- Home
- Astrology
- December 2025 Dhanusu Rasi Palangal: டிசம்பரில் தனுசு ராசியில் குவியும் சுப கிரகங்கள்.! கோடிகளை அள்ளப்போகும் தனுசு ராசிக்காரர்கள்.!
December 2025 Dhanusu Rasi Palangal: டிசம்பரில் தனுசு ராசியில் குவியும் சுப கிரகங்கள்.! கோடிகளை அள்ளப்போகும் தனுசு ராசிக்காரர்கள்.!
This Month Rasi Palan: டிசம்பர் 2025 தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், கிரக நிலைகள், தொழில் மற்றும் வேலை, நிதி நிலைமை, ஆரோக்கியம், பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

டிசம்பர் மாத கிரக நிலைகள்:
டிசம்பர் மாதத்தில் தனுசு ராசியில் செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய நான்கு சுப கிரகங்கள் நுழைகின்றன. இதன் காரணமாக உருவாகும் ‘சதுர்கிரக யோகம்’ புதிய வாய்ப்புகளையும், முன்னேற்றங்களையும் தரக்கூடும்.
குரு: குரு பகவான் மாதத்தின் தொடக்கத்தில் எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியதை குறிக்கிறது.
சனி மற்றும் ராகு: நான்காம் வீட்டில் சனியும், மூன்றாம் வீட்டில் ராகுவும் இருப்பதால் இடமாற்றம் அல்லது தொழில் ரீதியான பயணங்கள் ஏற்படும்.
பொதுவான பலன்கள்:
இந்த மாதம் உருவாகும் சதுர்கிரக யோகம் காரணமாக தன்னம்பிக்கையும், உற்சாகமும் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் காணப்படும். புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலை சம்பந்தமாக வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கலாம். சில சவால்கள் வந்தாலும் கடின உழைப்பு மற்றும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள்.
நிதி நிலைமை:
நிதி சார்ந்த விஷயங்களில் இந்த மாதம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். எதிர்பாராத செலவுகள், நிதி இழப்பீடுகளை சந்திக்க நேரிடலாம். எனவே பட்ஜெட் தயாரிப்பதும், நிதி நிர்வாகத்தில் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். இந்த மாதம் பொருளாதார நிலைமை சீராகும்.
தொழில் மற்றும் வேலை:
வேலையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய திட்டத்தில் பணிபுரிவீர்கள். வேலை தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். தொழில் செய்து வருபவர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். குருவின் நிலைப்பாடு தொழிலில் லாபத்தை அளிக்கும். புதிய யோசனைகளை செயல்படுத்தி முன்னேறிச் செல்வீர்கள்.
கல்வி மற்றும் ஆரோக்கியம்:
எட்டாம் வீட்டில் குரு பகவான் இருப்பது உடல்நலப் பிரச்சனைகளை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். உணவு, உடற்பயிற்சி, போதுமான ஓய்வு ஆகியவற்றின் மூலம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
மாணவர்களுக்கு இந்த மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். அதிக முயற்சிகளை மேற்கொள்பவர்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.
குடும்ப உறவுகள்:
குடும்ப வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை அதிகரிக்கும். பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். காதல் உறவுகளின் அடிப்படையில் இந்த மாதம் சராசரியாக இருக்கும். சவால்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு உறவுகளை கையாள்வீர்கள். திருமணமானவர்களுக்கு மாதத்தின் ஆரம்பம் பலவீனமாக இருந்தாலும், மாதத்தில் இறுதியில் இறுக்கம் குறைந்து உறவு மேம்படும்.
பரிகாரங்கள்:
கோவில்களில் நடக்கும் அன்னதானங்களுக்கு உங்களால் முடிந்த பங்களிப்பை செய்யுங்கள். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிறப் பொருட்களை தானம் செய்வது நல்லது. தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. ஸ்ரீராகவேந்திரர், சீரடி சாய்பாபா போன்ற மகான்களை வணங்குவது பலன்களை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

