MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • This Week Rasi Palan: சூரியனால் கடக ராசியில் உருவாகும் சிறப்பு அமைப்பு.! கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.!

This Week Rasi Palan: சூரியனால் கடக ராசியில் உருவாகும் சிறப்பு அமைப்பு.! கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.!

This Week Rasi Palan Kadagam: பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 09 2026, 04:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
கிரக நிலைகள்:
Image Credit : Asianet News

கிரக நிலைகள்:

கடக ராசி நேயர்களே, தன ஸ்தானத்தின் அதிபதியான சூரிய பகவான் சம சப்தம ஸ்தானத்தில் நின்று ராசியை பார்ப்பது சிறப்பான அமைப்பாகும். இதன் காரணமாக இந்த வாரம் அனைத்து காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும்.

பொதுவான பலன்கள்:

கடக ராசிக்காரர்களே இந்த வாரம் இருந்த மறைமுக பிரச்சனைகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் விலகும். உழைப்பிற்கான அதிர்ஷ்டம் கிடைக்கக்கூடிய அற்புதமான வாரமாகும். நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

நிதி நிலைமை:

இந்த வாரம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். சுப செலவுகளும் வரிசை கட்டி நிற்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. பங்குச்சந்தை முதலீடுகளில் நிதானம் தேவை. சிலருக்கு சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும்.

வேலை மற்றும் தொழில்:

இந்த வாரம் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். கூட்டுத் தொழில் செய்பவர்களின் தொழிலில் மாற்றங்கள் ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவிகள் அல்லது பதவி உயர்வுகள் கிடைக்கலாம். தொழில் தொடர்பாக பயணங்கள் செல்ல நேரிடலாம்.

குடும்ப உறவுகள்:

சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். சொத்துக்களை விற்று அதன் மூலம் பணம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்க, கட்ட, விஸ்தரிக்க தேவையான பத உதவிகள் கிடைக்கும். தாய் மாமன் வழியாக சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவு பெறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். நீண்ட காலமாக தீர்க்க முடியாமல் இருந்த குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்.

ஆரோக்கியம்:

இந்த வாரம் ஆரோக்கியம் பொதுவாக நன்றாக இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையத் தொடங்குவதால் மன நிம்மதி அடையும். அதிக வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம் என்பதால் போதுமான ஓய்வு அவசியம். செரிமான மண்டலம் சார்ந்த உபாதைகள் வரலாம் என்பதால் காரமான உணவுகளை தவிர்க்கவும்.

கல்வி:

மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய வாரமாகும். கவனச் சிதறல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் சற்று பின்னடைவுகளை சந்திக்கலாம் என்பதால் அதிக கவனத்துடன் படிப்பது நல்லது.

சந்திராஷ்டம நாட்கள்:

இந்த வாரம் உங்களுக்கு சந்திராஷ்டம நாட்கள் எதுவுமில்லை. எனவே தைரியமாக முடிவுகளை மேற்கொள்ளலாம். எந்த ஒரு முக்கிய முடிவை எடுப்பதற்கு முன்னர் நிபுணர்களின் ஆலோசனை அல்லது ஒரு முறைக்கு இருமுறை யோசித்து எடுப்பது நல்லது.

பரிகாரங்கள்:

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்பிகையை வழிபடுவது நல்லது. சிவாலயங்களுக்குச் சென்று சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்வதும், ஓம் நமச்சிவாய மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்வதும் மன அமைதி தரும். ஏழை எளியவர்களுக்கு தயிர்சாதம் தானமாக வழங்கவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
This Week Rasi Palan: குரு பகவானால் மிதுன ராசிக்கு இந்த வாரம் இது நடந்தே தீரும்.! ரெடியா இருங்க.!
Recommended image2
This Week Rasi Palan: ரிஷப ராசிக்கு கூரையை பிச்சிட்டு பணம் கொட்டும் யோகம்.! நடக்கப்போகும் அதிசயம்.!
Recommended image3
This Week Rasi Palan: இந்த வாரம் அடிச்சு தூள் கிளப்பப்போகும் மேஷ ராசி.! தொட்டதெல்லாம் ஹிட்டு தான்.!
Related Stories
Recommended image1
100 ஆண்டுகளுக்குப் பின் கும்ப ராசியில் நடக்கும் மேஜிக்.! லக்கி பாஸ்கராக மாறும் 5 ராசிகள்.! கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.!
Recommended image2
சூரியன் புதன் உருவாக்கும் புதாதித்ய ராஜயோகம்.! பட்டையை கிளப்பப்போகும் 5 ராசிகள்.! தொட்டதெல்லாம் ஹிட்டு தான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved