peyarchi 2026
Image Credit : Asianet News

Ketu Magha Natchathira Peyarchi 2026

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, கேது மார்ச் 29, 2026 அன்று மகம் நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இந்த சஞ்சாரம் டிசம்பர் 5 வரை தொடரும். ஜோதிடத்தில் கேது ஒரு அசுப கிரகம் என்பதால், சில ராசிகளுக்கு இது சிக்கலைத் தரும். இந்த நேரத்தில் திடீர் செலவுகள் அல்லது நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், பண விஷயங்களில் எச்சரிக்கை தேவை. கேதுவின் நட்சத்திரப் பெயர்ச்சியால் பாதிப்புக்குள்ளாகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் தங்கள் உடல்நலம் மற்றும் பண விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம். உங்களின் திட்டங்கள் தப்பாகப் போகலாம். வேலைப்பளு மனச்சோர்வை உண்டாக்கும். எந்த முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம். விநாயகர் வழிபாடு தடைகளை நீக்கும்.

Related Articles

Related image1
This Week Rasi palan (ஏப்ரல் 5 - 11): இந்த வாரம் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 7 ராசிகள்.! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான முழு ஜோதிட அலசல்.!
Related image2
மீன ராசியில் சந்திக்கும் 4 கிரகங்கள்.! இந்த 3 ராசிகளுக்கு பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கப்போகுது.! உஷாரா இருங்க.!
35
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சவாலாக இருக்கலாம். தொழில் முயற்சிகளில் தடைகள், பண விஷயங்களில் ஏற்ற இறக்கங்கள் வரலாம். பெரிய முதலீடுகள் அல்லது செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. சின்ன விஷயங்கள்கூட குடும்பத்தில் டென்ஷனை அதிகரிக்கலாம், எனவே பொறுமையாக இருங்கள். வரவு செலவு கணக்குகளில் கவனமாக இருக்கவும்.

45
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் எதிர்பாராத சிக்கல்களைச் சந்திக்கலாம். திடீரென பண இழப்பு அல்லது செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புதிய திட்டங்கள் அல்லது பயணத் திட்டங்களில் தடைகள் வரலாம். குடும்பத்திலும் டென்ஷனான சூழல் இருக்கலாம். அதனால், ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

55
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் சற்று நிலையற்றதாக இருக்கலாம். உங்கள் நிதி நிலையில் ஏற்ற இறக்கங்கள் வரலாம், முதலீடுகளில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. மனதில் ஒருவித குழப்பத்தை நீங்கள் உணரலாம். உறவுகளில் இடைவெளி அல்லது தவறான புரிதல்கள் ஏற்படலாம். எனவே, நிதானத்தைக் கடைப்பிடிப்பது முக்கியம். தியானம் மற்றும் குலதெய்வ வழிபாடு மன அமைதியைத் தரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: அடுத்த 3 மாதங்களுக்கு 6 ராசிகளுக்கு ராஜயோகம்.! செல்வமும் செல்வாக்கும் உச்சத்துக்கு போகுதாம்.! ஏன் தெரியுமா?
Recommended image2
Vastu Tips: வீட்டில் வாஸ்து தோஷமா? இந்த 5 எளிய வழிகளில் சரிசெய்யலாம்.!
Recommended image3
நண்பனா? எதிரியா? உங்கள் ராசிப்படி இவர்களிடம் மட்டும் உஷாராக இருங்கள்! 12 ராசிகளின் ரகசியங்கள்!
Related Stories
Recommended image1
This Week Rasi palan (ஏப்ரல் 5 - 11): இந்த வாரம் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 7 ராசிகள்.! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான முழு ஜோதிட அலசல்.!
Recommended image2
மீன ராசியில் சந்திக்கும் 4 கிரகங்கள்.! இந்த 3 ராசிகளுக்கு பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கப்போகுது.! உஷாரா இருங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved