MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • ஜூலை 28, இன்றைய ராசி பலன்கள் : பணமழை.! பதவி உயர்வு.! சுபச்செய்தி.! மிகவும் சிறப்பான நாள்.!

ஜூலை 28, இன்றைய ராசி பலன்கள் : பணமழை.! பதவி உயர்வு.! சுபச்செய்தி.! மிகவும் சிறப்பான நாள்.!

இன்றைய ராசி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் சந்தோஷத்தையும், வெற்றியையும், நிம்மதியையும் அள்ளித்தரும். தொழில், குடும்பம், நிதி நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த கணிப்புகளையும், பரிகாரங்களையும் இங்கே காணலாம்.

5 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 28 2025, 12:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை 1)
Image Credit : Getty

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை 1)

எப்போதும் நேர்மையின் பக்கம் நிற்கும் மேஷராசி நேயர்களே, இன்று உங்கள் ஆரா உச்சத்தில் இருக்கும். சந்தோஷமும், வெற்றியும் உங்கள் காலடிக்கு ஓடிவரும். திட்டமிட்டப்படி எல்லா பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் அதிக மரியாதை தருவார்கள். நினைத்ததை செய்து முடித்து சாதனை படைப்பீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் பாராட்டும் நிகழ்வு அரங்கேறும். தொழிலில் உங்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குழந்தைகள் குறித்த நற்செய்தி கிடைக்கும். தம்பதிகள் இடையே நல்ல புரிதல் ஏற்படும். சிலர் உங்கள் சாதனைக்கு எதிராக தவறான செய்தியை பரப்பக்கூடும் என்பதால் சிறிது எச்சிரிக்கையாக இருக்கவும். இருந்த போதிலும் உங்கள் தைரியத்தால் வெற்றி உறுதியாகும். மொத்தத்தில் இன்றைய தினம் உங்களுக்கு சந்தோஷத்தத்தையும் நிம்மதியையும் பரிசளிக்கும்.

  • இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள்
  • அதிர்ஷ்டம் கொடுக்கும் எண்: 9
  • லாபம் கொடுக்கும் முதலீடு: தொழில் விரிவாக்கம்
  • பரிகாரம்: முருகன் கோவிலில் பழங்கள் நிவேதனம் செய்யவும்
  • வணங்க வேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
ரிஷபம் (கார்த்திகை 2-4, ரோகிணி, மிருகசீரிஷம் 1-2)
Image Credit : Getty

ரிஷபம் (கார்த்திகை 2-4, ரோகிணி, மிருகசீரிஷம் 1-2)

எதிலும் குறிவைத்து வெற்றியை நேர்மையாக சுவைக்கும் திறன் உடைய ரிஷப ராசி நேயர்களே, இன்று உங்கள் மனநிலை அமைதியாக இருக்கும். பெற்றோர்கள், குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவீர்கள். நீண்ட நாட்களாக நீடித்து வந்த சொத்து பிரிச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். நிதி மேன்மை அடையும். பண வரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். பழைய கடன்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேடி வந்து ஆதரவு தருவார்கள். உங்களின் நெருங்கிய நண்பர்களின் ஆலோசனைகள் வெற்றியை தேடிதரும். குழந்தைகளின் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். மொத்தத்தில் இன்றைய தினம் உங்களுக்கு நல்லதை மட்டுமே கொடுக்கும்.

  • உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறம்: பச்சை
  • அதிர்ஷ்டம் தரும் எண்: 6
  • லாபம் கொடுக்கும் முதலீடு: நிலம், வீடு
  • பரிகாரம்: கோபூஜை செய்து நெய் தீபம் ஏற்றவும்
  • வணங்க வேண்டிய தெய்வம்: பார்வதி அம்மன்
312
மிதுனம் (மிருகசீரிஷம் 3-4, திருவாதிரை, புனர்பூசம் 1-3)
Image Credit : stockPhoto

மிதுனம் (மிருகசீரிஷம் 3-4, திருவாதிரை, புனர்பூசம் 1-3)

அன்புக்கும் விட்டு கொடுக்கும் மனப்பான்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் மிதுன ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு முடிவெடுக்கும் திறமை அதிகரிக்கும். தொழில் மற்றும் அலுவலகத்தில் உங்கள் யோசனைக்கும் எடுக்கும் முடிவுக்கும் அதிக ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும வியாபாரம் தொடர்பாக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். புதிய முதலீடுகளுக்கும், தொழில் விரிவாக்கத்திற்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சிலருடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எல்லோரிடமும் அன்பாகவும், நிதானமாகவும், பொறுமையாகவும் பேசவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உதவும் சூழல் உருவாகும். மொத்தத்தில் உங்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். நீண்ட நாள் நல்ல ஆசைகளை நிறைவேற்றும்.

  • அதிர்ஷ்டம் தரும் நிறம்: மஞ்சள்
  • அதிர்ஷ்ட எண்: 5
  • லபாம் தரும் முதலீடு: கல்வி, புத்தகங்கள்
  • பரிகாரம்: விஷ்ணுவை பூஜித்து துளசி மாலை சூட்டவும்
  • வணங்க வேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு
412
கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
Image Credit : Facebook

கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)

உண்மையின் வழியில் சென்று சாதனை படைக்க வேண்டும் என் எண்ணத்துடன் இருக்கும் கடக ராசி நேயர்களே, இன்று உங்கள் ஆரோக்கியம் மேம்படும். அடுத்தவர்களுக்கு உதவும் சூழல் உருவாகும். நண்பர்களும், உறவினர்களும் உதவி கேட்டு தொடர்பு கொள்வர். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். வீட்டிற்கு உறவினர்கள் வருகை தந்து சந்தோஷ செய்திகளை அள்ளித் தருவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளுடன் கூடிய சமபள உயர்வு தேடிவரும். குடும்பத்தில் தாய்மாமன் வழியில் நல்ல செய்தியும், நிதி உதவியும், புதிய தொழில் குறித்த செய்தியும் உங்களுக்கு தேடி வரும். முக்கியமான பத்திரங்களை கவனமாக கையாளவும். மொத்தத்தில் இன்றைய நாள் உங்களுக்கு ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளித்தரும்.

  • அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
  • அதிர்ஷ்ட எண்: 2
  • லாபம் தரும் முதலீடு: வீட்டு உபகரணங்கள்
  • பரிகாரம்: அம்மன் கோவிலில் பால் அபிஷேகம் செய்யவும்
  • வணங்க வேண்டிய தெய்வம்: தர்மசாஸ்தா
512
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1)
Image Credit : our own

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1)

மற்றவர்களுக்கு உதவி செய்து அவர்களை நல்வழிப்படுத்தி வழிநடத்தும் சிம்ம ராசி நேயர்களே இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் செயல்பட வேண்டிய நாள். தொழில் மற்றும் அலுவலகத்தில் நீங்கள் எடுத்த முடிவுகள் பிறரின் பாராட்டை பெறும். வணிகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் காணக்கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். நீங்கள் சொல்வதை உங்கள் மனைவி உள்ளிட்ட அனைவரும் கேட்டுநடப்பர். மகளிர் சாமர்த்தியத்தால் குடும்ப நிலை உயர்வடையும். எதிர்பாராத சுபச் செலவுகள் ஏற்படலாம். வாகனம், வீடு உள்ளிட்ட சொத்து வாங்குவது குறித்து சிந்தனை மேலோங்கும். மொத்தத்தில் இன்றைய தினம் உங்களுக்கு நல்ல உறவுகளையும் அவர்களின் முக்கித்துவத்தையும் புரியவைக்கும்.

  • அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
  • அதிர்ஷ்டம் தரும் எண்: 1
  • லாபம் தரும் முதலீடு: வாகனம்
  • பரிகாரம்: சூரியனை சந்திப்பாக நமஸ்காரம் செய்யவும்
  • வணங்க வேண்டிய தெய்வம்: சூரிய பகவன்
612
கன்னி (உத்திரம் 2-4, ஹஸ்தம், சித்திரை 1-2)
Image Credit : our own

கன்னி (உத்திரம் 2-4, ஹஸ்தம், சித்திரை 1-2)

நீதியின் பக்கம் நின்று எதையும் சாதிக்கும் கன்னி ராசி நேயர்களே, அலுவலகத்தில் உங்கள் ஆற்றலை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வேலைபளு அதிகரிக்கும் என்பதால் திட்டமிட்டு செயல்பட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும். கொஞ்சம் முயற்சி செய்தால் சாதனையை எளிதில் அறுவடை செய்வீர்கள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனை மாற்றத்தை உருவாக்கும். பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் உங்களுக்கு அதரவாக செயல்படுவர். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஆனால் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். நீண்டநாள் கடன்கள் வந்து சேரும். பழைய நண்பர்களை சந்தைத்து நேரம் செலவிடுவீர்கள். உறவினர்கள் வருகை வீட்டில் சுப நிகழ்ச்சிக்கு வழிவகுக்கும். திருமண பேச்சு முடிவுக்கு வரும்.

  • அதிர்ஷ்ட நிறம்: நீலம்
  • அதிர்ஷ்ட எண்: 5
  • லாபம் தரும் முதலீடு: தொழில்துறை
  • பரிகாரம்: விநாயகருக்கு வாதியனம் அர்ப்பணிக்கவும்
  • வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகர்
712
துலாம் (சித்திரை 3-4, சுவாதி, விசாகம் 1-3)
Image Credit : Twitter

துலாம் (சித்திரை 3-4, சுவாதி, விசாகம் 1-3)

நல்லவர்களை தேடி தேடி சென்று உதவி செய்யும் அன்புள்ளம் கொண்ட துலாம் ராசி நேயர்களே இன்று உங்களின் நீண்டநாள் சிக்கல்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் உங்களை நிரூபிக்கும் சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்ததை விட பணவரவு பல மடங்கு அதிகரிக்கும். குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் பிறக்கும். திருமண பேச்சுகள் முடிவுக்கு வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவி செய்ய முன்வருவர். ஆலயங்களுக்கு சென்று வரும் சூழல் ஏற்படும். தொலைதூர செய்திகள் சந்தோஷம் தரும். நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் உங்களிடமே திரும்ப வரும். தொழில் தொடர்பான பயணம் வெற்றி தரும். மொத்தத்தில் இன்றைய நாள் உங்களை சுப்பசெலவு செய்ய வைக்கும்.

  • அதிர்ஷ்ட நிறம்: வெள்ளி
  • அதிர்ஷ்ட எண்: 7
  • ஏற்ற முதலீடு: மருத்துவம் / கல்வி
  • பரிகாரம்: சனி பகவானுக்கு எண்ணெய் தீபம் ஏற்றவும்
  • தெய்வம்: சனி பகவன்
812
விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை)
Image Credit : Twitter

விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை)

நேர்மையின் மறு உருவமாக வாழ்ந்து வரும் விருட்சிக ராசி நேயர்களே, இன்று உங்கள் மன நிலையை கட்டுப்படுத்துவது முக்கியம். குடும்பத்தில் உங்கள் வார்த்தைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளது. பணியிடத்தில் நெருக்கடி அதிகரிக்கலாம். பெண்களால் நன்மை உண்டு. பழைய நண்பர்களை தொடர்புகொள்ளம் போது நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பால்ய நண்பர்கள் உதவி கேட்கும சூழல் உருவாகம். பயணங்களில் பாதுகாப்பு தேவை. குல தெய்வ வழிபாடு நிம்மதி தரும். மொத்தத்தில் இன்றைய தினம் வாழ்க்கை பாடத்தை கற்றுத்தரும்.

  • அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
  • அதிர்ஷ்ட எண்: 8
  • ஏற்ற முதலீடு: எலக்ட்ரானிக் சாதனங்கள்
  • பரிகாரம்: திங்கட்கிழமை சிவனுக்கு அர்ச்சனை
  • தெய்வம்: சண்முகப்பெருமான்
912
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1)
Image Credit : Twitter

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1)

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் உண்மை மற்றும் நேர்மையின் பக்கம் நிற்கும் தனுசு ராசி நேயர்களே இன்று உங்களுக்கு சிறந்த முடிவுகளை எடுக்கும் திறமை வெளிப்படும். உங்களின் பழைய அனுபவம் இன்று பெரிதும் பயனளிக்கும். வணிகம் மற்றும் வியாபாரத்தில் நம்பிக்கையான நபர்களால் வளர்ச்சி ஏற்படும். லபாம் மற்றும் வருமானம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் புதிய வழிகாட்டல் தேவைப்படும். வெளிநாட்டு வாய்ப்பு தேடும் முயற்சியில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தம்பதிகள் இடையே நெருக்கம் அதிகரிக்கும், புரிதல் ஏற்படும், விட்டுக்கொடுத்து சென்றால் சந்தோஷம் பல மாதங்களுக்கு நீடிக்கும். மொத்தத்தில் இன்றைய தினம் உங்களுக்கு ஆனந்தத்தை மட்டும் கொடுக்கும் நல்ல நாள்.

  • அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
  • அதிர்ஷ்ட எண்: 3
  • ஏற்ற முதலீடு: ஆன்லைன் பயிற்சிகள்
  • பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு வெள்ளி மலர் அர்ப்பணம்
  • தெய்வம்: துர்கை
1012
மகரம் (உத்திராடம் 2-4, திருவோணம், அவிட்டம் 1-2)
Image Credit : Twitter

மகரம் (உத்திராடம் 2-4, திருவோணம், அவிட்டம் 1-2)

எப்போதும் சுறுசுறுப்பாக செல்படும் மகரராசி நேயர்களே இன்று உங்கள் பணி மேலதிகாரிகள் பாராட்டை பெறும். உற்சாகத்துடனும் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். பண வரவு திருப்தி தரும். சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கேட்கும் முன்பே கிடைக்கும். குடும்ப உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். பயணம் மற்றும வாகன பராமரிப்பில் அதிக கவனம் தேவை. செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. மொத்தத்தில் இன்றைய தினம் உங்களுக்கு அன்பையும், சந்தோஷத்தையும் அள்ளித்தரும்.

  • அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
  • அதிர்ஷ்ட எண்: 4
  • ஏற்ற முதலீடு: சொத்து, நிலம்
  • பரிகாரம்: ஐயனார் கோவிலில் வழிபடவும்
  • வணங்க வேண்டிய தெய்வம்: ஐயனார்
1112
கும்பம் (அவிட்டம் 3-4, சதயம், பூரட்டாதி 1-3)
Image Credit : Twitter

கும்பம் (அவிட்டம் 3-4, சதயம், பூரட்டாதி 1-3)

பெரியோர்களை மதித்து நடக்கும் குணம் கொண்ட கும்பராசி நேயர்களே இன்று உங்கள் யோசனைகள் வெற்றி பெறும். வியாபாரம் மறறும் தொழிலில் திட்டமிட்ட வளர்ச்சி ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புகள் உண்டு. நண்பர்களின் உதவி நிம்மதியை தரும். குடும்பத்தில் சிலர் உங்கள் முடிவுகளை எதிர்த்தாலும் இறுதியில் உங்களை புரிந்துகொள்வர். சொத்து, வீடு வாங்குவதற்கு வழி பிறக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். சுப காரியங்கள் இல்லத்தில் நடைபெறும் சூழல் உருவாகும். தடைப்பட்டு இருந்த திருமண பேச்சுகள் சுபமாக முடியும். மொத்தத்தில் இன்றைய நாள் நல்லதை அள்ளித்தரும் நாள்.

  • அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
  • அதிர்ஷ்ட எண்: 11
  • ஏற்ற முதலீடு: டிஜிட்டல் தொழில்நுட்பம்
  • பரிகாரம்: சிவனுக்கு வில்வ இலை தூவி அபிஷேகம்
  • தெய்வம்: சிவபெருமான்
1212
மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
Image Credit : our own

மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)

சொல்வதை மட்டும் செய்யும் மீன ராசி நேயர்களே, இன்று சிறந்த வாய்ப்புகள் உங்கள் கதவை தட்டும் என்பதால் அதனை அப்படியே பிடித்துக்கொள்ளவும். நீங்கள் நேசிக்கும் நபரிடம் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும். குடும்ப உறவுகளில் அதிலும் தம்பதிகள் இடையே இனிமை காணப்படும். வியாபாரம் செய்வோருக்கு லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் வெற்றி கிடைக்கும். பணக்குழப்பங்கள் முடிவுக்கு வரும். தேடி வரும் சொந்தங்களை வரவேற்று உபசரிக்கவும். மொத்தத்தில் உங்களுக்கு இன்றைய நாள் நல்லவர்களை அடையாளப்படுத்தும்.

  • அதிர்ஷ்ட நிறம்: வான வண்ணம்
  • அதிர்ஷ்ட எண்: 12
  • ஏற்ற முதலீடு: கலைத் துறைகள்
  • பரிகாரம்: விஷ்ணுவுக்கு துளசி தீபம் ஏற்றவும்
  • தெய்வம்: மகா விஷ்ணு

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்
ஆன்மீகம்
 
30th T20 • WBBLT20
Live
SS-WSS-W
-
PS-WPS-W
(2.3 ov)13/0
SS-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(112.3 ov)414/3
Day 3 - Session 3
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
32nd T20 • WBBLT20
MS-WMS-W
Sun, 22 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Baba Vanga Predictions: 2026 இறுதிக்குள் 4 ராசிகளுக்கு சோதனை.. 5 ராசிகளுக்கு ஜாக்பாட்! பாபா வங்காவின் பரபரப்பு கணிப்பு!
Recommended image2
Mercury Transit: நவம்பர் 25 புதன் பெயர்ச்சியால் ஜாக்பாட்.! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண மழை! உங்க ராசி இருக்கா?
Recommended image3
Zodiac Signs: குரு கடாட்சம் பெறப்போகும் 4 ராசிகள், 8 நட்சத்திரங்கள்! அடுத்த 30 நாட்களில் பணம், பதவி, புகழ் தேடி வருமா?
Related Stories
Recommended image1
Zodiac Sign: நீங்கள் இந்த ராசியா.?! உங்கள் கணவருக்கு புகழ், பதவி தேடி வரும்.! ராஜயோகம் கூடி வரும்.! தெரியாத ஜோதிட ரகசியம்.!
Recommended image2
Horoscope: நீங்க சிம்மராசியா.? புகழ், பொருள் குவியும்.! பெரிய பதவி நிச்சயம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved