கண் திருஷ்டியால் தீராகஷ்டமா? நீங்க பிறந்த கிழமை தெரிந்தால் 'உடனடி' தீர்வு!!
Evil Eye Removal : உங்கள் மீது கண் திருஷ்டி இருப்பதை கண்டறியும் எளிய வழிகளை இங்கு காணலாம்.
Evil Eye Symptoms In Tamil
கண் திருஷ்டி என்றால் பிறருக்கு நம் மீது ஏற்படும் கெட்ட எண்ணங்களால் வரும் பாதிப்பு ஆகும். ஒருவருக்கு அவர் வாழ்வில் நடக்க வேண்டும் என நினைத்த விஷயங்கள் நடக்காமல் இருக்கலாம். அது பிறருக்கு நடக்கும்போது அதை கண்டு அந்த நபர் பொறாமை கொள்வதை கண் திருஷ்டி என்கிறார்கள்.
நம்மை சுற்றியிருப்பவர்களின் பொறாமை, ஏக்கம் உண்டாக்கும் எதிர்மறை ஆற்றல் நம் வாழ்வில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். இந்த கெட்ட விஷயங்களின் பிரதிபலிப்பு கண் திருஷ்டியால் தான் வருகிறது. அதனால் தான் நல்ல எண்ணம் கொண்டோர் மத்தியில் வாழ வேண்டும் என பெரியோர் கூறுவார்கள். கண் திருஷ்டியால் ஏற்படும் அறிகுறிகளை இங்கு காணலாம்.
இதையும் படிங்க: வீட்டிலும், வியாபாரத்திலும் ஏற்பட்ட கண் திருஷ்டியால் ஒரே கஷ்டமா? அடியோடு நீங்க பரிகாரம்..
Evil Eye Symptoms In Tamil
அனைத்திற்கும் பயம்:
எந்த காரணமும் இன்றி அனைத்து காரியங்களுக்கும் பயம் ஏற்படும். எப்போதும் கவலையாக உணர்வீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறாகிவிடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும். எப்போதும் பயம், பதற்றம் என கவலையோடு இருந்தால் உங்கள் மீது கண் திருஷ்டியின் பாதிப்புகள் உள்ளது.
விடாமல் துரத்தும் துரதிஷ்டம்:
உங்கள் வீட்டில் அல்லது உங்களுக்கு அடிக்கடி விபத்து நடந்தால் கண் திருஷ்டி உள்ளதென அர்த்தம். நீங்கள் தொட்ட காரியங்கள் நல்லபடியாக நடக்காது. தொடர் தோல்விகள் வரலாம். எல்லாமே கெட்ட விஷயங்களாகவே நடக்கும். சின்ன விஷயங்களுக்கு கூட பல தடைகள், பிரச்சனைகளை சந்திக்கலாம்.
Evil Eye Symptoms In Tamil
மனக்குழப்பம்:
உங்கள் மீது கண் திருஷ்டி பாதிப்பு இருந்தால் உங்களுடைய நடவடிக்கை மாறும். பழக்க வழக்கங்களில் திடீர் மாற்றங்கள் வரும். ஒரே மனநிலையில் இல்லாமல் மாறி மாறி பேசுவதும், செய்வதுமாக இருப்பார்கள். எப்போதும் மனம் தடுமாறி கொண்டே இருப்பதால் நன்மதிப்பை இழக்க நேரிடும். மன அமைதி இருக்காது. ஒரு முடிவை தெளிவாக எடுக்க முடியாதபடி குழப்பத்திலே இருப்பார்கள். எந்த வேலையையும் ஒருமனதாக இவர்களால் செய்ய முடியாது. கண் திருஷ்டி பாதிப்பு வாழ்க்கையையே மாற்றி போட்டு விடும்.
உடல் நலம்:
கொஞ்சம் கூட சுறுசுறுப்பு இல்லாமல் சோர்வாக காணப்படுவீர்கள். எல்லா காரியங்களிலும் மந்தமாகவே இருப்பீர்கள். எதிலும் மனதும், உடலும் ஈடுபடாமல் இருக்கும். இதற்கு மருந்துகள் கூட தீர்வாக இருக்காது. உடலில் அடிக்கடி பிரச்சனைகள் வரும். எதன் மீதும் நாட்டம் இல்லாமல் வெறுமையாக இருப்பதும் கண் திருஷ்டி தான்.
Evil Eye Symptoms In Tamil
கண் திருஷ்டி நீங்க!
குளிக்கும் நீரில் உப்பு சேர்த்து குளிப்பதால் கண் திருஷ்டியால் உண்டாகும் உடல் சோர்வு நீங்கும். வாரம் ஒரு தடவை இப்படி குளிக்கலாம். இந்த உப்பு குளியலை நீங்கள் பிறந்த கிழமைகள் அன்று செய்வது நல்ல பலனளிக்கும். அது தெரியாதவர்கள் செவ்வாய் கிழமைகளில் குளித்தால் பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: குழந்தைக்கு பொல்லாத கண் திருஷ்டி நீங்க.. இப்படி சுத்தி போடுங்க..!