MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Sani Peyarchi 2026: ரிஷப ராசிக்கு ஆரம்பமாகும் ஏழரை சனி.! சோதனையா, சாதனையா? தப்பிக்க எளிய பரிகாரங்கள்.!

Sani Peyarchi 2026: ரிஷப ராசிக்கு ஆரம்பமாகும் ஏழரை சனி.! சோதனையா, சாதனையா? தப்பிக்க எளிய பரிகாரங்கள்.!

Elarai Sani for Rishaba Rasi: ரிஷப ராசிக்கு விரைவில் ஏழரை சனி தொடங்குகிறது. சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு என்ன பலன்களைக் கொடுக்கும் என்று இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

3 Min read
Author : Ramprasath S
Published : Jul 03 2026, 11:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Elarai Sani for Rishaba Rasi
Image Credit : ChatGPT

Elarai Sani for Rishaba Rasi

ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர் ராசியை மாற்றுகிறார். அவர் ஒரு ராசிக்கு வரும் பொழுது அந்த ராசிக்கு முந்தைய ராசி மற்றும் அதற்கு அடுத்த ராசி ஆகியவற்றிலும் தாக்கம் ஏற்படும். இது விரய சனி, ஜென்ம சனி, பாத சனி என்று வகைப்படுத்தப்படுகிறது. தற்போது மீன ராசியில் பயணித்து வரும் சனி பகவான் ஜூன் 3, 2027 ஆம் ஆண்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் காரணமாக ரிஷப ராசிக்கு ஏழரை சனியின் முதல் பகுதியான விரய சனி தொடங்க இருக்கிறது.

இதையும் படியுங்கள்:  Venus Transit 2026: ஜூலையில் இந்த 4 ராசிகளுக்கு சுக்கிர திசை ஆரம்பம்.! ராஜயோகம், வெற்றி, அதிர்ஷ்டம் கிடைக்கும்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
ரிஷப ராசிக்கு தொடங்கும் ஏழரை சனி
Image Credit : Pixabay

ரிஷப ராசிக்கு தொடங்கும் ஏழரை சனி

மீன ராசிக்கு பாத சனியும், மேஷ ராசிக்கு ஜென்ம சனியும், ரிஷப ராசிக்கு விரய சனியும் நடக்க இருக்கிறது. இந்த காலத்தில் ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு சனியின் தாக்கம் எவ்வாறு இருக்கப் போகிறது, பரிகாரங்கள் என்ன என்பது பற்றி இங்கு காணலாம். ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் யோககாரகன் ஆவார். பாக்கியம் மற்றும் தொழிற்ஸ்தான வீடுகளான ஒன்பது மற்றும் பத்தாம் வீடுகளின் அதிபதியாகவும் விளங்குகிறார். ஜோதிட விதிகளின்படி ஒரு ராசிக்கு ஏழரை சனி என்பது சனி பகவான் அந்த ராசிக்கு முந்தைய வீடு (12ஆம் வீடு), ராசி (1ஆம் வீடு), அடுத்த வீடு (2ஆம் வீடு) ஆகியவற்றில் சஞ்சரிக்கும் காலத்தைக் குறிக்கும்.

இதையும் படியுங்கள்:  Tamil Astrology: 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சூரியனின் அபூர்வ சேர்க்கை.! ஜூலையில் இந்த 4 ராசிகளுக்கு ஏறுமுகம் தான்.!

38
தற்காலிகமாக நீங்கும் ஏழரை சனியின் தாக்கம்
Image Credit : Asianet News

தற்காலிகமாக நீங்கும் ஏழரை சனியின் தாக்கம்

ஜோதிடத்தின்படி ரிஷப ராசிக்கு ஏழரை சனி ஜூன் 3, 2027 அன்று தொடங்குகிறது. ஆனால் சனி பகவான் அக்டோபர் 20, 2027 வக்ர நிலையில் பின்னோக்கி நகர்ந்து மீன ராசிக்குள் நுழைவார். மீண்டும் பிப்ரவரி 23, 2028 அன்று மேஷ ராசிக்கு வருவார். அப்போதுதான் ரிஷப ராசிக்கு ஏழரை சனியின் முழுமையாகத் தொடங்கும் ஜூன் 3, 2027 அவர் மேஷ ராசிக்கு வந்தாலும் பிப்ரவரி 23, 2028 முதலே அவரின் முழுமையான பலன்கள் ரிஷப ராசிக்கு தெரிய வரும். இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் தற்காலிகமாக நீங்கும்.

இதையும் படியுங்கள்:  Numerology: உங்களுக்கு அடுத்த பிறவி இருக்குமா? இல்லை இதுவே கடைசி பிறவியா? பிறந்த தேதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

48
1. முதல் கட்டம்: விரயச் சனி (மேஷ ராசியில் சனி)
Image Credit : Gemini AI

1. முதல் கட்டம்: விரயச் சனி (மேஷ ராசியில் சனி)

ரிஷப ராசிக்கு ஏழரை சனியின் காலகட்டம் மூன்று கட்டங்களாக நடக்க இருக்கிறது. முதல் காலகட்டம் விரய சனி. மேஷ ராசியில் சனி பகவான் இருக்கும் பொழுது விரய சனி தொடங்குகிறது. இந்த முதல் இரண்டரை ஆண்டுகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேறுவது கடினமாக இருக்கும். தேவையற்ற விரயங்கள் ஏற்படலாம். வீடு கட்டுதல், சுப நிகழ்ச்சிகள் போன்ற சுப விரயங்களும் அதிகரிக்கும். தூக்கமின்மை, வீண் அலைச்சல், மனதில் ஒருவித இனம் புரியாத பதற்றம் ஏற்படலாம். புதிய தொழில் முதலீடுகள் மற்றும் பெரிய அளவிலான கடன் கொடுப்பதை இந்த காலகட்டத்தில் தவிர்க்க வேண்டும்.

