- Home
- Astrology
- December 2025 Kadaga Rasi Palangal: கடக ராசி நேயர்களே.! இந்த மாதம் அமோகமா இருக்கும்.! எல்லாமே வெற்றி தான்.!
December 2025 Kadaga Rasi Palangal: கடக ராசி நேயர்களே.! இந்த மாதம் அமோகமா இருக்கும்.! எல்லாமே வெற்றி தான்.!
This Month Rasi Palan: டிசம்பர் 2025 கடக ராசிக்கான பொதுவான பலன்கள், கிரக நிலைகள், தொழில் மற்றும் வேலை, நிதி நிலைமை, ஆரோக்கியம், பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

டிசம்பர் மாத கிரக நிலைகள்:
சூரியன், சுக்கிரன், செவ்வாய்: மாதத் தொடக்கத்தில் இந்த மூன்று கிரகங்களும் ஐந்தாம் வீட்டில் அமைந்துள்ளனர். இதன் காரணமாக உங்கள் திறமைகளை பல இடங்களில் சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.
குரு: மாதத்தின் தொடக்கத்தில் ஜென்ம ராசியில் இருக்கும் குரு டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 12ஆம் வீடான விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
சனி: மாதம் முழுவதும் ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் தொடர்கிறார். இது மிகுந்த நன்மைகளைத் தரும்.
பொதுவான பலன்கள்:
கடக ராசி நேயர்களே, மாதத்தின் முதல் பாதி மிகவும் அனுகூலமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கையும், ஆற்றலும் நிறைந்திருக்கும். குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை இந்த மாதம் நன்றாக இருக்கும். அதிக கோபப்படுவதையும், சிந்தித்துக்கொண்டே இருப்பதையும் தவிர்ப்பது நல்லது. பழைய நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
நிதி நிலைமை:
ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் சுக்கிரன், சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் 11வது வீட்டை பார்ப்பதால் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. மாதத்தின் முதல் பகுதியில் நிதி நிலைமை சிறப்பாக இருந்தாலும் பிற்பகுதியில் செலவுகள் அதிகரிக்கலாம். இது பெரும்பாலும் சுப செலவுகள் அல்லது நற்காரியங்களுக்காக இருக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் அதிக அவசரப்படுவதை தவிர்க்கவும்.
தொழில் மற்றும் வேலை:
மாதத்தின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். வேலையிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். அதை கவனத்துடன் செய்து முடிப்பீர்கள். வேலையை மாற்ற விரும்புவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய புதிய வேலை கிடைக்கலாம். தொழில் செய்து வருபவர்களுக்கு இந்த மாதம் சிறப்பானதாக அமையும். விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலில் உள்ளவர்களுக்கு கடின உழைப்பு தேவைப்படலாம்.
கல்வி மற்றும் ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தில் இந்த மாதம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனைகள் சிக்கல்களை ஏற்படுத்தலாம். உணவில் அக்கறையும் ஆரோக்கியத்தில் கவனமும் தேவைப்படும்.
மாணவர்களுக்கு கல்வியியல் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், இந்த மாதம் நல்ல பலன்களைத் தரும். படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
குடும்ப உறவுகள்:
குருவின் பார்வை காரணமாக கணவன் மனைவி இடையே உறவு மேம்படும். ஐந்தாம் வீட்டில் செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்கள் இருப்பதால் சண்டை அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே நிதானம் தேவை. குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் சில கவலைகள் ஏற்பட்டு மறையும். குடும்பத்தில் சுப காரியங்களில் தாமதம் ஏற்பட்டாலும், நிறைவில் சுப முடிவுகள் கிடைக்கும்.
பரிகாரங்கள்:
வெள்ளிக்கிழமைகளில் அபிராமி அந்தாதி அல்லது லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது மிகவும் நன்மை பயக்கும். புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசனம் செய்து வருவது நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும். சிவபெருமான் பார்வதி தேவியை வணங்குவது மன அமைதியைத் தரும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

