MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • This Week Rasi Palan: தனுசு ராசியை பார்க்கும் குரு.! எதிரிகளை துவம்சம் செய்யும் யோகம் கிடைக்கும்.!

This Week Rasi Palan: தனுசு ராசியை பார்க்கும் குரு.! எதிரிகளை துவம்சம் செய்யும் யோகம் கிடைக்கும்.!

This Week Rasi Palan Dhanusu: பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 10 2026, 04:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
கிரக நிலைகள்:
Image Credit : Asianet News

கிரக நிலைகள்:

தனுசு ராசி நேயர்களே, குரு பகவான் தன் வீட்டை தானே பார்ப்பதால், இந்த வாரம் அளவில்லாத நன்மைகள் கிடைக்கும் வாரமாக இருக்கும். உங்களிடம் இருக்கும் தனித்திறமை வெளிப்படும். உங்கள் தேடல்களுக்கான பதில்கள் கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும்.

பொதுவான பலன்கள்:

தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயங்கள் கிடைக்கும். அர்த்தாஷ்டம சனி தொடங்கினாலும் குரு ராசியை பார்ப்பதால் ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகும். உங்களுக்கு மறைமுகமாக தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகிச் செல்வார்கள்.

நிதி நிலைமை:

இந்த வாரம் நிதி நிலைமை சீராக இருக்கும். குரு ராசியை பார்ப்பதால் நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த உதவிகள் கிடைக்கும். வரவு இருக்கும் அதே சமயம் செலவும் இருக்கலாம். ஆடம்பரச் செலவுகளையும், அவசியமற்ற கடன் வாங்கதலையும் குறைப்பது நல்லது.

வேலை மற்றும் தொழில்:

வேலை மற்றும் தொழிலில் எதிர்பார்த்த அனுகூலங்கள் உண்டாகும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலுக்காக வங்கி கடன் கிடைக்கும். வேலை இடத்தில் உங்கள் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் சரியாகும். படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

குடும்ப உறவுகள்:

இந்த வாரம் குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் ஆசைகளுக்காக வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவீர்கள். பெரியவர்களின் நல்லாசி கிடைக்கும். திருமணத்தில் இருந்த தடைகள் விலகும். சுப விசேஷங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

ஆரோக்கியம்:

இந்த வாரம் ஆரோக்கியத்தில் பெரிய கோளாறுகள் ஏற்படாது. இதுவரை உங்களை வாட்டி வதைத்து வந்த உடல் உபாதைகள் நோய் தொந்தரவுகள் மாற்று வைத்தியத்தால் சரியாகும். நீண்ட கால உபாதைகள் குறையும். அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உணவு கட்டுப்பாடு அவசியம்.

கல்வி:

மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி படிப்பார்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

சந்திராஷ்டம நாட்கள்:

இந்த வாரம் சந்திராஷ்டம நாட்கள் எதுவும் இல்லை. எனவே தைரியமாக முடிவுகளை எடுங்கள்.

பரிகாரங்கள்:

வீட்டில் ஸ்ரீ சக்ரம் வைத்து வழிபடுவது நல்லது தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடவும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது சிறந்தது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today Rasi Palan: இன்று மேஷ ராசியில் திரிகிரக யோகம்.! 6 ராசிக்காரர்களுக்கு பேங்க் பேலன்ஸ் எகிறும்.! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ.!
Recommended image2
Numerology: இந்த தேதிகள்ல பிறந்தா நீங்க ரொம்ப லக்கி.! சீக்கிரமே கோடீஸ்வரர் ஆகிடுவீங்க.!
Recommended image3
Vaikasi Amavasai 2026: வரப்போகும் அமாவாசை! மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?
Related Stories
Recommended image1
விரைவில் குரு பெயர்ச்சி.! புதிய பாதையில் நகரப்போகும் குரு பகவான்.! குரு பெயர்ச்சி பலன்கள் இதோ.!
Recommended image2
திருவோண நட்சத்திரத்தில் அமரும் யமன்.! 4 ராசிகளின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved