MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • அபூர்வ குரு மங்கள யோகத்தால் 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. கோடிகளில் கொட்டப் போகும் அதிர்ஷ்டம்!

அபூர்வ குரு மங்கள யோகத்தால் 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. கோடிகளில் கொட்டப் போகும் அதிர்ஷ்டம்!

Guru Mangal Yog 2026:: செப்டம்பரில் கடக ராசியில் குரு-செவ்வாய் இணைவதால் அபூர்வ குரு மங்கள யோகம் உருவாகிறது. இதனால் 3 ராசிகளுக்கு பொற்காலம் பிறந்து, தொழில் மற்றும் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டமும் பெரும் லாபமும் கிடைக்கும்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 14 2026, 02:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அபூர்வ குரு மங்கள யோகம் 2026
Image Credit : AI

அபூர்வ குரு மங்கள யோகம் 2026

செவ்வாய் வரும் 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-அன்று கடக ராசிக்குள் நுழைந்து, நவம்பர் 12 வரை அதே ராசியில் நிலைபெறுகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, நெருப்பு கிரகமான செவ்வாய் நீர் ராசியான கடகத்திற்குள் நுழைவது இந்த ஆண்டின் மிக முக்கியமான வானியல் மற்றும் ஜோதிட நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இதற்கிடையில், தேவகுருவான குருபகவான் ஏற்கனவே ஜூன் 2, 2026 முதல் அக்டோபர் 31, 2026 வரை கடக ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் என்பது குருவின் உச்ச வீடாகும். இதன் காரணமாக, செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 31 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில், கடக ராசியில் குருவும் செவ்வாயும் இணைந்து சஞ்சரிக்கும் அபூர்வ சூழல் உருவாகிறது. இந்த கிரகங்களின் சக்திவாய்ந்த இணைவு 'குரு மங்கள யோகத்தை' உருவாக்குகின்றது. இந்த மங்களகரமான யோகத்தால் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை மேம்பட உள்ளது. அவை என்னென்ன ராசிகள்? என பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மேஷம்
Image Credit : ChatGPT

மேஷம்

மேஷம் ராசியை ஆளும் கிரகம் செவ்வாய் ஆகும். இந்த காலகட்டத்தில் செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். நான்காம் வீடு என்பது வீடு, வாகனம், சொத்து மற்றும் குடும்ப சுகத்தைக் குறிக்கும் இடமாகும். இதனால் உங்கள் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க நேர்மறையான மாற்றங்கள் ஏற்படக்கூடும். எனினும், வழக்கத்தை விட சற்று கூடுதலான முயற்சி தேவைப்படும். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் கடின உழைப்பிற்கான பலன் நிச்சயமாகக் கிடைக்கும்.

நீங்கள் புதிதாக தொழில் தொடங்கவோ அல்லது வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்யவோ திட்டமிட்டிருந்தால், இந்த நாள்கள் மிகவும் உகந்தவையாக இருக்கும். பொருளாதார ரீதியாக ஸ்திரத்தன்மை ஏற்படும். நிலம் மற்றும் சொத்து தொடர்பான முதலீடுகள் உங்களுக்கு லாபகரமாக முடியும். அலுவலகப் பணிகளில் இருப்பவர்கள் தங்களின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி விரும்பிய இலக்குகளை அடைவார்கள். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

Related Articles

Related image1
சூரியனின் ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. இனி தொட்டதெல்லாம் வெற்றி!
Related image2
Astrology Tamil: இந்த வாரத்தில் 5 ராசிகளுக்கு பண மழை.. லாட்டரி அதிர்ஷ்டம்!
34
கடகம்
Image Credit : ChatGPT

கடகம்

உங்கள் ராசியான கடகத்திலேயே குரு பகவான் ஏற்கனவே அமர்ந்திருக்கும் நிலையில், இப்போது தைரிய காரகனான செவ்வாயும் இணைவது உங்கள் வாழ்க்கையில் பல தீவிரமான மற்றும் உற்சாகமான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதங்களாக மாறும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த முக்கியமான வேலைகள் தடைகள் இன்றி வெற்றிகரமாக முடிவடையும்.

குறிப்பாக, நிலுவையில் உள்ள சட்ட சிக்கல்கள் அல்லது வழக்குகளில் இருந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்போ அல்லது நிவாரணமோ கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்பார்த்ததை விடக் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் அனுகூலமாக இருப்பதுடன், வாழ்க்கைத்துணையின் முழுமையான ஆதரவும் ஊக்கமும் உங்களுக்குப் பலத்தைத் தரும்.

44
விருச்சிகம்
Image Credit : ChatGPT

விருச்சிகம்

விருச்சிக ராசியின் அதிபதியும் செவ்வாய்தான். இதனால் இந்த குரு மங்கள யோகம் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் நன்மைகளையும் வாரிக் வழங்கப்போகிறது. செவ்வாயின் சஞ்சாரம் உங்கள் செயல்களில் ஆர்வத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கும். குருபகவானின் அருளால் உங்களின் தன்னம்பிக்கை பன்மடங்கு உயர்ந்திருக்கும். இந்த சக்திவாய்ந்த யோகத்தின் தாக்கத்தால், வணிகம் மற்றும் தொழில் துறையில் நீங்கள் எதிர்பார்த்திராத மிகப்பெரிய வெற்றிகளை அடைய முடியும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதுடன், பெரிய அளவிலான லாபமும் ஈட்ட வாய்ப்புள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் இருந்து உங்களுக்கு வருமானம் பெருகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் பரஸ்பர புரிதலும் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தைச் செலவிடவும், உறவை மேலும் பலப்படுத்தவும் இது அருமையான தருணமாகும். வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற சிறப்பான வேலைவாய்ப்பு அமையும். கடந்த காலத்தில் உங்களை வாட்டி வதைத்த உடல்நலக் கோளாறுகளில் இருந்து விடுபட்டு, சேமிப்பின் உதவியுடன் முழுமையான ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள். மொத்தத்தில், இந்த காலகட்டம் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் பொன்னான நாள்களாக அமையப் போகிறது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Property Yoga: 3 தலைமுறைக்கு சொத்து வாங்கி குவிக்கப்போகும் கும்பம்! இனி பணமும், நிலமும் குவியபோகுது!
Recommended image2
zodiac signs: வாழ்க்கையை கொண்டாட தெரிந்த புத்திசாலியான 5 ராசிக்காரர்கள்
Recommended image3
Aquarius: செவ்வாய்–குரு சேர்க்கை.. அடுத்த 42 நாட்கள் கும்பத்தின் அதிரடி வளர்ச்சியை தடுக்க முடியாது?
Related Stories
Recommended image1
சூரியனின் ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. இனி தொட்டதெல்லாம் வெற்றி!
Recommended image2
Astrology Tamil: இந்த வாரத்தில் 5 ராசிகளுக்கு பண மழை.. லாட்டரி அதிர்ஷ்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved