MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: குருவுடன் சேர்ந்து அள்ளிக்கொடுக்கும் கேது.! 4 ராசிகள் காட்டில் பணமழை.! முதலீடுகளும் டபுள் லாபத்தை தருமாம்.!

Astrology: குருவுடன் சேர்ந்து அள்ளிக்கொடுக்கும் கேது.! 4 ராசிகள் காட்டில் பணமழை.! முதலீடுகளும் டபுள் லாபத்தை தருமாம்.!

குரு மற்றும் கேதுவின் சாதகமான சேர்க்கையால்  4 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு, தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு லாபங்கள் கிடைக்கும். குரு பெயர்ச்சிக்குப் பிறகு தொடங்கும் இந்த யோக காலம், இவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : May 30 2026, 08:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் திடீர் முன்னேற்றங்களை வழங்கும்
Image Credit : Asianet News

எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் திடீர் முன்னேற்றங்களை வழங்கும்

ஜோதிடத்தில் குரு அறிவு, செல்வம், வளர்ச்சி ஆகியவற்றின் காரகராக கருதப்படுகிறார். அதே நேரத்தில் கேது ஆன்மிகம், மறைமுக லாபம், எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் திடீர் முன்னேற்றங்களை வழங்கும் கிரகமாக பார்க்கப்படுகிறார். இந்த இரண்டு கிரகங்களின் சாதகமான தாக்கம் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, கேது ஜாதகத்தில் 3, 6, 11 போன்ற உபசய ஸ்தானங்களில் அமர்ந்திருந்தாலோ அல்லது குரு போன்ற சுப கிரகங்களின் பார்வையை பெற்றிருந்தாலோ, எதிர்பாராத பணவரவு, தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு லாபங்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். குரு பெயர்ச்சிக்கு பின் கேதுவின் அருளும் கிடைப்பதால் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு இந்த யோகம் சிறப்பாக அமையும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு கேது மற்றும் குருவின் இணைந்த பலன் சிறப்பாக அமையும். நீண்ட நாட்களாக முடங்கியிருந்த பண வரவுகள் கைக்கு வந்து சேரலாம். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பங்குச்சந்தை, நிலம் மற்றும் நீண்டகால முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் பொருளாதார நிலை மேம்பட்டு சேமிப்பு அதிகரிக்கும். தற்போதைய நிலையில் ஜூன் மாதத்தில் இருந்து இந்த அதிர்ஷ்ட பலனை ரிஷப ராசியினர் பெருவார்கள்.

Related Articles

Related image1
Astrology: குரு பலம் ஏழரை சனி பாதிப்பை நீக்குமா? இந்த 3 ராசிகளுக்கு சனி பயமே இல்லை!
Related image2
Astrology: லாபத்தை அள்ளிக்கொடுக்கும் களத்திர குரு.! எந்த தொழில் செய்தாலும் கோடிகள் குவியுமாம்.! எந்த ராசிகளுக்கு தெரியுமா?
37
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வகையில் வருமானம் அதிகரிக்கும் காலமாக இது அமையலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும் சாத்தியம் உள்ளது. கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் தற்போது பலன் தர தொடங்கலாம். திடீர் பணவரவு உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும். ஜூன் மாதத்தில் தொடங்கும் இந்த யோக காலத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டால் பொருளாதார நிலை மேம்படும். குருவின் பார்வையால் நீங்கள் அம்பானி ஆகப்போறிங்க மக்களே.!

47
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு கேது வழங்கும் யோகம் மிகவும் சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகள், தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் கிடைக்கும். கடன் சுமைகள் குறையலாம். புதிய முதலீடுகள் எதிர்பார்த்ததை விட அதிக வருமானத்தை கொடுக்கக்கூடும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குருபெயர்ச்சிக்கு பிறகு தொடங்கும் இந்த நல்ல நேரம் உங்களுக்கு சேர வேண்டிய செல்ல செழிப்பை மீட்டு தரும்.

57
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் அதிர்ஷ்டமான மாற்றங்களை கொண்டு வரலாம். தொழிலில் உயர்வு, சம்பள அதிகரிப்பு மற்றும் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. குருவுடன் சேர்ந்து கேதுவும் அள்ளிக்கொடுப்பதால், மகர ராசியினருக்கு இது ஒரு பொற்காலம்.

67
கேது தரும் யோகங்கள் என்ன?
Image Credit : Asianet News

கேது தரும் யோகங்கள் என்ன?

கேது உங்கள் ஜாதகத்தில் நல்ல வீட்டில் (3, 6, 11) அமைந்திருந்தாலோ அல்லது குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்களின் பார்வையை பெற்றிருந்தாலோ, வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கலாம். திடீர் பணவரவு, தொழில் முன்னேற்றம், புகழ், செல்வாக்கு மற்றும் ஆன்மிக வளர்ச்சி போன்ற பலன்களை கேது வழங்குவார். சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத வழிகளில் வெற்றியும் செல்வமும் கிடைக்கச் செய்வது கேதுவின் தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.

77
புதிய வாய்ப்புகள் திறக்கப்படலாம்
Image Credit : Chat GPT

புதிய வாய்ப்புகள் திறக்கப்படலாம்

குருவின் அருளும் கேதுவின் யோகமும் இணையும் போது வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் திறக்கப்படலாம் என்று ஜோதிடம் கூறுகிறது. ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மகரம் ராசிக்காரர்கள் இந்த காலத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டால் பொருளாதார முன்னேற்றத்தையும், முதலீட்டு லாபங்களையும் அனுபவிக்கலாம். இருப்பினும், எந்த முதலீட்டு முடிவையும் எடுப்பதற்கு முன் நிதி ஆலோசகரின் கருத்தை பெறுவது நல்லது.

குறிப்பு: இது ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட தகவல் மட்டுமே. பலன்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதக அமைப்பைப் பொறுத்து மாறுபடலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vishkumbh Yogam 2026: மிகவும் ஆபத்தான விஷகும்ப யோகம்.! கண்டத்தில் சிக்கப்போகும் 3 ராசிகள்.! கடும் எச்சரிக்கை.!
Recommended image2
Today Rasi Palan: இன்றைய ராசி பலன் - மேஷம் முதல் மீனம் வரை.! 12 ராசிகளுக்கான ஷர்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள்.!
Recommended image3
மிதுன சங்கராந்தி 2026: சூரியன் ராசி மாறுகிறார்... எந்த ராசிகளுக்கு சோதனை?
Related Stories
Recommended image1
Astrology: குரு பலம் ஏழரை சனி பாதிப்பை நீக்குமா? இந்த 3 ராசிகளுக்கு சனி பயமே இல்லை!
Recommended image2
Astrology: லாபத்தை அள்ளிக்கொடுக்கும் களத்திர குரு.! எந்த தொழில் செய்தாலும் கோடிகள் குவியுமாம்.! எந்த ராசிகளுக்கு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved