- Home
- Astrology
- Weekly Rasi Palan: கடக ராசி நேயர்களே, இந்த வாரம் திரும்பும் திசை எல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கும்.!
Weekly Rasi Palan: கடக ராசி நேயர்களே, இந்த வாரம் திரும்பும் திசை எல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கும்.!
Kadaga Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

வார ராசிப்பலன்கள் - கடகம்
கடக ராசி நேயர்களே, இந்த வாரம் நம்பிக்கையும், உழைப்பும் கலந்த வாரமாக இருக்கும். உங்கள் செயல்பாடுகளில் புதிய வேகம் பிறக்கும். நிலுவையில் இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டம் அல்லது உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் பயனுள்ளதாக அமையும்.
நிதி நிலைமை:
இந்த வாரம் பண வரவு சீராக இருக்கும். குருவின் பலத்தால் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வேலை இடத்தில் கூடுதல் வருமானம் அல்லது முதலீடுகளில் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சனி பகவானின் நிலையால் திடீர் மற்றும் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அவசர தேவைகளுக்காக சிறு தொகையை ஒதுக்கி வைப்பது நல்லது. பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆரோக்கியம்:
இந்த வாரம் சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு மறையும். குறிப்பாக அஜீரணம் அல்லது முதுகு வலி போன்ற பிரச்சனைகள் வரலாம். முறையான உணவுப் பழக்கம் மற்றும் போதுமான ஓய்வெடுக்க வேண்டியது அவசியம். மன அழுத்தத்தை குறைக்க யோகா அல்லது உடற்பயிற்சிகளை செய்யலாம். இந்த வாரம் ஆற்றல் அதிகமாக இருக்கும்.
கல்வி:
மாணவர்களுக்கு சாதகமான வாரமாக இருக்கும். புதன் பகவானின் நிலை காரணமாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் வெற்றியைப் பெறுவீர்கள். வெளிநாட்டுக்குச் சென்று கல்வி பயிலும் முயற்சிப்பவர்களுக்கு முன்னேற்ற கிடைக்கும். ஆராய்ச்சி மற்றும் பிற துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான நிலை ஏற்படும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
தொழில் ஸ்தானத்தில் சுப கிரகங்கள் சஞ்சரிப்பதால் உங்களின் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ள சரியான நேரம் ஆகும். தொழில் முனைவோர் புதிய திட்டங்களை செயல்படுத்தலாம். உங்கள் தலைமைப் பண்பு வெளிப்படும். லாபம் அதிகரிக்கும்.
குடும்ப உறவுகள்:
சுக்கிர பகவான் சாதகமான இடத்தில் இருப்பதால் காதல் உறவுகள் இனிமையாக மாறும். மனம் லேசாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் அனைத்தையும் சரி செய்வீர்கள். வார இறுதியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பரிகாரம்:
சிவபெருமானுக்கு வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதிக்கு உதவும். ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபடுவது வேலை மற்றும் தொழிலில் இருக்கும் தடைகளை நீக்கும். துர்க்கை அம்மனை வழிபடுவது ஆற்றலை அதிகரிக்கும். முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு ஏற்பாடு செய்வது நேர்மறை பலன்களைக் கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

