MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • அக்டோபர் 24, இன்றைய ராசி பலன்கள்! எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும்.! பணமழை கொட்டும்.!

அக்டோபர் 24, இன்றைய ராசி பலன்கள்! எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும்.! பணமழை கொட்டும்.!

இந்தக் கட்டுரை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை விரிவாக வழங்குகிறது. ஒவ்வொரு ராசிக்கும் தொழில், நிதிநிலை, குடும்ப உறவுகள், மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பலன்கள் மற்றும் எச்சரிக்கைகள் இதில் அடங்கியுள்ளன.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Oct 24 2025, 06:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம் (Aries)
Image Credit : Asianet News

மேஷம் (Aries)

மேஷ ராசி நேயர்களே,  இன்று உங்கள் சமூகப் பணிகளில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். உங்களின் நேர்மையான அணுகுமுறை மற்றவர்களின் பாராட்டைப் பெறும். சமூகத்தில் உங்கள் பெயர், புகழ் உயரும். நண்பர்கள் வட்டம் விரிவடையும். புதிய உறவுகள் உங்களுக்கு ஆதரவாக மாறும். ரியல் எஸ்டேட் தொடர்பானவர்கள் இன்று நல்ல லாபத்தைப் பெற வாய்ப்பு உள்ளது. தந்தையின் ஆசீர்வாதம், குடும்பத்தின் ஆதரவு, இரண்டும் உங்களை முன்னேற்றும். உடல் நலத்தில் சிறு சிரமங்கள் தோன்றினாலும் அவை தற்காலிகமானவை. அதிகப்படியான மன அழுத்தம் வராமல் கவனியுங்கள். ஆன்மீகப் பாதையில் செல்வது மனநிம்மதியை தரும். இன்று உங்களை உங்களின் மனசாட்சி நல்வழிப்படுத்தும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
ரிஷபம் (Taurus)
Image Credit : Asianet News

ரிஷபம் (Taurus)

ரிஷப ராசி நேயர்களே, வேலை சார்ந்த விஷயங்களில் இன்று மிகுந்த கவனம் தேவை. அலுவலகத்தில் சிறு தவறுகளும் பெரிய பிரச்சினையாக மாறக்கூடும். எதிரிகள் உங்களை சோதிக்க முயன்றாலும், உங்கள் புத்திசாலித்தனமான அணுகுமுறை அவர்களை வெல்லச் செய்யும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு பெருகும்; குடும்பத்தில் அமைதி நிலவும். காதல் வாழ்க்கை இனிமை பெறும். திடீரென ஆன்மீக ஆர்வம் மேலெழலாம். ஒரு தெய்வ ஸ்தலத்திற்குச் செல்லும் திட்டமும் உருவாகும். நிதி விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருங்கள். வாகன பயணங்களில் பொறுமையுடன் நடந்துகொள்வது நல்லது.

312
மிதுனம் (Gemini)
Image Credit : Asianet News

மிதுனம் (Gemini)

மிதுன ராசி நேயர்களே, நிதி நிலைமை இன்று சற்று சிரமம் தரக்கூடும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்கவும். குடும்ப உறவுகளில் சிறு மோதல்கள் ஏற்படலாம். ஆனால் உங்கள் நிதானமான பேச்சால் அதை சமாளிக்க முடியும். வாழ்க்கை துணைக்கு பரிசு கொடுப்பது உறவை மேலும் வலுப்படுத்தும். உடல் நலத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம், குறிப்பாக வயிற்று தொடர்பான பிரச்சனைகளில் கவனம் தேவை. தொழிலில் சிறு சவால்கள் இருந்தாலும் நாளின் முடிவில் பலன் உங்களுக்கே. நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

412
கடகம் (Cancer)
Image Credit : Asianet News

கடகம் (Cancer)

கடக ராசி நேயர்களே, இன்று சகோதரர், சகோதரிகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். கடின உழைப்பின் பலன் சிறு தாமதத்துடன் கிடைத்தாலும், வெற்றியின் சுவை இனிமையாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் ஒழுக்கமும் பொறுப்பும் மேலதிகாரிகளை கவரும். ஆன்மீக ஆர்வம் உயரும். சிலர் தியானம் அல்லது யோகாவில் ஈடுபடலாம். தேவையான முடிவுகளை எடுக்கும் போது பொறுமையாக இருங்கள். சொத்து அல்லது வாகன தொடர்பான விஷயங்களில் நிதானம் அவசியம்.

512
சிம்மம் (Leo)
Image Credit : Asianet News

சிம்மம் (Leo)

சிம்ம ராசி நேயர்களே,  இன்று தான தர்ம மனப்பான்மை அதிகரிக்கும். பிறருக்காக செய்யும் சிறு உதவிகளும் பெரிய பலன்களைத் தரும். நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். புதிய தொழில் முயற்சிகளை தொடங்க சிறந்த நாள். உழைப்பும் நம்பிக்கையும் இணைந்து உங்களை வெற்றியின் உச்சிக்குக் கொண்டுசெல்லும். அரசாங்கத்திலிருந்து ஆதரவு கிடைக்கலாம். உங்களின் தன்னம்பிக்கையே இன்று உங்கள் மிகப் பெரிய பலம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

612
கன்னி (Virgo)
Image Credit : AI

கன்னி (Virgo)

கன்னி ராசி நேயர்களே, உடல் நலத்தில் சிறு பாதிப்பு இருக்கலாம். உணவு பழக்கத்தில் கவனம் தேவை. நண்பர்களின் உதவியால் பழைய பிரச்சினைகள் தீரும். செல்வ நிலை உயரும். வங்கிக் கணக்கில் பண வரவு ஏற்படும். பிள்ளைகளின் செயல்கள் பெருமை தரும். முக்கியமான ஆலோசனைகள் இன்று நல்ல பலனைத் தரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் தோன்றலாம். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

712
துலாம் (Libra)
Image Credit : Asianet News

துலாம் (Libra)

துலாம் ராசி நேயர்களே, இன்று உங்கள் நாள் பரபரப்பாக இருக்கும். தொழில் சார்ந்த முடிவுகளை எடுத்துக்கொள்வதில் நிதானம் அவசியம். வணிகத்தில் புத்திசாலித்தனமான யுக்திகள் வெற்றி தரும். வாகன ஓட்டத்தில் கவனமாக இருங்கள். சிறு காயங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வேலை தேடுபவர்கள் காத்திருப்பது நல்லது. விரைவில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சிறு மனக்கசப்புகள் ஏற்பட்டாலும், மாலை நேரம் மகிழ்ச்சி தரும் செய்தி வரும்.

812
விருச்சிகம் (Scorpio)
Image Credit : Asianet News

விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசி நேயர்களே, இன்று செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற வாங்குதல்களைத் தவிர்க்கவும். பட்ஜெட் போட்டு செயல்படுவது அவசியம். குழந்தைகளின் நடத்தை மன நிறைவை அளிக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். தொழிலில் சில தடைகள் இருந்தாலும் பொறுமை கடைபிடிப்பது வெற்றியை உறுதி செய்யும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களை ஆராயும் நாள்.

912
தனுசு (Sagittarius)
Image Credit : Asianet News

தனுசு (Sagittarius)

தனுசு ராசி நேயர்களே,  இன்று குடும்பத்தில் சிறு மோதல்கள் ஏற்படலாம். அன்பான வார்த்தைகள் அதனை சரி செய்யும். வங்கி, கடன் போன்ற விஷயங்களில் எச்சரிக்கை தேவை. கடன் வாங்குவதை இன்று தவிர்க்குங்கள். தொழில் நிலைமை சீராக இருக்கும். நண்பர்களுடன் நல்ல உறவு வைப்பது உங்களுக்கு மன அமைதியை தரும். திடீர் பயணங்கள் நிகழலாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு மனநிம்மதியை அளிக்கும்.

1012
மகரம் (Capricorn)
Image Credit : Asianet News

மகரம் (Capricorn)

மகர ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு மூதாதையர் சொத்து கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வேலைப்பகுதியில் புதிய திட்டங்களை ரகசியமாக வைத்துக்கொள்வது நல்லது. சிலர் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். குடும்ப உறவுகள் இனிமையாக இருக்கும். பணவரவு உயர்ந்தாலும், செலவில் கட்டுப்பாடு தேவை. மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உழைப்பைத் தொடருங்கள். பலன் தானாக வரும்.

1112
கும்பம் (Aquarius)
Image Credit : Asianet News

கும்பம் (Aquarius)

கும்ப ராசி நேயர்களே, இன்று நீண்ட நாட்களாக தேங்கி இருந்த நிலுவை பணிகள் நிறைவேறும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். மாமியார் வீடு வழியாக மரியாதை கிடைக்கும். மாணவர்கள் சிறு தடைகளை எதிர்கொள்ளலாம், ஆனால் முயற்சியை நிறுத்த வேண்டாம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் தொழிலில் லாபத்திற்குக் காரணமாக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாகலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

1212
மீனம் (Pisces)
Image Credit : Asianet News

மீனம் (Pisces)

மீன ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு தாய்மாமா வழி உறவுகள் உங்களுக்கு மரியாதை தரும். எதிரிகள் சவால் விட்டாலும் நீங்கள் ரகசியமாக செயல்பட்டால் வெற்றி உங்களுக்கே. மாமியார் தரப்பிலும் துணைவியாரிடமிருந்தும் நல்ல ஆதரவு கிடைக்கும். புதிய வணிக ஒப்பந்தங்கள் லாபம் தரும். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். அவை பெரும் பிரச்சினையாக மாறக்கூடும். ஆன்மீக ஆர்வம் உயரும். சுப நிகழ்வுகளுக்கான சூழ்நிலை உருவாகும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்
 
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jio Astro: இனி ஜோதிடரே தேவையில்லை! AI மூலம் ஜாதகம் சொல்லும் ஜியோ.. ஒரே ஆப்பில் இத்தனை வசதிகளா..?
Recommended image2
Marriage Horoscope: திருமணத் தடைகள் விலகுமா? டிசம்பர் மாதத்தில் கெட்டிமேளம் கொட்டப்போகும் ராசிகள்!
Recommended image3
Astrology: சந்திரன் – யுரேனஸ் சேர்க்கை.. அடுத்த அம்பானி நீங்கள்தான்! திடீர் பணவரவு, கோடிகளில் லாபம்.. அதிர்ஷ்ட ராசிகள் இதோ!
Related Stories
Recommended image1
Zodiac Signs: பகவான் ராமரை போல் உறவுகள் மீது பாசம் காட்டும் 3 ராசிகள்.! உருகி உருகி அன்பு காட்டுவார்களாம்.!
Recommended image2
Zodiac Signs: நவம்பரில் திரும்பும் சனி பார்வை.! பொங்கு சனியால் கோடிகளை பெறும் 4 ராசிகள்.! இனி தினம் தினம் தீபாவளிதான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved