- Home
- Astrology
- Karthigai Matha Rasi Palan: மீன ராசி நேயர்களே, தொழிலில் வெற்றிகளை குவிப்பீர்கள்.! அம்பானியாகப் போறீங்க.!
Karthigai Matha Rasi Palan: மீன ராசி நேயர்களே, தொழிலில் வெற்றிகளை குவிப்பீர்கள்.! அம்பானியாகப் போறீங்க.!
Karthigai Matha Rasi Palan for Meena rasi: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கார்த்திகை மாதம் 2025 - மீன ராசி பலன்கள்
கார்த்திகை மாதம் மீன ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் முக்கியமான மாதமாக இருக்கும். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதன் காரணமாக ஓரளவு விடுதலை கிடைக்கும் மாதமாக இது அமையும்.
கிரக நிலைகள்:
ராசிநாதன் குரு பகவான் மாதத்தின் பெரும் பகுதி வக்ர நிலையில் சஞ்சரிப்பதால் உத்தியோகம் மற்றும் தொழிலில் நேர்மறையான ஏற்றங்கள் உண்டாகும். சனி பகவான் முதல் வீட்டில் சஞ்சரிப்பதால் சற்று கடின உழைக்க வேண்டிய வரலாம். சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகியோர் அதிர்ஷ்டத்தையும், தொழில் முன்னேற்றத்தையும் கொடுப்பார்.
பொதுவான பலன்கள்:
இந்த மாதம் தனிப்பட்ட முறையில் உங்கள் செல்வாக்கும் கௌரவம் அதிகரிக்கும். உங்கள் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகம், தொழில், கல்வி என அனைத்து விதத்திலும் ஏற்றம் உண்டாகும். பல விஷயங்களில் அனுகூலத்தை காண்பீர்கள். சனியின் தாக்கம் குறைந்து வருவதால், நல்ல பலன்கள் கிடைக்கும். இருப்பினும் கவனமும், நிதானமும் தேவை.
நிதி நிலைமை:
வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். முதலீடுகள் நல்ல பலன்களை தரலாம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் நிதி நிர்வாகத்தில் கூடுதல் கவனம் தேவை. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். நீண்ட கால திட்டங்களில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் லாபங்களை தரும். வீடு, நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வேலை மற்றும் தொழில்:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது ஏற்றமான காலமாகும். கடின உழைப்புக்கான அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உங்கள் நிலைமை உயரும். தொழிலில் அதிக ஏற்றமும், அனுகூலமும் ஏற்படும் மாதமாக இருக்கும். வணிகப் பயணங்கள் லாபத்தை பெற்றுத்தரும். கூட்டாளிகளுக்கான உணவு வலுப்பெற்று வியாபாரத்தில் வருமானம் பெருகும்.
குடும்ப உறவுகள்:
வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். திருமண உறவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் காதல் நிலைத்திருக்கும். காதல் உறவுகளுக்கு மாதத்தின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும். சகோதர சகோதரிகளுடன் உறவு இனிமையாக இருக்கும். ஆனால் ஈகோ மோதல்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சுப செய்திகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
ஆரோக்கியத்தை பொறுத்தவரை இந்த மாதம் நன்றாக இருந்தாலும், ஏதாவது ஒரு தொற்று நோய் உங்களை சிக்கலில் ஆழ்த்தலாம். அஜீரணம் போன்ற சிறு சிறு பிரச்சனைகள் வரக்கூடும். ஆரோக்கியமான உணவு, சுத்தமான தண்ணீர் ஆகியவற்றை உட்கொள்வது அவசியம். மன அழுத்தத்தை குறைக்க தியானம் யோகா செய்யலாம். மாணவர்களுக்கு இது ஒரு நல்ல மாதமாகும். கடின உழைப்பால் வெற்றியைப் பெறுவீர்கள்.
பரிகாரங்கள்:
ஸ்ரீ விஷ்ணு நாராயணரை வழிபடுவது நன்மை பயக்கும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உங்களால் முடிந்த உதவிகள், நோட்டு, புத்தகங்கள், எழுதுப் பொருட்களை வாங்கி கொடுக்கலாம். குலதெய்வத்தை வழிபடுவது நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் தரும். சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)