MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • This Week Rasi Palan: ரிஷப ராசிக்கு கூரையை பிச்சிட்டு பணம் கொட்டும் யோகம்.! நடக்கப்போகும் அதிசயம்.!

This Week Rasi Palan: ரிஷப ராசிக்கு கூரையை பிச்சிட்டு பணம் கொட்டும் யோகம்.! நடக்கப்போகும் அதிசயம்.!

This Week Rasi Palan Rishabam: பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 09 2026, 03:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
கிரக நிலைகள்:
Image Credit : Asianet News

கிரக நிலைகள்:

ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் சனி பகவான் லாப ஸ்தானத்தில் சுயசாரமாக சஞ்சரிப்பதால் குறைந்த உழைப்பும், நிறைந்த வருமானமும் கிடைக்கும். மேலும் குரு பகவான் மற்றும் ராசிநாதன் சுக்கிரன் சாதகமான நிலையில் இருப்பது உங்களுக்கு நன்மைகளையேத் தரும்.

பொதுவான பலன்கள்:

இந்த வாரம் இழுபறிகள் குறையும் வாரமாக இருக்கும். நல்ல பணப்புழக்கம் இருக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தடைகள் நீங்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குருவின் பார்வை இருப்பதால் சுப நிகழ்வுகள் நடக்கும். திட்டமிட்ட காரியங்கள் தாமதமானாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும்.

நிதி நிலைமை:

இந்த வாரம் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். வாராக் கடன்கள் வசூலாகும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்கி உங்களுக்கு சேர வேண்டிய பாகப்பிரிவினைகள் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து விட்டு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.

வேலை மற்றும் தொழில்:

தொழிலில் இருந்து வந்த மந்த நிலை நீங்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கலாம். இருப்பினும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உண்டு.

குடும்ப உறவுகள்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தந்தை மகனுக்கு இடையே இருந்த பிணக்குகள் தீர்க்கப்படும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் ரகசியங்களை பகிர்தல் கூடாது. குடும்ப விவகாரங்களில் மூன்றாம் நபர்களின் தலையீடுகளை தவிர்ப்பது நல்லது.

ஆரோக்கியம்:

ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். குறிப்பாக காது வலி, கணுக்கால், பின் முதுகு ஆகியவற்றில் வலிகள் தோன்றலாம். சிறு உபாதைகளையும் அலட்சியம் காட்டுதல் கூடாது. உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம். வெளி உணவுகளை தவிர்க்கவும்.

கல்வி:

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். உயர்கல்வி கற்க விரும்புவர்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

சந்திராஷ்டம நாட்கள்:

12.2.2026 பகல் 1:42 மணி முதல் 15.2.2026 ஆறு நள்ளிரவு 12:42 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திட்டமிட்ட காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். எதிர்முறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரங்கள்:

அஷ்டலட்சுமியை வழிபடுவது பொருளாதார மேன்மையைத் தரும். மகாலட்சுமி தாயாருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடலாம். பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது பழங்கள் வழங்குவது தடைகளை நீக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Numerology: இந்த தேதிகள்ல பிறந்தா நீங்க ரொம்ப லக்கி.! சீக்கிரமே கோடீஸ்வரர் ஆகிடுவீங்க.!
Recommended image2
Vaikasi Amavasai 2026: வரப்போகும் அமாவாசை! மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?
Recommended image3
Vastu for Wealth: வீட்டில் செல்வம் பெருக உதவும் 10 எளிய வாஸ்து குறிப்புகள்!
Related Stories
Recommended image1
100 ஆண்டுகளுக்குப் பின் கும்ப ராசியில் நடக்கும் மேஜிக்.! லக்கி பாஸ்கராக மாறும் 5 ராசிகள்.! கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.!
Recommended image2
சூரியன் புதன் உருவாக்கும் புதாதித்ய ராஜயோகம்.! பட்டையை கிளப்பப்போகும் 5 ராசிகள்.! தொட்டதெல்லாம் ஹிட்டு தான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved