- Home
- Astrology
- This Week Rasi Palan: மீன ராசிக்கு கிடைக்கப்போகும் பம்பர் பரிசு.! இந்த வாரம் ஒரு கலக்கு கலக்கப்போறீங்க.!
This Week Rasi Palan: மீன ராசிக்கு கிடைக்கப்போகும் பம்பர் பரிசு.! இந்த வாரம் ஒரு கலக்கு கலக்கப்போறீங்க.!
This Week Rasi Palan meenam: ஜனவரி 12 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

This Week Rasi Palan Meenam
மீன ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம சனி காரணமாக கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் இல்லம் திரும்புவார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். போட்டிகள் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். இந்த வாரம் அதிர்ஷ்டமும், ஆப்பும் கலந்த கலவையான பலன்கள் கிடைக்கும் வாரமாக அமையும்.
நிதி நிலைமை:
இந்த வாரம் வருமானம் சீராக இருந்தாலும் செலவுகளும் வரிசை கட்டி நிற்கும். பழைய கடன்களை திரும்ப செலுத்துவதற்கான புதிய வழிகள் தென்படும். புதிய கடன் வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். நீதிமன்ற வழக்குகளுக்காக அதிக பணம் செலவு செய்ய நேரிடலாம்.
ஆரோக்கியம்:
உடல்நிலையில் சிறு அசௌகரியங்கள் குறிப்பாக கால் வலி, தூக்கமின்மை ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. மாற்று சிகிச்சை முறையால் நோய்களுக்கு தீர்வு காண்பீர்கள். மன அமைதி மற்றும் ஆழ்ந்த தூக்கத்திற்கு யோகா அல்லது தியானம் செய்வது நல்லது.
கல்வி:
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மறதி ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எழுதி பழகும் முறையை கையாள்வது வெற்றிக்கு உதவும். உயர் கல்வி கற்க நினைப்பவர்களின் கனவு நனவாகும். கல்விக்காக வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் ஆசை நிறைவேறும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத பண வரவு கிடைக்கும். தொழில் போட்டியாளர்களை வீழ்த்தி முன்னேறிச் செல்வீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் இறுதியில் ஆர்டர்கள் கிடைக்கும். தொழிலில் இருப்பவர்கள் கணக்கு வழக்குகளில் வெளிப்படையாக இருக்கவும். அலுவலக வேலை பார்ப்பவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். வேலை மாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வார இறுதியில் நல்ல செய்திகள் கிடைக்கலாம்.
குடும்ப உறவுகள்:
திருமணத்தடைகள் அகலும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும் வீடு வாகனம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஆன்மீகப் பணிகளில் குடும்பத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தினருக்காக பணம் செலவு செய்ய நேரிடலாம். வார்த்தைகளில் கவனம் தேவை. பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். வீட்டில் சுப காரியங்கள் குறித்த பேச்சு வார்த்தைகள் தொடங்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
இந்த வாரம் உங்களுக்கு சந்திராஷ்டமம் இல்லை இருப்பினும் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசனை செய்து அதன் பின்னர் எடுப்பது நல்லது
பரிகாரங்கள்:
மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடுவது ஏழரை சனியின் தாக்கத்தை குறைக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அரச்சனை செய்து வழிபடவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

