MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Astrology
  • This Week Rasi Palan: இந்த வாரம் அடிச்சு தூள் கிளப்பப்போகும் மேஷ ராசி.! தொட்டதெல்லாம் ஹிட்டு தான்.!

This Week Rasi Palan: இந்த வாரம் அடிச்சு தூள் கிளப்பப்போகும் மேஷ ராசி.! தொட்டதெல்லாம் ஹிட்டு தான்.!

This Week Rasi Palan Mesham: பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 09 2026, 02:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
கிரக நிலைகள்:
Image Credit : Asianet News

கிரக நிலைகள்:

மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சாதகமான நிலையில் சஞ்சரிக்கிறார். தனத்தை கொடுக்கக்கூடிய கிரகமான சுக்கிர பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இந்த வாரம் அனைத்திலும் லாபம் இரட்டிப்பாக கிடைக்கும்.

பொதுவான பலன்கள்:

வாரத்தின் முதல் மூன்று நாட்கள் உற்சாகம் பெருக்கெடுக்கும். நிலுவையில் இருந்த காரியங்கள் அனைத்து முடிவுக்கு வரும். புதிய முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறத் தொடங்கும்.

நிதி நிலைமை:

இந்த வாரம் நிதி நிலைமை மிகவும் சாதகமாக இருக்கும். ஆனால் அகலக்கால் வைப்பதை தவிர்க்க வேண்டும். விரலுக்கு ஏற்ற வீக்கம் தான் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு நிதி விஷயங்களில் ஆடம்பரம் காட்டுதல் கூடாது. பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானத்தை கடைபிடிக்கவும்.

வேலை மற்றும் தொழில்:

தொழில் சார்ந்த வெற்றிகள் தேடி வரும் வாரமாக இருக்கும். புதிய தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அல்லது பணிச்சுமை ஏற்படக்கூடும். ஏழரை சனி காலம் என்பதால் தொழில் சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அலுவலக வேலை செய்து வருபவர்களுக்கு விரும்பிய மாற்றம் உண்டாகும்.

குடும்ப உறவுகள்:

குடும்ப உறவுகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். தாய் வழியில் மனக்கவலை அல்லது கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். பேச்சில் நிதானம் தேவை. சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் சமூகமாக முடியும். சொத்து தொடர்பான தகராறுகள், உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும்.

ஆரோக்கியம்:

ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வந்து நீங்கலாம். அஜீரணம், உடல் சூடு போன்ற கோளாறுகள் ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். போதிய ஓய்வு எடுப்பது நல்லது. நேரத்திற்கு உணவு உட்கொள்வது ஆற்றலை தக்க வைக்கும்.

கல்வி:

மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்க வேண்டிய வாரமாகும். கடினமான பாடங்களுக்கு கூடுதல் கவனம் கொடுத்து படிப்பது நல்லது.

சந்திராஷ்டம நாட்கள்:

10.2.2026 நள்ளிரவு 1.11 மணி முதல் 12.2.2026 அன்று பகல் 1:42 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கலாம். உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்காமல் போகலாம். எனவே இந்த காலத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

பரிகாரங்கள்:

மன தைரியம் அதிகரிப்பதற்கு லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது. நரசிம்மர் ஆலயங்களுக்குச் சென்று பானகம் நெய்வேத்யம் செய்து அதை பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். ஏழை எளியவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நன்மைகளைத் தரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mars Transit : செவ்வாய் பெயர்ச்சியால் திறக்கப்போகும் அதிர்ஷ்ட கதவு... இனி இந்த 5 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் வெற்றி!
Recommended image2
Astrology: இன்றைய 12 ராசிபலன்: பணமழை கொட்டப்போகும் ராசிகள் யார்? அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் 5 ராசிகள்
Recommended image3
Spiritual Remedy: இனி கடனே இருக்காது.! எல்லா ரசிகளுக்கும் பரிகாரம் உண்டு.! எல்லா நட்சத்திரங்களுக்கும் நிம்மதி கிடைக்கும்!
Related Stories
Recommended image1
100 ஆண்டுகளுக்குப் பின் கும்ப ராசியில் நடக்கும் மேஜிக்.! லக்கி பாஸ்கராக மாறும் 5 ராசிகள்.! கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.!
Recommended image2
சூரியன் புதன் உருவாக்கும் புதாதித்ய ராஜயோகம்.! பட்டையை கிளப்பப்போகும் 5 ராசிகள்.! தொட்டதெல்லாம் ஹிட்டு தான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved