MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Vinayagar Chaturthi Wishes in Tamil
Gowri Ganesha Festival Wishes in Tamil
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Astrology
  • This Week Rasi Palan: சிம்ம ராசிக்கு இந்த வாரம் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.! எச்சரிக்கை.!

This Week Rasi Palan: சிம்ம ராசிக்கு இந்த வாரம் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.! எச்சரிக்கை.!

This Week Rasi Palan Simmam: பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 09 2026, 04:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
கிரக நிலைகள்:
Image Credit : Asianet News

கிரக நிலைகள்:

சிம்ம ராசி நேயர்களே, ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பது சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம். திட்டமிட்ட காரியங்களை முடிக்க முடியாமல் போகலாம். ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்பட வேண்டிய வாரமாக இந்த வாரம் இருக்கும்.

பொதுவான பலன்கள்:

இந்த வாரம் நிதானமாகவும், எதையும் திட்டமிட்டும் செய்ய வேண்டிய வாரமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சனைகள் மீண்டும் தலை துக்கலாம். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். பிற கிரகங்களின் நிலை காரணமாக மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

நிதி நிலைமை:

இந்த வாரம் வருமானம் சீராக இருக்கும். இருப்பினும் தேவையில்லாத செலவுகள் ஏற்படலாம். பண விஷயங்களில் இழுபறிகள் நீடிக்கும். மருத்துவச் செலவுகள் வரிசை கட்டி நிற்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் போகலாம். ஷேர் மார்க்கெட் மற்றும் வணிகத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

வேலை மற்றும் தொழில்:

வேலை தொடர்பான மாற்றங்கள், வீடு மாற்றம், தொழில் மாற்றம் ஆகியவை ஏற்படலாம். வேலைப்பளு அதிகரிக்கும். எளிமையாக முடிய வேண்டிய காரியங்கள் இழுபறியாகும். பிறரை நம்பி ஒப்படைத்த காரியங்களால் பிரச்சினைகள் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பிரச்சனை ஏற்படலாம். தொழில் சார்ந்த விஷயங்களில் தடை ஏற்படலாம்.

குடும்ப உறவுகள்:

குடும்ப உறவுகளில் இந்த வாரம் முழுவதும் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இழுபறியாக இருக்கும். முன் கோபத்தை குறைத்து நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கலாம். பிள்ளைகளின் திருமண முயற்சிகள் கைகூடும். உறவினர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியம்:

ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் எழக்கூடும். வயிறு அல்லது கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். தந்தையின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. தியானம் மற்றும் யோகா செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

கல்வி:

இந்த வாரம் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். ஞாபக மறதி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எழுதிப் படிப்பது நல்லது.

சந்திராஷ்டம நாட்கள்:

இந்த வார சந்திராஷ்டம நாட்கள் எதுவுமில்லை. எனவே புதிய முயற்சிகளை தைரியமாக தொடங்கலாம். இருப்பினும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசனை செய்து எடுப்பது நற்பலன்களைத் தரும்.

பரிகாரங்கள்:

ஏற்படும் தடைகள் விலகுவதற்கு கால பைரவரை வழிபடலாம். சூரிய பகவானுக்கு நீர் சமர்ப்பித்து வழிபடுவது நல்லது. ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்வது சிறந்தது. ஓம் நமச்சிவாய மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது மனவலித் தரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: இன்றைய 12 ராசிபலன்: பணமழை கொட்டப்போகும் ராசிகள் யார்? அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் 5 ராசிகள்
Recommended image2
Spiritual Remedy: இனி கடனே இருக்காது.! எல்லா ரசிகளுக்கும் பரிகாரம் உண்டு.! எல்லா நட்சத்திரங்களுக்கும் நிம்மதி கிடைக்கும்!
Recommended image3
Mercury Transit : புதன் காட்டும் ராஜவழி! விசாக நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்!
Related Stories
Recommended image1
100 ஆண்டுகளுக்குப் பின் கும்ப ராசியில் நடக்கும் மேஜிக்.! லக்கி பாஸ்கராக மாறும் 5 ராசிகள்.! கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.!
Recommended image2
சூரியன் புதன் உருவாக்கும் புதாதித்ய ராஜயோகம்.! பட்டையை கிளப்பப்போகும் 5 ராசிகள்.! தொட்டதெல்லாம் ஹிட்டு தான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved