- Home
- Astrology
- Astrology: தனது சொந்த நட்சத்திரத்துக்கு செல்லும் குரு பகவான்.! 3 ராசிகளுக்கு நல்ல காலம் பொறக்கப்போகுது.!
Astrology: தனது சொந்த நட்சத்திரத்துக்கு செல்லும் குரு பகவான்.! 3 ராசிகளுக்கு நல்ல காலம் பொறக்கப்போகுது.!
நவகிரகங்களில் சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படும் குரு பகவான் தனது சொந்த நட்சத்திரமான புனர்பூசத்திற்கு செல்லவிருக்கிறார். இதன் காரணமாக மூன்று ராசிகள் பலனடைய உள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

புனர்பூச நட்சத்திரத்துக்கு செல்லும் குரு பகவான்
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. அந்த வகையில் நவகிரகங்களில் சக்தி வாய்ந்தவராக இருக்கும் குருபகவானும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்ற உள்ளார். குருபகவான் ஞானம் மற்றும் அறிவைக் குறிக்கும் ஒரு கிரகமாகும். இவரின் பார்வை கோடி புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது. தற்போது குருபகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். ஆகஸ்ட் 13, 2025 அன்று தனது நட்சத்திரத்தை மாற்றுகிறார். இந்த பெயர்ச்சியின் போது அவர் தனது சொந்த நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்திற்கு செல்ல இருக்கிறார். குரு புனர்பூச நட்சத்திரத்தை ஆளும் கிரகமாக இருப்பதால் அவரின் இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரவுள்ளது. அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
குரு புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்க இருப்பதால் மேஷ ராசிக்காரர்கள் பல நன்மைகளை பெற உள்ளனர். நிதி சார்ந்த விஷயங்களில் அவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இத்தனை நாட்களாக மீள முடியாமல் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து அவர்கள் மீண்டு வரும் காலம் நெருங்கியுள்ளது. தொழில் செய்து வருபவர்கள், வணிகர்கள், வியாபாரிகள் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். கடந்த கால முதலீடுகள் நல்ல லாபத்தை தர உள்ளது. வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். நீங்கள் இத்தனை நாட்களாக கடினமாக உழைத்ததற்கு பலன் கிடைக்க உள்ளது. உங்களின் கடின உழைப்பால் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நிலுவையில் கிடந்த பணிகள் அனைத்தும் முடிந்து வெற்றியை நோக்கி நடைபோட இருக்கிறீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
கடக ராசி
குருவின் இந்த பெயர்ச்சி கடக ராசி காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்க உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தொழில் வாழ்க்கையானாலும் சரி, கடக ராசிக்காரர்கள் பல நன்மைகளை பெற உள்ளனர். அவர்கள் அனுபவித்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் தீரவுள்ளது அவர்களின் நிதி நிலைமை ஏற்பட்டு பொருளாதார உயர்வு ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த சண்டை தீர்ந்து இருவரும் இணையும் காலம் நெருங்கி உள்ளது. வழக்குகள் சம்பந்தமாக நீதிமன்றங்களுக்கு நாடி வந்தவர்கள் சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். அலுவலகத்தில் இத்தனை நாட்களாக எதிரிகளாக இருந்து வந்தவர்கள் நண்பர்களாக மாறலாம். திருமணமாகாமல் தவித்து வந்தவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடும். குடும்பம், வாழ்க்கை, வேலை, ஆரோக்கியம் என அனைத்திலும் சாதகமான சூழல் ஏற்படும்.
மீன ராசி
குரு பகவானின் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு பல மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும் காலம் நெருங்கி உள்ளது. பணிபுரிபவர்கள் மேலதிகாரிகளிடமிருந்து ஆதரவை எதிர்பார்க்கலாம். முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைக்கும். கடின முயற்ச்சிகள் காரணமாக அங்கீகரிக்கப்படுவீர்கள். கடந்த காலத்தில் தீர்க்க முடியாமல் இருந்த சொத்து பிரச்சனைகள், கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் ஏற்படும். இந்த காலக்கட்டத்தில் வேறு எந்த பெரிய உடல்நலப் பிரச்சனையும் ஏற்படாது. புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.
(பொறுப்பு துறப்பு: இந்த ஜோதிடப் பலன்கள் அனைத்தும் பொதுவானவையே. இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்களின் கருத்துக்கள் அடிப்படையிலானவை. ஒவ்வொருவரின் ஜாதகம், அதன் கிரக நிலைகள் மற்றும் தசா புத்திகள் வேறுபடும் என்பதால் அனுபவம் மிக்க ஜோதிடரை கலந்த ஆலோசிப்பது நல்லது)