MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • This Week Rasi Palan: கன்னி ராசிக்காரர்களே இந்த வாரம் எதிரிகளை ஓட விடப்போறீங்க.! வெற்றி நிச்சயம்.!

This Week Rasi Palan: கன்னி ராசிக்காரர்களே இந்த வாரம் எதிரிகளை ஓட விடப்போறீங்க.! வெற்றி நிச்சயம்.!

This Week Rasi Palan Kanni: பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 09 2026, 04:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
கிரக நிலைகள்:
Image Credit : Asianet News

கிரக நிலைகள்:

கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசி மற்றும் பத்தாம் வீட்டின் அதிபதியான புதன் பகவான் ஆறாம் வீட்டில் ராகுவுடன் இணைந்திருக்கிறார். குருவின் பார்வையும் ஆறாம் வீட்டில் விழுவதால் இந்த வாரம் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைக்கும்.

பொதுவான பலன்கள்:

இந்த வாரம் கிரக நிலைகளின் சாதகமான சூழல் காரணமாக எதிரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். உடன் பிறந்தவர்கள் மற்றும் தந்தையால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கடந்த காலங்களில் நிலவிய நெருக்கடிகள் குறைந்து வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். பொருளாதார நிலைமை மேம்படும்.

நிதி நிலைமை:

இந்த வாரம் பண வரவு சீராக இருக்கும். எதிர்பாராத சுப செலவுகளும் உண்டாகும். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உபரி வருமானம் கிடைக்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். புதிய சேமிப்பு திட்டங்களை தொடங்குவீர்கள்.

வேலை மற்றும் தொழில்:

வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. ஆன்லைன் வேலைகள் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கூட்டாளிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

குடும்ப உறவுகள்:

இந்த வாரம் குடும்ப உறவுகள் சீராக இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பெண்களுக்கு தாய் வழி சொத்துக்கள் கிடைக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, முழு பங்கும் கிடைக்கும். வழக்குகளில் இருந்த இழுபறி நிலைகள் மாறி தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும்.

ஆரோக்கியம்:

இந்த வாரம் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. இருப்பினும் வாகனங்களில் செல்லும் பொழுதும், இரவு நேரப் பயணங்களின் பொழுதும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அதிக வேலைப்பளு காரணமாக சோர்வு ஏற்படலாம் என்பதால் முறையான ஓய்வு அவசியம்.

கல்வி:

மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தக்கூடிய வாரமாக இருக்கும். ஞாபக மறதி ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எழுதிப் பழகிப் படிப்பது சிறந்தது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.

சந்திராஷ்டம நாட்கள்:

இந்த வாரம் சந்திராஷ்டம நாட்கள் எதுவும் இல்லை. எனவே தைரியமாக முடிவுகளை எடுக்கலாம். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்பது நல்லது.

பரிகாரங்கள்:

மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுவது சுப பலன்களை அளிக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது அல்லது பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்வது நல்லது. ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடுவது தடைகளை நீக்கும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today Rasi Palan: இன்று மேஷ ராசியில் திரிகிரக யோகம்.! 6 ராசிக்காரர்களுக்கு பேங்க் பேலன்ஸ் எகிறும்.! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ.!
Recommended image2
Numerology: இந்த தேதிகள்ல பிறந்தா நீங்க ரொம்ப லக்கி.! சீக்கிரமே கோடீஸ்வரர் ஆகிடுவீங்க.!
Recommended image3
Vaikasi Amavasai 2026: வரப்போகும் அமாவாசை! மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?
Related Stories
Recommended image1
100 ஆண்டுகளுக்குப் பின் கும்ப ராசியில் நடக்கும் மேஜிக்.! லக்கி பாஸ்கராக மாறும் 5 ராசிகள்.! கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.!
Recommended image2
சூரியன் புதன் உருவாக்கும் புதாதித்ய ராஜயோகம்.! பட்டையை கிளப்பப்போகும் 5 ராசிகள்.! தொட்டதெல்லாம் ஹிட்டு தான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved