- Home
- Astrology
- பஞ்சக்கிரஹி யோகத்தால் தனுசுக்கு அடித்தது ஜாக்பாட்! பிப்ரவரி மாதம் முழுக்க கொண்டாட்டம் தான்!
பஞ்சக்கிரஹி யோகத்தால் தனுசுக்கு அடித்தது ஜாக்பாட்! பிப்ரவரி மாதம் முழுக்க கொண்டாட்டம் தான்!
Dhanusu Rasi February Month Rasi Palan 2026 : பிப்ரவரி மாதத்தைப் பொறுத்த வரையில் தனுசு ராசியினருக்கு கலவையான பலன்களை கிடைக்கப் போகின்றன. கிரக சேர்க்கைகள் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் நிலையில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

பஞ்சக்கிரஹி யோகத்தால் தனுசுக்கு அடித்தது ஜாக்பாட்!
குரு பகவானை ராசி அதிபதியாக கொண்ட தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த பிப்ரவரி மாதத்தின் பலன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். பிப்ரவரி மாதத்தைப் பொறுத்த வரையில் கிரக நிலைகளான சனி பகவான் 4ஆம் வீட்டிலும், குரு பகவான் 7ஆவது வீட்டிலும் சஞ்சாரம் செய்கின்றன. இதே போன்று ராகு பகவான் 3ஆவது வீட்டிலும், கேது பகவான் 9ஆவது வீட்டிலும் சஞ்சாரம் செய்கின்றன. ஆனால், 2 கிரகங்களும் வக்கிர நிலையில் இருக்கின்றன.
பிப்ரவரி மாதம் முழுக்க கொண்டாட்டம் தான்!
மேலும், சுக்கிரன், புதன், சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய 4 கிரகங்களும் குடும்ப ஸ்தானம் என்று சொல்லப்படும் 2ஆவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்றன. மாதத்தின் பிற்பகுதியில் இந்த 4 கிரகங்களும் 3ஆவது வீட்டிற்கு பெயர்ச்சி அடைந்து ராகு பகவான் உடன் இணைந்து பஞ்சக்கிரஹி ராஜயோகம் உருவாகிறது. இதன் விளைவாக தனுசு ராசியினருக்கு நடக்கும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
தனுசு ராசிக்கான வேலை:
தனுசு ராசியைப் பொறுத்த வரையில் அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெற்றாலும் சக ஊழியர்களின் தொல்லை இருக்கும். அவர்கள் உங்களுக்கு எதிரிகளாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. உங்களது வேலைத்திறன் மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஆதலால் அலுவலகத்தில் அனைவரிடத்திலும் அன்பாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும்.
தனுசு ராசிக்கான தொழில் மற்றும் வியாபாரம்
தனுசு ராசியினரைப் பொறுத்த வரையில் சொந்தமாக தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். சிறிய முதலீடு கூட அதிக லாபத்தை பெற்றுத்தரும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
தனுசு ராசிக்கான காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
தனுசு ராசியைப் பொறுத்த வரையில் காதல் ஜோடிகளுக்கு பிரம்மாதமாக இருக்கும். பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் என்பதால் ரொம்பவே சந்தோஷமாக இருப்பீர்கள். நண்பர்களுடன் இணைந்து வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரலாம். திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.
தனுசு ராசிக்கான கல்வி மற்றும் பொருளாதாரம்:
தனுசு ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் செலுத்தி படித்தால் அதற்கான பலன் கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கையில் பணமில்லை என்ற நிலை வராது. பழைய கடன்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடைபடும்.
தனுசு ராசிக்கான உடல் ஆரோக்கியம்:
தனுசு ராசியைச் சேர்ந்த அன்பர்கலுக்கு இந்த மாதம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எனினும், வேலையில் அழுத்தம் இருக்கும். ஒருவிதமான பதற்றத்துடனே இருப்பீர்கள். கண்டிப்பான முறையில் ஓய்வு எடுக்க வேண்டும். இல்லையென்றால் மன அழுத்தம் ஏற்படக் கூடும்.