58
இரண்டாம் கட்டம்: ஜென்மச் சனி (ரிஷப ராசியில் சனி)
Image Credit : Asianet News

இரண்டாம் கட்டம்: ஜென்மச் சனி (ரிஷப ராசியில் சனி)

சனி பகவான் உங்கள் சொந்த ராசியான ரிஷபத்திலேயே சஞ்சரிக்கும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் ஜென்ம சனி தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் சோர்வு, அஜீரணக் கோளாறுகள், சோம்பல் அதிகரிக்கலாம். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்காமல் போகலாம். உயர் அதிகாரிகளுடன் பேசும்பொழுது நிதானம் தேவை. உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் உருவாகும். கடுமையான உழைப்பும், நேர்மையும் மட்டுமே உங்களைக் காப்பாற்றும்.

68
மூன்றாம் கட்டம்: பாதச் சனி (மிதுன ராசியில் சனி)
Image Credit : Asianet News

மூன்றாம் கட்டம்: பாதச் சனி (மிதுன ராசியில் சனி)

சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான மிதுனத்தில் சஞ்சரிக்கும் இறுதிக்கட்டம் கடைசி இரண்டரை ஆண்டுகள் பாத சனி நடக்கிறது. இதன் காரணமாக குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரலாம். வார்த்தைகளில் நிதானம் அவசியம். கோபப்பட்டு பேசும் வார்த்தைகள் உறவுகளை பாதிக்கலாம். பணப்புழக்கம் ஓரளவு சீராக இருக்கும் என்றாலும் சேமிப்பும் குறைய வாய்ப்பு உண்டு. ஏழரை சனியின் இறுதி கட்டம் என்பதால் இந்த இரண்டு ஆண்டுகள் சனி பகவான் உங்களை பக்குவப்படுத்தி சோதனைகளில் இருந்து விடுதலை கொடுத்து, புதிய விடியலை தரத் தொடங்குவார்.

78
ரிஷப ராசிக்கு சனி தரும் சிறப்புப் பலன்
Image Credit : Asianet News

ரிஷப ராசிக்கு சனி தரும் சிறப்புப் பலன்

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான். சுக்கிரனும் சனியும் ஜோதிடத்தில் நட்பு கிரகங்கள். மேலும் ரிஷபத்திற்கு சனி பகவான் தர்ம கர்மாதிபதி என்பதால் அவர் மற்ற ராசிகளுக்கு கொடுப்பது போல கடுமையான தீமைகளை அள்ளிக் கொடுக்க மாட்டார். இந்த காலகட்டம் உங்களை வாழ்க்கையில் பக்குவப்பட்ட மனிதராக மாற்றும். கடினமாக உழைப்பவர்களுக்கு சனி பகவான் அதற்கான பலன்களை அள்ளிக் கொடுப்பார். குறுக்கு வழிகளைத் தவிர்த்து, நேர்மையாக இருப்பவர்கள் ஏழரை சனியின் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு நல்ல பலன்களைப் பெற முடியும்.

88
எளிய பரிகாரங்கள்
Image Credit : Asianet News

எளிய பரிகாரங்கள்

சனி பகவானின் அருளைப் பெறுவதற்கு சில எளிய பரிகாரங்களை செய்யலாம். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமும், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும் சாற்றி வழிபட்டு வர அமைதி கிடைக்கும். ஏழை எளியவர்கள், முன்களப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு உணவு அல்லது உடை வழங்கி உதவுங்கள். தினமும் காலையில் காக்கைக்கு எள் கலந்த சாதம் வைப்பது சனியின் வீரியத்தைக் குறைக்கும். சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்த்து விரதம் இருந்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
சனிப்பெயர்ச்சி
ராசி பலன்
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(82.0 ov)243/5
INDIND
-
Day 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(93.0 ov) 98 & 309/9
Day 3
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Karthigai Month caution : கார்த்திகை மாதத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் யார்? எதிலும் கவனம் தேவை!
Recommended image2
Astrology: நவம்பர் 30-க்குள் பணமழை கொட்டப்போகிறது.. குபேர யோகம் பெறும் 4 ராசிகள்!
Recommended image3
Zodiac Signs: செவ்வாய் – குரு சேர்க்கையால் ஜாக்பாட்.. அடுத்த 30 நாட்களில் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்!
Related Stories
Recommended image1
Name Numerology Calculator: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க எந்த துறையில் முதலீடு செய்தால் பெரிய ஆளா வருவீங்கன்னு நாங்க சொல்றோம்.!
Recommended image2
Garuda Purana: மரணத்திற்கு பின் ஆன்மா எத்தனை நாள் வீட்டிலேயே இருக்கும்? எப்போது வீட்டை விட்டு வெளியேறும் தெரியுமா? கருட புராணம் சொல்வது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved