Zodiac Signs : குபேரனின் ஆசி பெற்ற 4 ராசிக்காரர்கள்.. இவர்களுக்கு பணக்கஷ்டமே வராதாம்.!
செல்வ வளங்களை அள்ளித் தரும் குபேரனுக்கு நான்கு ராசிக்காரர்கள் மீது மிகுந்த அன்பு இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Four Zodiac Signs Blessed by Kuberaa
வாழ்க்கையில் பணக்கஷ்டம் வராமல் இருக்கவே அனைவரும் விரும்புகிறோம். பணம் சம்பாதிக்க கடின உழைப்புடன் லட்சுமி தேவியின் அருள் மற்றும் குபேரனின் அருளும் இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. ஜோதிடத்தின் படி குபேரனுக்கு சில ராசிக்காரர்கள் மீது மிகுந்த அன்பு இருப்பதாக கூறப்படுகிறது. குபேரனின் அருளும், கருணையும் இருப்பதால் இவர்களுக்கு எந்த நிதிச் சிக்கல்களுக் ஏற்படாது. அவர்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். ஆரம்பத்தில் கஷ்டங்களை அனுபவித்தாலும் பின்னாளில் நிச்சயம் பணக்காரர்களாக மாறுவார்கள். அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
1.ரிஷபம்
செல்வத்தின் அதிபதியான குபேரனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மீது குபேரனுக்கு மிகுந்த பாசம் உண்டு். அதனால் தான் இந்த ராசிக்காரர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படுவதில்லை. இவர்கள் சிறு முயற்சி செய்தாலும், நல்ல பலன்கள் கிடைக்கும். அவர்கள் எந்த துறையில் நுழைந்தாலும், அந்த துறையில் சாதனையாளராக மாறுவார்கள். குபேரனின் பரிபூரண ஆசி இருப்பதால் அவர்கள் வாழ்வில் எல்லா மகிழ்ச்சியும் கிட்டும். வறுமை ஏற்படாது. பொருள், வசதிகளுக்கு பஞ்சம் இருக்காது.
2. கடகம்
குபேரன் ஆசி பெற்ற மற்றொரு ராசிக்காரர்கள் கடக ராசியினர். குபேரனின் அருள் இவர்களுக்கு எப்போதும் இருக்கும். குபேரனின் பார்வையால் இவர்களுக்கு வறுமை ஏற்படுவதில்லை. சில சமயங்களில் வறுமை வாட்டினாலும் பல சயமங்களில் செல்வத்தையும், செழிப்பையும் பெறுவார்கள். கடக ராசியினர் தங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். தங்கள் குடும்பத்திற்காக நிறைய பணம் செலவிடுவர். இதன் காரணமாகவே குபேரன் இவர்களுக்கு செல்வ வளத்தை வாரி வழங்குகிறார். குபேரனின் அருளால் கடக ராசியினருக்கு சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதை கிடைக்கிறது.
3. துலாம்
குபேரனின் விருப்பமான ராசிகளில் ஒன்றாக இருப்பது துலாம். இந்த ராசிக்காரர்களுக்கு குபேரனின் பரிபூரண ஆசி உண்டு. குபேரனின் அருளால் இவர்களுக்கு குறையாத செல்வ வளம் கிட்டும். இவர்கள் செய்யும் காரியம் அனைத்தும் வெற்றி பெறும். எந்த துறையில் நுழைந்தாலும் அவர்களுக்கு வெற்றி நிச்சயம். தாங்கள் செய்து முடிக்கும் வேலையை அவர்கள் செய்து முடிக்கின்றனர். இந்த பழக்கம் அவர்களை வாழ்க்கையில் வெற்றி பெறச் செய்கிறது. மேலும் குபேரனின் பார்வையும் இருப்பதால் துலாம் ராசியினருக்கு தொட்டதெல்லாம் வெற்றி பெறுகிறது.
4. தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு மிகுந்த பிடித்தமான ராசிகளில் ஒன்று தனுசு. இவர்களுக்கு குபேரன் தனது சிறப்பு அருளை வழங்குகிறார். தனுசு ராசிக்காரர்கள் கடினமாக உழைப்பவர்கள், அதன் பலன் அவர்களுக்கு செல்வமாக வருகிறது. அவர்கள் தங்களுக்காக மட்டுமல்ல, தங்கள் சந்ததியினருக்காகவும் செல்வத்தை சேர்க்கின்றனர். இந்த பணத்தை நேர்மையான முறையில் சம்பாதிக்க வேண்டும் என்று அவர்கள் ஆசை கொள்கின்றனர். குபேரனும் அவர்களுக்கு பரிபூரண ஆசியை வழங்குவதால் தனுசு ராசிக்காரர்கள் எந்த வித குறையும் இல்லாமல் வாழ்வார்கள்.