- Home
- Astrology
- Daily Rasi Palan : சந்திரனின் அருளால் யோகம் பெறப்போகும் ராசிகள் இவைதான்; மேஷம் முதல் மீனம் வரை இன்றைய பலன்கள்!
Daily Rasi Palan : சந்திரனின் அருளால் யோகம் பெறப்போகும் ராசிகள் இவைதான்; மேஷம் முதல் மீனம் வரை இன்றைய பலன்கள்!
Today Horoscope in Tamil : கிரக நிலைகளின் பெயர்ச்சி அடிப்படையில் 12 ராசிகளுக்கான பிப்ரவரி 2ஆம் தேதிக்கான இன்றைய ராசி பலன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம் ராசிக்கான ராசி பலன்:
மேஷ ராசி அன்பர்களே பிப்ரவரி 2ஆம் தேதிக்கான ராசி பலனை பார்க்கையில் உங்களுக்கு ssமன அழுத்தம் ஏற்படக் கூடும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் காட்ட மன அழுத்தம் குறையும். வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் விரையச் செலவுகள் அதிகரிக்கும். சிவபெருமான் வழிபாடு வெற்றி தரும்.
ரிஷபம் ராசிக்கான ராசி பலன்:
ரிஷப ராசி அன்பர்களே இன்று பிப்ரவரி 2ஆம் தேதி உங்களுக்கு ஏராளமான நன்மைகள் நிறைந்த நாளாக அமையும். உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வேலையில் பேரும், புகழும் கிடைக்கும். நிதி நிலையில் சீரான முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
மிதுனம் ராசிக்கான இன்றைய ராசி பலன்:
மிதுனம் ராசி அன்பர்களே இன்றைய ராசி பலனைப் பொறுத்த வரையில் பணிச்சுவமை அதிகரிக்கும். வாழ்க்கை துணையிடம் கவனமாக பேச வேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு பணப்பிரச்சனை வரக் கூடும். உடல் நிலையில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக கை, கால் மூட்டு வலியால் அவதிப்படும் நிலை ஏற்படலாம்.
கடகம் ராசிக்கான இன்றைய ராசி பலன்:
கடக ராசி அன்பர்களே இன்றைய ராசி பலனைப் பொறுத்த வரையில் இறைவழிபாடு எல்லா நன்மையும் கொண்டு வந்து தரும். நிதி நிலையில் பற்றாக்குறை ஏற்படக் கூடும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நன்மை அளிக்கும். செரிமான பிரச்சனை ஏற்படக் கூடும்.
சிம்மம் ராசிக்கான இன்றைய ராசி பலன்:
சிம்ம ராசி அன்பர்களே இன்றைய ராசி பலனைப் பொறுத்த வரையில் இந்த நாள் கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வீண் செலவுகள் ஏற்படக் கூடும். பனப்பற்றாக்குறையால் அவதிப்படுவீர்கள். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு உடல் நலப் பிரச்சனை ஏற்படக் கூடும். வீண் அலைச்சல் ஏற்படலாம்.
கன்னி ராசிக்கான இன்றைய ராசி பலன்:
கன்னி ராசி அன்பர்களே இந்த நாளைப் பொறுத்த வரையில் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். எல்லா நன்மைகளும் தேடி வரும். வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். பணப்புழக்கம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
துலாம் ராசிக்கான இன்றைய ராசி பலன்:
துலாம் ராசியைப் பொறுத்த வரையில் வாழ்க்கைத்துணையிடன் வெளியில் சென்று வருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசி பலன்:
விருச்சிகம் ராசி அன்பர்களே இன்றைய ராசி பலனை பார்க்கையில் உங்களது சிந்தனை திறன் அதிகரிக்கும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்பட உடற்பயிற்சி செய்வது நன்மை அளிக்கும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
தனுசு ராசிக்கான இன்றைய ராசி பலன்:
தனுசு ராசி அன்பர்களே பிப்ரவரி 2ஆம் தேதியைப் பொறுத்த வரையில் அம்மாவின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். நிதானமாக செயல்பட வேண்டும்.
மகரம் ராசிக்கான இன்றைய ராசி பலன்:
மகரம் ராசி அன்பர்களே இன்றைய ராசியை பொறுத்த வரையில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
கும்பம் ராசிக்கான இன்றைய ராசி பலன்:
கும்பம் ராசி அன்பர்களே இன்றைய ராசியை பொறுத்த வரையில் உடல் ஆரோக்கியம் மேம்படும். நிதி நிலையில் முன்னேற்றம் அதிகரிக்கும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். எல்லா வேலைகளையும் உரிய நேர்த்தில் செய்து முடிப்பீர்கள்.
மீனம் ராசிக்கான இன்றைய ராசி பலன்:
மீனம் ராசி அன்பர்களே கடின முயற்சிகளுக்கு பிறகு வெற்றி கிடைக்கும். நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பண இழப்பு ஏற்படக் கூடும். கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். செரிமான பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.