MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • துலாம் ராசி 2026 குரு பெயர்ச்சி பலன்: குருவின் பார்வை பட்டாச்சு.. இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்; பணமழை பொழியும்!

துலாம் ராசி 2026 குரு பெயர்ச்சி பலன்: குருவின் பார்வை பட்டாச்சு.. இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்; பணமழை பொழியும்!

Jupiter Transit 2026 Libra Benefits in Tamil : 2026 குரு பெயர்ச்சியால் துலாம் ராசிக்கு கிடைக்கப்போகும் கோடீஸ்வர யோகம் மற்றும் குருவின் பார்வையால் உண்டாகும் சுப பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

3 Min read
Author : Rsiva kumar
Published : Apr 28 2026, 06:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்
Image Credit : social media

துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்

நவகிரகங்களில் ‘சுப கிரகம்’ என்றும் ‘பொன்னவன்’ என்றும் போற்றப்படும் குரு பகவான், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வே குரு பெயர்ச்சி எனப்படுகிறது. “குரு பார்க்க கோடி நன்மை” என்ற பழமொழிக்கு ஏற்ப, குருவின் பார்வை ஒரு ராசிக்குக் கிடைக்கும்போது, அந்த ராசியினரின் வாழ்வில் அதுவரை இருந்த இருள் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஜோதிட நம்பிக்கை. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டு நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியானது, துலாம் ராசி நேயர்களுக்கு ஒரு பொற்காலத்தின் தொடக்கமாக அமையப்போகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
துலாம் ராசி 2026 ராசிபலன்
Image Credit : Asianet News

துலாம் ராசி 2026 ராசிபலன்

கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த பொருளாதார நெருக்கடிகள், மனக்கவலைகள் மற்றும் தடைகள் அனைத்தையும் உடைத்தெறியும் விதமாக இந்த இடப்பெயர்வு அமையுள்ளது. குறிப்பாக, துலாம் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி ‘கோடீஸ்வர யோகத்தை’ அள்ளிக்கொடுக்கப் போகிறது என்று ஜோதிட வல்லுநர்கள் கணிக்கின்றனர். அதிர்ஷ்டம் உங்கள் கதவைத் தட்டப்போகும் இந்த ஆண்டில், உங்கள் ராசிக்கு குருவின் பார்வை எந்தெந்த நன்மைகளைச் செய்யப்போகிறது? செல்வம், செல்வாக்கு மற்றும் குடும்ப வாழ்வில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள் என்னென்ன? என்பது குறித்து விரிவாகக் காண்போம்.

38
2026 குரு பெயர்ச்சி - துலாம் ராசி பலன்
Image Credit : Getty

2026 குரு பெயர்ச்சி - துலாம் ராசி பலன்

2026 ஆம் ஆண்டு நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியானது துலாம் ராசியினருக்குப் பல முக்கியமான மாற்றங்களையும், வாழ்வியல் பாடங்களையும் கற்றுத்தரும் ஒரு காலக்கட்டமாக அமையப்போகிறது. இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10 ஆம் இடமான கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

பொதுவாக "பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும்" என்ற ஜோதிடப் பழமொழி மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் ஜோதிடர் குறிப்பிடுவது போல, மற்ற கிரகங்களான சனி மற்றும் கேதுவின் சாதகமான நிலைகள் இந்த குரு பெயர்ச்சியின் எதிர்மறைத் தாக்கத்தை வெகுவாகக் குறைத்து, உங்களுக்குப் பாதுகாப்பை வழங்க போகின்றன.

48
கோடீஸ்வர யோகம்
Image Credit : Getty

கோடீஸ்வர யோகம்

பத்தாம் இடம் என்பது வேலை, தொழில் மற்றும் கௌரவத்தைக் குறிக்கக்கூடிய இடமாகும். இங்கு குரு வரும் போது, நீங்கள் செய்யும் தொழிலில் அல்லது பார்க்கும் வேலையில் மிகுந்த கவனமுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டியது அவசியம். குறிப்பாக வேலையில் அலட்சியமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். மேலதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், அலுவலக விதிமுறைகளை சரியாகப் பின்பற்றுவதும் உங்கள் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள உதவும். இந்த நேரத்தில் புதிய முதலீடுகள் அல்லது பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்களில் ஈடுபடும்போது ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. "வேகத்தை விட விவேகமே முக்கியம்" என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.

58
துலாம் ராசி குரு பெயர்ச்சி
Image Credit : our own

துலாம் ராசி குரு பெயர்ச்சி

இருப்பினும் குருவின் பார்வை பலன்கள் உங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலையும், நன்மைகளையும் வழங்க போகின்றன. குரு பகவான் தனது 5, 7 மற்றும் 9 ஆம் பார்வைகளால் உங்கள் ராசியின் 2, 4 மற்றும் 6-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 2 ஆம் இடத்தை பார்ப்பதால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், வாக்கு சாதுர்யம் அதிகரிக்கும், மற்றும் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். 4 ஆம் இடத்தைப் பார்ப்பதன் மூலம் தாய் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கம் உண்டாகும். 

கன்னி ராசிக்கு ராஜயோகம்! 2026 குரு பெயர்ச்சியால் பணமழை பொழியப்போகுது.. அதிர்ஷ்டம் அள்ளப்போகும் கன்னி ராசியினர் நீங்களா?

68
குருவின் பார்வை பலன்கள்
Image Credit : Getty

குருவின் பார்வை பலன்கள்

நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த வீடு அல்லது சொத்து வாங்கும் முயற்சிகள் கைகூடும். 6 ஆம் இடத்தைப் பார்க்கும் குருவின் பார்வையால், உங்கள் உடல்நலத்தில் இருந்த மந்த நிலை நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மேலும், கடன் தொல்லைகள் குறையவும், எதிரிகளால் ஏற்பட்ட தொந்தரவுகள் மறையவும் இந்த குரு பார்வை துணை நிற்கும்.

கிரகங்களின் மெகா கூட்டணி: 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த 6 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்! கோடீஸ்வர யோகம் யாருக்கு?

78
துலாம் ராசி 2026 குரு பெயர்ச்சி பலன்கள்
Image Credit : our own

துலாம் ராசி 2026 குரு பெயர்ச்சி பலன்கள்

இந்தக் காலக்கட்டத்தில் துலாம் ராசியினர் தர்ம நெறிகளிலிருந்து விலகாமல் நடப்பது மிக முக்கியம். மற்றவர்களுக்கு உதவி செய்வதும், நேர்மையான வழியில் செயல்படுவதும் குருவின் அருளை முழுமையாக பெற்றுத்தரும். "ஓம் தர்ம ரூபாய நமஹ" என்ற மந்திரத்தை தினமும் 21 முறை உச்சரிப்பது உங்கள் மன உறுதிக்கு வலுசேர்க்கும்.

88
2026 குரு பெயர்ச்சி துலாம் ராசி
Image Credit : Chat gpt

2026 குரு பெயர்ச்சி துலாம் ராசி

உங்களின் கடின உழைப்பும், குருவின் பார்வை பலனும் இணைந்து, சவால்களைத் தாண்டி உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 2026 குரு பெயர்ச்சி என்பது துலாம் ராசியினருக்குப் பொறுமையையும், நிதானத்தையும் போதிப்பதோடு, குடும்பம் மற்றும் ஆரோக்கிய ரீதியாகப் பல சுப பலன்களை அள்ளித்தரும் ஒரு பொற்காலமாகத் திகழும்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Pre Match
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
IND chose to bowl.
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mercury Transit: 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தான் இனி.. புதன் நட்சத்திரப் பெயர்ச்சி பலன்கள் இதோ
Recommended image2
Astrology: ராகு கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறும் நட்சத்திரங்கள்.! இனி கடனும் இருக்காது, கவலையும் இருக்காது.!
Recommended image3
கும்ப ராசிக்காரர்களே.. கவலை வேண்டாம்! நவம்பர் 6 முதல் வாழ்க்கையில் அதிரடி திருப்பம்; பணம் குவியுதாம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved