- Home
- Astrology
- பெட்ரோல் செலவை 50% குறைக்கும் ட்ரிக்.! மாதம் ரூ.2000 மிச்சமாகும்.! வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் நியூஸ்.!
பெட்ரோல் செலவை 50% குறைக்கும் ட்ரிக்.! மாதம் ரூ.2000 மிச்சமாகும்.! வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் நியூஸ்.!
பெட்ரோல் செலவு உங்கள் பட்ஜெட்டை பாதிக்கிறதா? சில எளிய பழக்கங்களை மாற்றுவதன் மூலம், பெட்ரோல் செலவை கணிசமாகக் குறைக்கலாம்.

கையை கடிக்கும் பெட்ரோல் செலவு.!
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஒரு வீட்டின் மாத வருவாயில் பெரும்பங்கு பெட்ரோல் செலவுக்கு ஒதுக்கப்படுவதும், அந்த செலவுகள் கட்டுக்குள் வராமல் சிக்கலில் ஆழ்த்துவதும் இயல்பாகிப் போயிருக்கிறது. ஆனால், இந்த நிலைமையை மாற்ற முடியாதா? நிச்சயமாக முடியும். சில பழக்கங்களை மாற்றி, திட்டமிட்ட வாழ்க்கையைச் செலுத்தினால் பெட்ரோல் செலவை பாதியாகக் குறைக்கலாம் என்பது சாத்தியம் மட்டுமல்ல, அனுபவபூர்வமான உண்மை
கை கொடுக்கும் நடராஜா சர்வீஸ்
முதலாவதாக, சுருக்கமான இடங்களுக்கு கார் அல்லது பைக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வீட்டு அருகாமையில் உள்ள கடைகள், பள்ளி, பஸ்ஸ்டாப் போன்ற இடங்களுக்கு நடந்து செல்லும் பழக்கம் இருந்தாலே, வாரத்திற்கு குறைந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் மிச்சமாகும். இதற்கு மேல் உடற்பயிற்சி என்ற ஒரு கூடுதல் நன்மையும் கிடைக்கும். இன்று நடப்பது சிக்கனம் என்றால், நாளை அது நலமாக மாறும்.
ஒரே நாளில் வேலைய முடங்கப்பா.!
அடுத்ததாக, வாராந்திர வேலைகளை ஒரே நாளில் முடிக்க முயற்சிக்க வேண்டும். பல தடவை வண்டி எடுத்து வெளியே போவதை விட, அனைத்து தேவைபாடுகளையும் ஒரே நாளில் திட்டமிட்டு முடித்துவிட்டால், அதற்கேற்ப பெட்ரோல் செலவும் குறையும். சிறிய விஷயங்களைப் போனபடியே செய்வது ஒரு கையில் பெட்ரோல், மற்றொரு கையில் நேரத்தை வீணடிக்கிறதற்குச் சமம்.
இது நல்ல மேட்டர்.!
மூன்றாவது, டெலிவரி பயன்பாடுகளைப் புத்திசாலித்தனமாக பயன்படுத்தலாம். மருந்து, மளிகை, உணவு போன்றவற்றுக்காகச் சைக்கிளில் கூட போக வேண்டிய தேவையில்லாமல், குறைந்த டெலிவரி கட்டணத்தில் எல்லாம் வீடு தேடி வந்துவிடும். இது நேரம், சக்தி இரண்டையும் மிச்சப்படுத்தும். மாதம் ரூ.150 வரை மிச்சமாகும்.
இவ்ளோ மச்சமா.?!
நான்காவது, குடும்பத்தில் ஒரே வீட்டிலுள்ளவர்கள் தனித்தனியாகக் காரோ பைக்கோ எடுத்துச் செல்லும் பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும். ஒரே வழியில் செல்லும் வேலைக்கு ஒரே வாகனத்தில் செல்லும் திட்டமிடல் இருந்தாலே தினசரி சுமார் ரூ.30 - ரூ.50 வரை மிச்சப்படலாம். இதற்காகக் குழுவாகச் செயல்படும் பழக்கம் முக்கியம்.
சும்மா சும்மா பெட்ரோல் பங்க் போகவேண்டாம்.!
ஐந்தாவது, நூறு ரூபாய்க்கு போதும் என்று அடிக்கடி பெட்ரோல் நிரப்பும் பழக்கம் தவிர்க்கப்படவேண்டும். குறைவாக நிரப்புவது எஞ்சின் செயல்திறனை பாதிக்கும். அதற்குப் பதிலாக, ஒரு முறையில் முழுமையாக நிரப்புவது சிறந்தது. இது பயணத்தையும் சீராக வைக்கும், செலவையும் கணக்கில் வைக்கும்.
கேள்வி கேட்டால் காசு மிச்சம்.!
ஒவ்வொரு தடவை வண்டியை ஸ்டார்ட் செய்யும் முன், இந்த பயணம் அவசியமா? என்று உங்களுக்கே ஒரு கேள்வி எழுப்புங்கள். அந்த ஒரு நிமிட சிந்தனையே உங்கள் வருடாந்த செலவில் வித்தியாசம் செய்யக்கூடியது.
இனி சேவிங்ஸ் அதிகரிக்கும்
பெட்ரோல் செலவை கட்டுப்படுத்த வாகன ஓட்டத்தை மட்டும் சீரமைத்தால், வாழ்வியலையே சீரமைக்க வேண்டும். மாற்றம் என்பது கண்ணுக்கு தெரியாத சின்ன முயற்சிகளின் கூட்டுத்தொகை. இன்று பழக்கத்தை மாற்றினால், நாளை செலவு மாறும்.