- Home
- Astrology
- Numerology : இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மாடுமாதிரி உழைச்சாலும் சக்சஸ் லேட்டா தான் கிடைக்குமாம்
Numerology : இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மாடுமாதிரி உழைச்சாலும் சக்சஸ் லேட்டா தான் கிடைக்குமாம்
Birth Date Numerology : எண் கணிதத்தின்படி, சிலருக்கு வெற்றி என்பது மிகவும் தாமதமாக கிடைக்கிறது. தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சிரமங்களைச் சந்திக்கும் நபர்கள் யார்... யார் என்பதை பார்க்கலாம்.

Numerology Predictions
எண் கணிதத்தில் ஒவ்வொரு மூல எண்ணுக்கும் தனித்துவமான ஆற்றலும், வாழ்க்கைப் பாதையையும் தீர்மானிக்கும் சக்தியும் இருப்பதாக நம்பப்படுகிறது. பிறந்த தேதியின் (தேதி மட்டும்) இலக்கங்களை கூட்டி பெறப்படும் எண்ணே மூல எண் ஆகும். உதாரணமாக, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 4. அதேபோல் 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு மூல எண் 7. மேலும் 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு மூல எண் 8 ஆகும்.
எண் கணித நம்பிக்கையின்படி, சில மூல எண்களைக் கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றியை எளிதாக அடைய மாட்டார்கள். அவர்களின் ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் கடின உழைப்பும், பொறுமையும் அவசியமாக இருக்கும். அப்படிப்பட்ட மூன்று முக்கிய மூல எண்களைப் பற்றி பார்க்கலாம்.
மூல எண் 4
மூல எண் 4 கொண்டவர்கள் கட்டுப்பாடு, ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த வேலையையும் திட்டமிட்டு செய்வதில் இவர்களுக்கு தனி திறமை இருக்கும். ஆனால், அவர்கள் செலுத்தும் உழைப்புக்கு உடனடியாக பலன் கிடைப்பது அரிது.
பல நேரங்களில் இவர்களின் முயற்சியின் பாராட்டை மற்றவர்கள் பெற்றுவிடலாம். தொழில், வியாபாரம் அல்லது வேலைவாய்ப்பில் தடைகள் வந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து முன்னேறுவார்கள். காலம் செல்லச் செல்ல, இவர்களின் விடாமுயற்சியே வெற்றியையும், நல்ல பெயரையும் பெற்றுத்தரும்.
மூல எண் 7
மூல எண் 7 கொண்டவர்கள் அமைதியான சுபாவமும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த முடிவையும் அவசரப்படாமல் ஆராய்ந்து எடுப்பார்கள். ஆனால் அதிக யோசனை காரணமாக சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம்.
இவர்களின் வாழ்க்கைப் பயணம் மற்றவர்களை விட சற்று மெதுவாக நகரலாம். பல சவால்களை தனியாக எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம். இருப்பினும் அனுபவங்கள் இவர்களை மன உறுதியானவர்களாக மாற்றி, பின்னாளில் நிலையான வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.
மூல எண் 8
எண் கணிதத்தில் மூல எண் 8, சனி கிரகத்தின் தாக்கத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இந்த எண்ணைக் கொண்டவர்கள் வாழ்க்கையில் அதிக பொறுப்புகளையும், பல சோதனைகளையும் சந்திக்கக்கூடும்.
வேலை, தொழில் மற்றும் பண விஷயங்களில் மற்றவர்களை விட அதிகமாக உழைக்க வேண்டிய சூழல் உருவாகலாம். வெற்றி தாமதமாக வந்தாலும், அது நிலையானதாக இருக்கும் என்பது எண் கணிதத்தின் கருத்து. கடின உழைப்பு, பொறுமை மற்றும் விடாமுயற்சியால் உயர்ந்த பதவி, நல்ல மதிப்பு மற்றும் நீடித்த முன்னேற்றத்தை அடையக்கூடியவர்கள் இவர்களே.

