MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Jan 08 Kadaga Rasi Palan: கடக ராசி நேயர்களே, இன்று நீங்கள் அடிக்கும் பந்துகள் எல்லாமே சிக்ஸர் தான்.!

Jan 08 Kadaga Rasi Palan: கடக ராசி நேயர்களே, இன்று நீங்கள் அடிக்கும் பந்துகள் எல்லாமே சிக்ஸர் தான்.!

January 08, 2026 Kadaga Rasi Palangal: ஜனவரி 08, 2026 கடக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Jan 07 2026, 05:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
கிரக நிலைகள்:
Image Credit : stockPhoto

கிரக நிலைகள்:

கடக ராசி நேயர்களே, சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திலும், குரு பகவான் லாப ஸ்தானத்திலும், சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் அமர்வது சாதகமான நிலையை ஏற்படுத்துகிறது.

பொதுவான பலன்கள்:

சந்திர பகவானின் நிலை காரணமாக நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்களை இன்று துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சகோதர மற்றும் சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். குறுகியதூரப் பயணங்கள் செல்ல நேரிடலாம். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

நிதி நிலைமை:

குருவின் பார்வையால் பணப்புழக்கம் சீராக இருக்கும். நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாக வாய்ப்பு உள்ளது. பங்குச்சந்தை அல்லது புதிய முதலீடுகளை செய்வதற்கு முன்னர் நிதானம் தேவை. தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது நல்லது.

தனிப்பட்ட வாழ்க்கை:

வாழ்க்கைத் துணையுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கலாம். எனவே விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதி தரும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்கள் ஆலோசனையைத் தேடி வருவார்கள். அஜீரணக் கோளாறுகள், ஜீரண மண்டலம் தொடர்பான சிறு உபாதைகள் தோன்றி மறையலாம். எனவே உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் தேவை.

பரிகாரம்:

மன அமைதி பெற அம்பிகையை வழிபடுவது நல்லது. அருகில் உள்ள அம்மன் ஆலயங்களுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். கோயிலின் வெளியில் அமர்ந்திருக்கும் யாசகர்களுக்கு உணவு தானமாக வழங்குவது தோஷங்களை நீக்கி நற்பலன்களைத் தரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
இன்றைய இராசி பலன்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
மிதுன ராசியில் வக்ர நிவர்த்தியடைந்த குரு பகவான்.! இன்று முதல் 4 ராசிகளின் வாழ்வில் வசந்தம் வீசும்.! கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.!
Recommended image2
ராகு கேது உருவாகும் கால சர்ப்ப யோகம்.! மார்ச் 26 வரை இந்த ராசிகளுக்கு டபுள் ராஜயோகம்.!
Recommended image3
2026 பரபாவ ஆண்டு எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தரும்? மேஷம் to மீனம் வரை, 12 ராசிகளுக்குமான தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்.!
Related Stories
Recommended image1
Chaturgrahi Yog: 100 ஆண்டுகளுக்குப் பின் சனியின் வீட்டில் சங்கமிக்கும் 4 கிரகங்கள்.! ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசிகள்.!
Recommended image2
2026-ல் உலக அழிவு தொடங்கும்.! 2026-ல் நடக்கப்போகும் மர்மங்கள்.! பாபா வங்காவின் அதிர வைக்கும் 5 கணிப்புகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved