- Home
- Astrology
- மகரத்தில் உருவாகும் இரட்டை ராஜயோகம்.! ஆபூர்வ கிரக சேர்க்கையால் உச்சக்கட்ட பலன்களைப் பெறப்போகும் 5 ராசிகள்.!
மகரத்தில் உருவாகும் இரட்டை ராஜயோகம்.! ஆபூர்வ கிரக சேர்க்கையால் உச்சக்கட்ட பலன்களைப் பெறப்போகும் 5 ராசிகள்.!
Double Rajyog in Capricorn 2026: மகர ராசியில் சங்கமித்துள்ள சுபகிரகங்களால் இரட்டை ராஜ யோகங்கள் உருவாக்கியுள்ளன. அது குறித்தும், அதனால் பலன் பெறும் ராசிகள் குறித்தும், இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

மகர ராசியில் இரட்டை ராஜயோகங்கள்
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மகர ராசியில் பல அபூர்வ கிரக மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. தைரியம் மற்றும் வீரத்தின் காரகராக விளங்கும் செவ்வாய் பகவான் ஜனவரி 16, 2026 தனது உச்ச ராசியான மகரத்திற்குள் நுழைந்திருக்கிறார். ஏற்கனவே மகர ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரன் அமர்ந்துள்ள நிலையில் செவ்வாய் பகவானின் வருகையால் திரிகிரக யோகம் உருவாகிறது. மேலும் செவ்வாய் தனது உச்ச வீடான மகரத்திற்குள் நுழைவதால் ருச்சக ராஜயோகமும் உருவாகிறது. இது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்க இருக்கிறது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
மேஷம்
இந்த இரட்டை ராஜயோகங்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியான மாற்றங்கள் நிகழ இருக்கிறது. பணியில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் தலைமைப் பண்புகள் உயரும். அரசுப் பணிக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வரலாம். ஏற்கனவே அரசு பணியில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும் காலம் நெருங்கியுள்ளது.
கடகம்
கடக ராசியின் ஏழாம் வீட்டில் இரட்டை ராஜயோகங்கள் உருவாக இருக்கிறது. ஏழாம் வீடு என்பது திருமண வாழ்க்கை மற்றும் கூட்டுத் தொழில் ஆகியவற்றை குறிக்கும் வீடாகும். எனவே இந்த காலகட்டத்தில் கணவன் மனைவிக்கு இடையே நிலவி வந்த கசப்புணர்வுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணத்திற்காக வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமையும். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் அபரிமிதமான லாபத்தைக் காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இந்த ராஜயோகங்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த காலகட்டத்தில் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கலாம். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறப்பான வெற்றிகளைப் பெறுவார்கள். உயர்கல்வி அல்லது மேல் படிப்பிற்கான வாய்ப்புகள் தேடி வரும். பங்குச்சந்தை மற்றும் பிற முதலீடுகளில் இருந்து எதிர்பாராத பண வரவு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இனிமை கூடும். திருமணமானவர்களுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் மூன்றாம் வீட்டில் இந்த இரட்டை ராஜயோகங்கள் உருவாகிறது. மூன்றாம் வீடு தைரிய ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கை மற்றும் மன உறுதி அதிகரிக்கும். சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். தொழில் நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் நிதி ஆதாயங்களைப் பெற்றுத் தரும். உடன் பிறந்தவருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கும். ஐடி மற்றும் ஊடகம் சார்ந்த துறையில் பணிபுரிபவர்களுக்கு இது பொற்காலமாக அமையும்.
மகரம்
மகர ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் இந்த ராஜயோகங்கள் உருவாவதால் இந்த ராசிக்காரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும். உங்கள் தோற்றத்திலும் பேச்சிலும் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சரியான முடிவுகளை எடுத்து வெற்றிகளைப் பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருப்பவர்கள் அதை தாராளமாக செய்யலாம். தொடங்கும் தொழிலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். எதிர்பாராத வகையில் பல வழிகளில் இருந்து பணம் வந்து சேரும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும் காலமாக இது அமையும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

